நோக்கி நின்றார்" (777), "ஏகநாயகரைக் கண்டார்" (754). "கண்டார் காதலிக்கும்" (நம்பி தேவா). தலவிசேடம் :- கண்ணப்ப நாயனார் புராணத்திறுதியில் உரைக்கப்பட்டது. (பக்கம் 1060 - 1061). 1611.(வி-ரை.) மலைக் சிகரச் சிகாமணி - மலையுச்சியில் சிகாமணிபோல வெளிப்பட விளங்குபவர். "மலையெழு கொழுந்தா யுள்ள, வேக நாயகர்" (754). மலைச் சிகரம் - மலையின்மேல் சிகார வாச்சியாராகிய என்றதும் குறிப்பு. "திருத்தோணிச் சிகரம்பார்த், தம்மேயப் பாவென்றென் றழுதருளி யழைத்தருள" (திருஞான - புரா - 63) என்னும் குறிப்பும் இங்கு நினைவு கூர்க. மருங்கு உற முன்னே நிற்கும் - "என் வலத்தில் மாறிலாய் நிற்க" என்று இறைவர் ஆணையிட்டபடி அன்று முதல் இறைவரது பக்கத்துப் பொருந்த முன்பு நின்றருள்வர் கண்ணப்ப நாயனார். சிலைத் தடக்கை - வில் ஏந்திய அந்தக் கோலத்துடன். அருச்சுனராகிய முன் பிறவியில் இறைவர் தந்த பாசுபதமே இப்பிறவியில் அவர் கையில் நீங்காது நின்று அமுத மூட்டியது; அது அவர் திருவருணிலை பெற்ற ஞான்றும் அவர் கையில் இருந்தது; அதனைக் கொண்ட அந்நிலையே அவர் எழுந்தருளியுள்ளார் என்பதெல்லாம் குறிக்க இவ்வாறு கூறினார். 681-பார்க்க. கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி - இறைவர் திருமுன்பு இறைஞ்சி எழுந்து போற்றித் தாண்டக நவின்ற நாயனார் அவ்வழிபாடு முற்றிய நிலையில் செய்யும் வணக்கத்தைக் கண்ணப்ப நாயனார் திருமுன்பு செய்து, வழிபாட்டை, நிறைவாக்கினார் என்பது காணத்தக்கது. விழுந்திறைஞ்சி - (1610) என்றது இறைவர் திருமுன்பு நிகழ்ந்ததனையும், இங்குச் சேர்ந்திறைஞ்சி - (1611) என்றது கண்ணப்பர் திருமுன்பு நிகழ்ந்ததனையும் குறித்தன. "வீழ்ந்தெழுவார் - கும்பிட்ட பயன் காண்பார்போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்" (திருஞான - புரா - 1022) என்று ஆளுடையபிள்ளையார் இங்கு வழிபட்டது இவ்வாறே நிகழ்வதும் கருதுக. அலைத்து விழும் - அலைபோல மேன்மேற் பெருகி விழும். புறம் போந்து அணைந்தார் - திருக்கோயிற் புறத்தே சேர்ந்து திருமடத்தில் அணைந்தனர். பரந்திழிய - என்பதும் பாடம். 346 1612. | சேணிலவு திருமலையிற் றிருப்பணியா யினசெய்து தாணுவினை யம்மலைமேற் றாள்பணிந்த குறிப்பினாற் பேணுதிருக் கயிலைமலை வீற்றிருந்த பெருங்கோலங் காணுமது காதலித்தார் கலைவாய்மைக் காவலனார். |
347 (இ-ள்.) வெளிப்படை. மிகவுயர்ாந்த அத்திருமலையில் திருப்பணிகளைச் செய்து இறைவரை அம்மலையின் மேல் வழிபட்ட குறிப்பின் காரணமாகப், பேணும் திருக்கயிலை மலையில் இறைவர் எழுந்தருளிய பெருங் கோலத்தைக் காணும் அதனைக் கலை வாய்மை வேந்தராகிய நாயனார் காதலித்தனர். (வி-ரை.) சேண் நிலவு திருமலை - உயர்ந்து நீண்டு விளங்கும் திருமலை. சேணும் - என்று சிறப்பும்மை தொக்கதாகக் கொண்டு, நெடுந்தூரத்தினும், நிலவு - விளங்கும் என்றுரைப்பது மொன்று. திருமலை - இது கயிலையே யாதலின், அதனைப் போலவே திருமலை என்று அடைமொழி கொடாது கூறினார். "திருமலைச் சிறப்பு" என்றது காண்க. |