தாழ்வரை - மலையின் அடிவாரம். வரைத்தாழ் என்பது தாழ்வரை என நின்றது; முன்றில் என்பதுபோல. தாழ்வரையில்.....பணிந்து - மலையை வணங்கி. வலங் கொண்டு - மலையின்மேல் திருக்கோயிலை வலம் வந்து. வணங்குவார் - இறைஞ்சி - என வரும் பாட்டுடன் கூட்டுக. 344 1610.(வி-ரை.) வெண் குழையான் - மலைக்கொழுந்து - மொழிமூலம் - என மூன்று தன்மைகளாற் கூறியதனால் உருவம், அருவுருவம், அருவம் என்ற மூன்று திருமேனிகளையும் குறித்தபடி. "மாகமார் திருக்கா ளத்தி மலையெழு கொழுந்தா யுள்ள, ஏகநாயகர்" (754). காதல்புரி மனம் களிப்பக் கண் களிப்ப - "என் கண்ணுளான்" என்ற தேவாரத்துக்கு ஆசிரியர் கண்ட விரிவுரை. காதல் மிக, எண்ணிய மனம் களித்தது; மனங்களிப்பக் கண்ட கண்கள் களித்தன; ஆதலின் என் கண்ணுளான் என்ற கருத்துடன் பதிகம் பாடினார் என்பது. கண் - கண்ட கண்ணும் மனமாகிய உள்ளகமும் குறித்தல் காண்க. "கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சியான்", "காணப்பட்ட" என்ற தேவாரக் குறிப்புக்களும் கருதுக. விழுந்து - இறைஞ்சி - எழுந்து - பரவசமாய் - நவின்றார் - அன்பு மேலீட்டின் மெய்ப்பாடுகன். நாதனை - நவின்றார் - என்க. நவிலுதல் - போற்றுதல். என் கண்ணுளான்; திருத்தாண்டகப் பதிகத்தின் கருத்தும் மருடமுமாம். நவின்றார் - நவின்றாராகி; முற்றெச்சம். நவின்றார் - இறைஞ்சித் - தாழ்ந்து - போந்து - அணைந்தார் - என்று வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. ஆளுடைய பிள்ளையார் இங்கு வழிபட்ட வரலாறு கூறும் பகுதிக்கேற்ப, இவ்வாறு நவின்றார் என்பதனை முற்றெச்சமாகக் கொண்டு உரைத்து மேலும் கூட்டி முடிக்கப்பட்டது. (திருஞான - புரா - பார்க்க). வினைமுற்றாகவே கொண்டுரைப்பினுமிழுக்காகாது. 345 திருக்காளத்தி திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண் வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லான் மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண் மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப் பொற்றூண்கான் மாமணிநற் குன்றொப் பான்காண் பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட கணநாதன் காணவனென் கண்ணு ளானே. |
1 | மனத்தகத்தான் றலைமேலான் வாக்கி னுள்ளான் வாயாரத் தன்னடியே பாடுத் தொண்டர் இனத்தகந்தா னிமையவர்தஞ் சிரத்தின் மேலா னேழண்டத் தப்பாலா னிப்பாற் செம்பொன் புனத்தகத்தா னறுங்கொன்றைப் போதி னுள்ளான் பொருப்பிடையா னெருப்பிடையான் காற்றி னுள்ளான் கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான் காளத்தி யானவனென் கண்ணுளானே. |
5 |