பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்59

 

என்று, சிவத்தைப் பொருந்தும் நெறியில் நின்ற திலகவதியம்மையார் பரவினாராகப், பிறவியிற் பொருந்தச் செய்யும் வினைகளைத் தீர்ப்பாராகிய இறைவர் திருவுள்ளம் பற்றுவாராகிய,

47

1313. (இ-ள்.) வெளிப்படை. நிலைபெற்ற தபோதனியார்க்குக் கனவினிடத்தே எழுந்தருளி, இளமையாகிய இடபத்தையுடைய சிவபெருமான் "நீ உன்னுடைய மனக்கவலையினை ஒழிவாயாக! உனது உடன் பிறந்தானாகிய தம்பி முன்னமே, ஒரு முனிவனாக இருந்து எம்மை அடைவதற்குத் தவஞ் செய்தனன்; இனி அவனைக் சூலை நோய்தந்து ஆட்கொள்வோம்" என்று அருளிச்செய்து,

48

1314. (இ-ள்.) வெளிப்படை. முன்னைப் பிறவியிற் செய்த நல்ல தவத்தில் சிறிதளவு பிழைசெய்த தொண்டராகிய மருணீக்கியாரை ஆட்கொள்ளத் தொடங்கும் சூலை நோயினை நெற்றிக் கண்ணர் அருளினாராகக், கடியதீயைப் போலச் சுடுகின்ற அந்த மிகப்பெருஞ் சூலைநோய் அவருடைய வயிற்றினுட் புகுந்தது.

47

இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.

1312. (வி-ரை.) பாயிடுக்குதல் - தலை பார்த்தல் - நின்றுண்ணுதல் - இவை முதலியவை சமணர்கள் தவமென்று மேற்கொண்ட ஒழுக்கங்கள். இடுக்குதல் - இடையை நெருங்க உடுத்தல். தலைபறித்தல் - சமண குருவாக ஒருவனை ஆக்கும்போது "இப் துக் - பிற் சுக் (இப்போது துக்கம் - பின்பு சுகம்) என்ற சொற்களை மந்திரமாகக் கூறிக்கொண்டு குருமார் பலரும் அவனைச்சூழ்ந்து அவனது தலையின் மயிர்களை ஒவ்வொன்றாகப் பறித்தல் அவர்களுள் ஒரு வழக்கென்ப. "மயிர்பறிப்பச் சுகமென்னும்" என்பது முதலாகப் பல இடங்களிலும் நமது ஆசாரியர்கள் திருவாக்கில் இதனைச் சுட்டிக் கூறியிருத்தல் காண்க. "மணித்துணரனையதங் குஞ்சி வண்மையாற் பணித்தனர் பறித்தலில்" என்பது சீவக சிந்தாமணி - 2820. நின்று உண்ணுதல் - நின்றபடியே கையிற்கவளங் கொண்டு உண்ணுதலும் சமண குருமார்களுள் ஒரு வழக்கு. நின்றுண்பா ரெம்மை நினையச் சொன்ன வாசகமெல் லாமறந்தோம்" (மறுமா - தாண் - 8) முதலியவை காண்க. இவை செய்யலாகாதவை என்று நமது அறநூல்களுள் விலக்கப்பட்டன. அவமொன்றுநெறி என்ற குறிப்புமது. தவமென்று அவர் கொண்டு ஒழுகினும் உண்மையில் அவை அவத்துக் கேதுவாவன.

அவை அவமாய்க் கழிகின்ற நிலையை ஞானசாத்திரங்கள் பரபக்க மறுப்பில் விரிவாய்க் கூறின; விரிவு ஆண்டுக் கண்டுகொள்க. இவை போலப் பின் வருவனவும் பரசமயதூடணை எனப்படா; பின் என்னையோ? எனின், அப் புறச் சமயிகள் பொய்யை மெய்யென்று கருதி உழல்வதுகண்டு இரங்குதலும், அவர்கள் சைவத்துக்குச் செய்த கேடுகளால் உய்தியில் குற்றமாய்ச் சிவாபராதத்துக் குள்ளாதல் கண்டு பரிவுறுதலும், அவரது அவநிலை கண்டு ஏமாந்து பிறர் அதனுட்புக்குக் கேட்டையாது எச்சரித்தலுமாம் என்க.

அவம் ஒன்று நெறி - அவர் செய்வன யாவும் அவர்களைச் சிவத்தின்பால் ஒன்றச் செய்யாது அவத்தினையே ஒன்றச் செய்வன (ஒன்றுதல் - பொருந்துதல்) என்க. சிவமொன்று நெறி என்றதும் இக்கருத்தை வற்புறுத்தியது.

வீழ்வான் - மிக ஆழமாயினமையின் முடிவின்றி வீழ்ந்துகொண்டே யிருக்கிற படியைக் குறித்தது.

சிவமொன்று நெறி - இங்குச் சரியை குறித்தது. முன் 1309ல் உரைக்கப்பட்டன.