பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்579

 

கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்
அள்ளம் பழனை மேய் வாலங்காட்டி டடிக ளாரே.

1

கூடினா ருமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையார் போலும்
பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண வாலங்காட் டடிக ளாரே.

8

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- தீர்த்தமாம் பழனைமேய ஆலங்காட் டடிகளாரே, வெள்ள நீர்ச் சடையார்; விரும்புவார்க் கெளியர்; உருகுவார்க் கன்பர்; கள்ளமெல்லாங் கரிசறுத்திடுவார்; பிறவி தீர்ப்பர்; காளிகாண ஆடினார் என்றிவை முதலிய பல பெருமைகளாலும் போற்றப்படுபவர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வெள்ளநீர் - கங்கை; கள்ளம் - ஆணவம்; கரிசு - துன்பம்; குற்றம். -(4) காறிடு - கொல்லும். சுடலை - ஊழியில் உலகழிந்த நிலை. -(5) வேடராய் வந்து அருச்சுனருக்குப் பாசுபதம் அருளிய சரிதம் குறித்தது இப்பாட்டு. ஆவநாழி - அம்பறாத்தூணி. அம்பு - பாசுபதாத்திரம். -(6) வீட்டினார் - அழிக்கப்பட்ட உலகங்களின். -(7) கோள் - பாசக்கட்டு. -(8) உமை - கங்கை - காளி என்ற மூன்று சத்திகளையுங் குறித்தது காண்க. ஆடினார்...அடிகளாரே - தலசரிதம். இத்தலச் சிறப்பாகிய ஊர்த்துவ நடனம் காளியின் பொருட்டு ஆடப்பட்டது என்பது வதலாறு. -99) ஒற்றரைச் சொற்கள் - வெறுஞ் சொற்கள். பயனில்லாத சொற்கள்.

தலவிசேடம் :- பழையனூர்த் திருவாங்காடு - தொண்டை நாட்டின் 16-வது தலம். ஆலமரம் காடாயிருந்து அதில் இறைவர் வெளிப்பட்டருளி நடஞ்செய்தமையால் இப்பெயர் பெற்றது. வடாரணியம் என்பர் வடவர். கூத்தப் பெருமான் நடஞ்செய்யும் ஐம்பெருமன்றங்களுள் இஃது இரத்தினசபை எனப்படும். காளியின் பொருட்டு இறைவர் ஊர்த்துவ தாண்டவம் என்னும் திருவடி மேற்றூக்கிய அருட்கூத்துச் செய்த தலம். பதிகங்கள் பார்க்க. காாக்கோடகன் - முஞ்சிகேசர் என்ற பெயருடன் முறையே பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்கள் திருநடனங்கண்ட தலம். திருக்கயிலையில் இறைவர் அருளியவாறே, காரைக்காலம்மையார் இங்குத் தலையால்நடந்து போந்து, திருநடனங்கண்டு, திருவடிக்கீழ்நின்று ஆடியும் பாடியும் ஆனந்தம் சேர்ந் தெப்போதும் எழுந்தருளியிருப்பர். அவர்தம் புராணம் பார்க்க. அம்மையார் தலையாலே நடந்த தலமென்று, ஆளுடைய பிள்ளையார் இதனை மிதித்தற்கஞ்சிப், புறத்திற்றங்கித், துயிலும் போது இறைவர் நினைப்பிக்க எழுந்து "துஞ்ச வருவாரும்" எனத் திருப்பதிகம் பாடியருளிய தலம். ஆளுடைய நம்பிகளும் தூரத்தேயிருந்து பாடியருளினர். நீலியின் வஞ்சனையால் உயிர் துறந்த வணிகனுக்குத் தாங்கள் கூறியசொற் பிழையாது பழையனூர் வேளாளர் எழுபது பேரும் தீயில் மூழ்கித் தமது சொல்லின் உண்மை தம் உயிரினும் சிறந்தது எனக் காட்டிய தலம். இப்பெருமை ஆளுடைய பிள்ளையார் பதிகத்துப் பாரட்டப்பட்டது. திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணமும் (1080), பிறவும் பார்க்க. பழையனூரோடு சேர்த்து இத்தலம் வழங்கப்படும். பதிகக்குறிப்புப் பார்க்க. மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது. சுவாமி - ஊர்த்துவ தாண்டவர்; அம்மை - வண்டார் குழலியம்மை; தீர்த்தம் - முத்தி - தீர்த்தம்; மரம் - ஆல் - பலா ; மன்றம் - இரத்தினசபை. பதிகம் 4

இது M. S. M. பாதையில திருவாலங்காடு என்ற நிலையத்தினின்றும் வட கிழக்கே கற்சாலை வழி மூன்று நாழிகையளவில் அடையத் தக்கது.