பக்கம் எண் :


578திருத்தொண்டர் புராணம்

 

திருவாலங்காடு

I திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

ஒன்றா வுலகனைத்து மானார் தாமே யூழிதோ றூழி யுயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கு நிமிர்ந்தார் தாமே நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே கோலப் பழனை யுடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

1

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே யந்தியுஞ் சந்தியு மானார் தாமே
சொல்லும் பொருளெலா மானார் தாமே தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே பழனை பதியா வுடையார் தாமே
செல்லு நெறிகாட்ட வல்லார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

5

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- பழனை பதியாவுடையார் திருவாலங்காடுறையுஞ் செல்வர் தாமே, ஒன்றா வுலகனைத்துமானார், ஊழிதோறூழி யுயர்ந்தார், சென்றாடு தீர்த்தங்களானார், சரணென்றிருப்பார்கட் கன்பர், பூவுற்ற நாற்றமாய் நின்றார், பாவுற்றபாடலுகப்பார், சொல்லும் பொருளெலா மானார், தோத்திரமுஞ் சாத்திரமுமானார், ஐயாறு மாரூரு மானைக்காவு மம்பலமுங் கோயிலாக் கொண்டார், செய்யாள் வழிபட நின்றார், தீராத வல்வினை நோய் தீர்ப்பார் என்றிவை முதலிய அளவில் பெருமையுடையார்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஒன்று உலகனைத்தும் ஆனார் - ஊழியில் உலகமெல்லாவற்றையும் தம்முள் ஒடுக்கித், தாமொருவரேயாய் நின்று, பின், அவை மீள வருமாறு ஆக்குபவர். மாயையொன்றி நின்று உலகனைத்து மாக்குபவர் என்றலுமாம். ஒன்று - தோய்ந்தும் தோயாத என்றலுமாம். ஊழிதோ றூழி உயர்ந்தார் - காலங் கடந்தவர். நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் - எங்கும் நிறைந்தும் கடந்தும் நின்றவர். "நின்ற திருத்தாண்டகம்." தீர்த்தங்கள் ஆனார் - தீர்த்தம் - தூய்மை செய்வது. "கோதா விரியாகி...." (தாண்). "கங்கை யாடிலென்" (குறுந்). -(3) பூவுற்ற நாற்றமாய் - பூங்குளால் வாசமாய் மன்னி நின்ற" (தாண்). உலகெலாம் அவையேயாய் நிற்றல்.- (4) அல்லும்...ஆனார் - கால தத்துவமாய் நிற்றல் - சொல்லும் அதன் பொருளும் ஆகியவண்ணம். தோத்திரமும் சாத்திரமும் - தேவார முதலிய அருட்பாட்டுக்களும் ஞானசாத்திரங்களும்; வேதங்களும் - ஆகமங்களும்; இவற்றால் செல்லு நெறிகாட்ட வல்லார் என்பது குறிப்பு. -(7) அம்பலம் - கோயில்; தில்லை மன்று. செய்யாள் - திருமகள். இலக்குமி வழிபட்டது தலவரலாறு போலும். -(8) மிக்கோர்கள் - குணமென்னுங் குன்றேறி நின்ற ஞானிகள். காலங்கள் ஊழி கடந்தார் - இப்பதிகத்துட் பலவிடத்தும் (1-5) இக்கருத்தினாற் போற்றியது இறைவரது ஆடல் தத்துவாதீதமாய் என்ற முள்ளது என்று குறித்தற்கு. -(9) கயிலை மலையையுடையார் - கயிலையிற்சென்று வழிபட்ட காரைக்காலம்மையார், வரங்கேட்டுத், திருவருள் வழியே இங்குப் போந்து, நடங்கண்டு, ஆனந்தமுற் றெழுந்தருளியிருத்தல் குறிப்புப் போலும். தீராத......தீர்ப்பர் - நோய் - ஆணவம். தீராத - வேறொவ்வாற்றலும் தீர்க்க முடியாத; வலிகெடுதலன்றி அழிவில்லாத என்றலுமாம். சீலத்தார் - முனிவர்கள். "மிக்கோர்" (8).

ll திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலுங்