| தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண் டிருவேகம் பத்தான்காண் டேனார்ந் துக்க ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்கா ணம்பன்காண் ஞானத் தொளியா னான்காண் வானப்பே ரூரு மறிய வோடி மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக் கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண் காளத்தி யானவனென் கண்ணு ளானே. |
9 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- விற்றூணொன்றில்லாத நல் கூர்ந்தான், பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற பொற்றூண், ஞானப் பெருங்கடற்கோர் நாவாயன்ன பூரணன், மனத்தகத்தான், தலைமேலான், வாக்கினுள்ளான், தொண்டரினத்தகத்தான், எல்லாமுன் தோன்றாமே தோன்றினான், கல்லாடை மேற்கொண்ட காபாலி, தேனார்ந்துக்க ஞானப் பூங்கோதையாள் பாகத்தான், குறையுடையார் குற்றேவல் கொள்வான், கண்ணாகக் காண்பார்க்கோர் காட்சியான், என்வினையை இடிப்பான், தீவினைக டீர்த்திடுமென் சிந்தையான் என்றிவ்வாறு பல தன்மைகளாலு மறியப்படும் காளத்தி காணப்பட்ட கணநாதன் என் கண்ணுளான். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) விற்றூண்.....நல்கூர்ந்தான் - விற்றுண்ணுதற்குரிய உடைமை ஒன்று மில்லாத தரித்திரமுடையான. கச்சிக்கம்பன் - கச்சித்திருவேகம்பன் என்ற தன்மைபற்றி இப்பதிகத்துப் பல பாட்டுக்களிலும் (2-4-6-7-9) போற்றினார். தொண்டை நாட்டு யாத்திரையில் திருவேகம்பத்தை வழிபட்ட காட்சியின் சிறப்பு நாயனார் திருமனத்தினுள் ஊன்றியிருந்த நிலைக்குறிப்பு. பிச்சை......சதுரன் - நல்கூர்ந்தான் என்றதனைத் தொடர்ந்து கூறியபடி. சதுரன் - வல்லமையுடையான். கற்றூண் - உலகமனைத்தும் தாங்கும் சத்தி இவ்வா றுபசரிக்கப்பட்டது. கணநாதன் - காளத்திநாதர் பெயர். "கணநாதனெங் காளத்தியாய்" (நம்பி - தேவா). -(2) இடிப்பான் - அழிப்பவன். வலிமை போக்குபவன். ஐம்புரியும்....படிப்பான் - பிரமன். ஐம்புரி - பஞ்சாங்கம். திதி - வாரம் - நட்சத்திரம் - யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களைக் காட்டுவது. "ஐந்திய லங்கஞ் சூரற் கயன்புகன் றுழல்வான்" (கந்தபு - அமரர்சிறைபுகுபட - 133). ஐம்புரியும் வழுவா வண்ணம் படித்தான் - என்றது உலகத்தை நாள் முதலிய வற்றால் நடைபெறுமாறு படைத்தல். -(3) ஞான.....நாவாய் - ஞானமாகிய கடலின் கரைகாணச் செய்பவன். நாவாய் - தோணி; கப்பல். -(4) சுறாவேந்தன் - மீனக்கொடியுடைய மன்மதன். ஏவலம் - அம்பின் வன்மை. ஏ - அம்பு. -(5) இத்திருப்பாட்டு மிக உயர்ந்த தத்துவ உண்மைகளை எடுத்து ஓதுவது. கயிலாயத்துச்சி உள்ளான் - காளத்தியான் - காளத்தி கயிலாயமே என்ற உண்மைகுறிப்பு. -(6) பூரித்தான் - நிறைவித்தான். எல்லாம்............தோன்றினான் - அநாதியா யுள்ளவன்; கல்லாடை - காவியுடை. துறவிகள் உடுப்பது. காபாலி - கபாலமேந்திப்பலி கொள்பவன். "காபாலி" (8), (10). -(9) தேனார்ந்துக்க....பாகத்தான் - தல அம்மையார் பெயர். அம்மையார் கூந்தல் தேன் மொய்க்கும்படி இயற்கை மணமுடையது என்பது குறிப்பு. திருவிளையாடற் புராணத்துள், தருமிக்குப் பொற்கிழி யளித்தது, கீரனை மடுவில் வீட்டியது முதலிய வரலாறுகள் இங்கு நினைவு கூர்தற்பாலன. -(10) குறையுடையார் - குறைந்து வந்தடைந்தவர்கள். (11) கண்ணார.......காட்சியான் - கண்ணப்ப நாயனார் சரிதக் குறிப்பு. "நேர் பெற |