பக்கம் எண் :


58திருத்தொண்டர் புராணம்

 

உழந்து - விண்ணப்பம் செய்தனர் - என்று மேல்வரும் பாட்டுடன் முடிந்தது.

நாளுமவர் - முளவரும் - தீவினையுந்த - தீவினைமுகந்த - துயருழந்தார் - என்பனவும் பாடங்கள்.

45

1311. (வி-ரை.) தூண்டுதவ விளக்கு அனையார் - திலகவதியார். தூண்டு தவம் - உலகச் சார்பினை விடுத்துச சிவநல்வினையாகிய சிவச்சார்பினையே அடையும்படி தூண்டும் தவம். இங்குத் தம்மையே தூண்டிக் கொண்டதன்றித் தம்பியாரையும் அவர்மூலம் உலகத்தாரையும் தூண்டும் தவம் என்ற குறிப்பும் காண்க. தவம் பொருந்திய விளக்குப்போன்றவர். விளக்கம் செய்யும் வினைபற்றியெழுந்த உவமம். தூண்டிய விளக்கு ஒளிவிட்டு எரிதல்போலப் பெருந்தவமுடையார் என்பதுமாம்.

சுடரொளி - திருவதிகை வீரட்டானேசுவரர். அவரது விளக்கமாகிய ஒளியானது புரக்கண்ணாலும் காணவுள்ளது. "சோதியே சுடரே சூழொளி விளக்கே" என்பது திருவாசகம்.

ஆண்டு அருளும் நீர் ஆகில் - ஆளாக ஏற்றுக்கொண்டு அருளும் பிரானீர் நீராகில். அது வுண்மை யெனில். அருளினீராகல் என்று பாடங்கொள்வாரு முண்டு.

எடுத்து ஆள - "என்னை யிப்பவத்திற் சேரா வகை எடுத்து" என்ற சித்தியார் காண்க.

பலமுறையும் - பல நாள்களிலும். ஆல் உறுதிப் பொருள் குறிப்பிற்றந்து நிற்பதோர் அசைச்சொல்.

ஈண்டுவினைப் பாசமயக்குழி - ஒரு உயிர், இவ்வுலகில் மனிதப்பிறவி எடுத்தல் அரிது; அதுவும் அழியாது நின்று சைவத் திறத்தில் அடைதல் மிக அரிது; இவ்வாறு அரிய பேறு பெற்றும் சமணத்திற் சார்ந்து வீழ்ந்ததனால் ஈண்டுவினை என்றும், குழி என்றும் கூறினார். "நரர்பயில் தேயந் தன்னில்" என்றும், "கருவினி, லழிவதாயும்" என்றும் வரும் ஞானசாத்திரமும், "யானை முதலா ஏறும்பீறாய ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்......." என்றற்றொடக்கத்துத் திருவாசகமும் கருதுக.

எடுத்தருள - என்பதும் பாடம்.

46

1312.

தவமென்று பாயிடுக்கித் தலைபறிந்து நின்றுண்ணும்
அவமொன்று நெறிவீழ்வாள் வீழாமே யருளு"மெனச்
சிவமொன்று நெறிநின்ற திலகவதியார் பரவப்
பவமொன்றும் வினைதீர்ப்பார் திருவுள்ளம் பற்றுவார்,

47

1313.

 மன்னுதபோ தனியார்க்குக் கனவின்கண் மழவிடையார்
"உன்னுடைய மனக்கவலை பொழிநீ;யுன் னுடன்பிறந்தான்
 முன்னமே முனியாகி யெனையடையத் தவமுயன்றான்
 அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வ"மெனவருளி,

48

1314.

பண்டுபுரி நற்றவத்துப் பழுதினள விறைவழுவுந்
தொண்டரையா ளத்தொடங்குஞ் சூலைவே தனைதன்னைக்
கண்டருநெற் றிபரருளக், கடுங்கனல்போ லடுங்கொடிய
மண்டுபெருஞ் சூலைபவர் வயிற்றினிடைப் புக்கதால்.

49

1312. (இ-ள்.) வெளிப்படை. "தவமென்று கொண்டு பாயினை உடுத்தயும், தலைமயிரைப்பறித்தும், நின்றபடியே உணவு உண்டும் உழலும்; அவம் பொருந்திய நெறியாகிய சமணத்தில் வீழ்வாணை அவ்வாறு வீழாமே அருளும்"