இங்குக்கூறிய சரியையின் இலக்கணத்தை "நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப், புலவர்தன்முன் னலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித், தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும், அலைபுனல்சேர் செஞ்சடையெம் மாதீ யென்று மாரூரா வென்றென்றே யலறா நில்லே" (திருத்தாண்டகம்) எனவும், "தாதமார்க் கஞ்சாற்றிற் சங்கரன்றன் கோயிற்றலமலகிட்டிலகுதிரு மெழுக்குஞ் சாத்திப், போதுகளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடித், தீதிறிரு விளக்கிட்டுத திருநந்த வனமுஞ் செய்துதிரு வேடங்கண் டாலடியேன் செய்வ, தியாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியு மியற்றுவ; திச் சரியைசெய்வோ ரீசனுல கிருப்பர்" (சித்தியார் - 8 - 19) எனவும் வரும் ஞானத்திருவாக்குக்கள் விரிப்பன. "புறத்தொழின் மாத்திரையானே உருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு சரியையெனப்படும்" என்பது சிவஞான முனிவரது பொழிப்புரை. திருவாதவூரர் புராணத்தினுள்ளும் "ஆவ லாலெமக் காமலர் மரங்களாக்க லம்மலர் பறித்தலம் மலராற், றாவி லாவகை தார்பல சமைத்த றணப்பி லெம்புகழ் சாற்றலன் புடனா, மேவு மாலய மலகிடன் மெழுகல் விளக்க னல்விளக் கிடுதலெம் மடியார்க், கேவலானவை செய்தலிச் சரியை யியற்ற வல்லவர்க் கெம்முல களிப்போம்" (திருப்பெருந் - சருக்கம் - 69) என்று இதன் இயல்பை வாதவூரடிகளுக்கு இறைவர் உபதேசித்த முறையும் காண்க. 44 1310. | நாளுமிகும் பணிசெய்து குறைந்தடையு நன்னாளிற் கேளுறுமன் புறவொழுகுங் கேண்மையினார் பின்பிறந்தார் கோளுறுதீ வினைமுந்தப் பரசமயங் குறித்ததற்கு மூளுமனக் கவலையினான் முற்றவருந் துயருழந்து, |
45 1311. | தூண்டுதவ விளக்கனையார் சுடரொளியைத் தொழு"தென்னை யாண்டருளு நீராகி லடியேன்பின் வந்தவனை யீண்டுவினைப் பரசமயக் குழிநின்று மெடுத்தாள வேண்டு"மெனப் பலமுறையும் விண்ணப்பஞ் செய்தனரால். |
46 1310. (இ-ள்.) வெளிப்படை. கேளுறும் அன்பு பெருக ஒழுகும் கேண்மையுடைய திலகவதியார், நாளும் இவ்வாறு மிக்க திருப்பணிகளைச் செய்து குறைந்து அடைந்து ஒழுகி வருகின்று நன்னாள்களில், தமது பின் பிறந்தவராகிய மருணீக்கியார், கோளின்கட் பட்ட தீவினை முந்துதலினால் பரசமயங் குறித்துப் புகுந்ததற்காக மூளும் மனக் கவலையினால் மிக்க அரிய துன்பத்தில் உழந்து, 45 1311. (இ-ள்.) வெளிப்படை. தூண்டும் தவவிளக்குப் போல்வாராகிய அவ்வம்மையார், சுடரொளியாகும் திருவீரட்டானேசுவரரைத் தொழுது, "என்னைத் தேவரீர் ஆட்கொண்டருளுவீராகில், அடியேன் பின் பிறந்தவனைச், சேர்கின்ற தீவினையையுடைய பரசமயமாகிய படுகுழியினின்றும் எழுந்தருள வேண்டும்" என்று பலமுறையும் விண்ணப்பம் செய்தனர். 46 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1310. (வி-ரை.) நாளும் - நாணாளும். ஒவ்வொரு நாளும். "நாணாளும் பரவுவார் பிணிதீர்க்கு நலம்போற்றி" (திருஞான - புரா. 412). |