எண்ணிய வழிபாடென்பதும், பின்னர்க் கயிலைக் காட்சி கண்டு வழிபட்டமை திருவையாற்றில் நிகழ்வதாம் என்பதும் கருதுக. பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து - வியந்தும், பின் பற்றியும் போந்த அடியவர்களும், பிறரும் வாரணாசியில் தங்க விடப்பட்டனர். ஒழித்து என்னாது ஒழிந்து என்றமையால் அவர்கள் தாமே பின்பற்றி மேற்செல்ல மாட்டாமையின் ஒழந்தனர் என்றது குறிப்பு. அன்பர்கள் அங்கங்குப் பின் பற்றுவதும், நின்றொழிவதுமாயின ரன்றி, நாயனார் யாண்டும் பரிசனங்களை உடன் கொள்ளாத துறவு நிலையினர் என்பதும் இங்குக் கருதற்பாலது. கங்கை பெயர்ந்து போய் - கங்கை பெயர்தலாவது கங்கைக்கரை சூழ்ந்த நாட்டின் பகுதியைக் கடந்து செல்லுதல். நாவின் மன்னவர் என்ற எழுவாய் இங்கு வினைமுடிபு கொள்ள வைத்தமையாலும், இதுவரை மக்கள் நெருங்கும் நாட்டின் பகுதியிற் பலர் உடன் அணையப் போந்த நாயனார், இனி மக்கள் வாசமில்லாத காடும் மலையும் தனிச்செல்லத் தொடங்குகின்றமையாலும், இதுவரையும் போந்த நான்கு பாட்டுக்களையும் அவரது கயிலை வழிச் செலவில் ஒரு பகுதியாக வைத்து ஒரு முடிபாக்கி உரைக்கப்பட்டது. மேல்வரும் பகுதிகளின் பல முடிபுகளும் இவ்வாறே வகுத்துக் கண்டுகொள்க. கங்கை கடந்து - காதலின் - என்பனவும் பாடங்கள். 353 கங்கைக் கரையினின்று கற்சுரம் தனியாக நடந்து சென்றது கற்சுரம் தனி நடத்தல் 1619. | மாக மீது வளர்ந்த கானக மாகி யெங்கு மனித்தராற் போக லாநெறி யன்றி யும்புரி கின்ற காதல் பொலிந்தெழச் சாக மூலப லங்க டுய்ப்பன வுந்த விரிந்து தனித்துநேர் ஏகி னாரிர வும்பெ ருங்கயி லைக்கு லக்கிரி யெய்துவார்; | 354 இரவு 1620. | ஆய வாரிரு ளின்க ணேகுமவ் வன்பர் தம்மை யணைந்துமுன் றீய வாய விலங்கு வன்றொழில் செய்ய வஞ்சின; நஞ்சுகால் வாய நாக மணிப்ப ணங்கொள் விளக்கெ டுத்தன; வந்துகால் தோய வானவ ராயி னுந்தனி துன்ன ருஞ்சுர முன்னினார்; |
355 பகல் 1621. | வெங்க திர்ப்பக லக்க டத்திடை வெய்ய வன்கதிர் கைபரந் தெங்கு மிக்க பிளப்பி னாகர்த மெல்லை புக்கெரி கின்றன பொங்க ழற்றெறு பாலைவெந்நிழல் புக்க சூழல் புகும்பகல் செங்க திர்க்கனல் போலு மத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார்; |
1619. (இ-ள்.) மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி - ஆகாயத்தினை அளாவும்படி மேல் உயர வளர்ந்த பெருங் காடாகி; மனித்தரால் போகலாநெறி அன்றியும் - எவ்விடத்திலும் மனிதர்களாற் போகக் கூடிய வழியல்லா திருந்த போதிலும்; புரிகின்ற காதல் பொலிந்து எழ - இடைவிடாது உண்டாகின்ற காதல் சிறந்து மேலோங்குதலினால்; சாகம் மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்ந்து - இலை சருகுகளும் கிழங்குகளும், பழங்களும் என்றிவற்றை உண்ணுதலையும் விடுத்து; தனித்து நேர் - தனியாக நேரே; பெருங் கயிலைக் குலக்கிரி எய்துவார் - பெரிய கயிலையாகிய ஒப்பற்ற மலையினை அடையும் பொருட்டு; இரவும் ஏகினார் - இராக்காலத்திலும் தங்காமல் செல்வாராகி; 354 |