பக்கம் எண் :


60திருத்தொண்டர் புராணம்

 

பாவம் ஒன்றும் வினை - பாவம் - பிறவி. பிறவியிற் பொருந்தச் செய்யும் முன்னைவினை. இங்கு மருணீக்கியார் இப்பிறவி பெறுதற்குக் காரணமாகிய முன்னைத் தவத்தின் குற்றத்தைத் குறித்தது.

தீர்ப்பார் - தீர்ப்பாராகி. முற்றெச்சம். தீர்ப்பார் - மழ விடையார் - கண்டரு நெற்றியார் - திருவுள்ளம் பற்றுவார் - என அருளி - (1313) - அருள (1314) என்று கூட்டி முடித்துக்கொள்க. திருவுள்ளம் பற்றுதல் - திருவுள்ளத்துக் கொள்ளுதல் - நினைத்தல் மரபு வழக்கு.

இத்திருப்பாட்டில் முதலடியிற் சமணநிலையும், இரண்டாவதடியில் அதிற் புக்க மருணீக்கியார் நிலையும், மூன்றாமடியில் அவரைக் கரையேற்ற முயன்ற அம்மையார் நிலையும், நான்காமடியில் அதற்கருளிய இறைவர் நிலையும் கூறப்பட்டன காண்க.

47

1313. (வி-ரை.) மன்னுதபோதனியார் - மன்னுதல் - நிலைபெறுதல். தபோதனியார் - இகரம் பெண்பால் விகுதி. பெண் தவசியார் - தவத்தையே தனமாக உடையவர். தபோதனர் - 96 - 449 பார்க்க.

நீ உன்னுடைய மனக்கவலை ஒழி - என்க. எழுவாயைப் பின் வைத்தது அருளிப்பாட்டினது செய்தியை விரைவில் அறிவிப்பதன் பொருட்டு.

முன்னமே.......முயன்றான் - நாயனார் முன்னைப் பிறவியில் ஒரு முனிவராயிருந்து சிவனை அடையத் தவஞ் செய்திருந்தனர் என்பது. இதனால் அவரது முன்னைப் பிறப்பின் நிலையினைக் குறிப்பா லுணர்த்தியவாறு. 1266-ல் உரைத்தவை பார்க்க. இவ்வரலாறு உபமன்னிய பக்த விலாசம், அகத்தியர் பக்தவிலாசம் என்னும் வடமொழி நூல்களிரண்டினிலும் வெவ்வேறு திறம்பட உணர்த்தப்படுவதென்ப. அவை எவ்வாறாயினுமாகுக! நாயனார் முன் பிறவியில் ஒரு முனிவராகி, இறைவரை அடையத் தவம் முயன்றனர்; அதனில் ஒரு சிறிது பிழை நேர்ந்தது; அதனால் இப்பிறவியிற் போந்தனர்; அப்பிழையை அனுபவித்துக் கழிக்கும் வகையால் சமண சமயம் புக்குழன்றனர்; அதற்குத் தீர்வு தர இறைவன் அருளிய சூலையினால் வருந்தினர்; திருவருள் கூட்டுவிக்க அதன் மூலம் தமக்கையாரை அடைந்து உண்மை உணர்ந்து இறைவரை அடையப்பெற்றனர் என்ற அளவில் உள்ள சரிதப்பகுதி ஆசிரியரது அருள் வாக்கினால் உறுதிப்படுகின்றது. இவ்வுண்மையுடன் மாறுபடாத அளவிற்கு மேற்கூறிய அவ்வரலாறுகள் கொள்ளத் தக்கனவாயின் கொள்வதற்கிழுக்கில்லை. "ஒருமைக்கட்டான்கற்ற கல்வி யொருவற், கெழுமையு மேமாப் புடைத்து" எனவும், வினை அனுபவித்தன்றிக் கழியாது எனவும், செய்ததின் பயனளவே துய்ப்பர் எனவும் இவ்வாறு வருவன உண்மைநூன் முடிபுகளாதலின், நாயனார் முன் பிறவியில் முனிவராகத் தவஞ் செய்தனராதலின் இளமையிலே துறவுபூணும் நிலை கூடிற்று. எல்லார்க்கும் அவ்வாறு கூடாதன்றே!; அதுபற்றியே சமணம்புக்கும் அறப்பள்ளி புகுந்து, அங்கும், அவமாயினும், தவமே மேற்கொண்டனர்; அதுபற்றியே பின்னர்த் திருவருளாற் சைவத்தில் மீண்டும் புகுந்த பின்னரும் துறவு நிலை பூண்டே ஒழுகினர் என்பதாம். ஆளுடைய நம்பிகளது முன்னைச்சரித நிலையும், நிலவுலகம் வருதலும், மீளக் கயிலையடைதலும்பற்றித் திருமலைச் சிறப்பில் அறிவிக்கப்பட்டவற்றை யெல்லாம் இங்கு நினைவு கூர்க. அருச்சுனன் இறைவர் பாற் பாசுபதம் வேண்டித் தவம் செய்தபோது, இறைவர் வெளிப்பட்டருளவே, தவத்திற் குறிக்கொண்ட படையை வேண்டாது முத்தியைவேண்டினானாக, "முன்குறித்த படையை முன்னரும், பின்னர் வேண்டிய முத்தியைப் பின்னரும் (பின் பிறவியிலும்) பெறுவாய்" என்று இறைவர் அருளினார் என்ற சரிதமும், அத்தனையும் குறிப்பினாலுணர்த்தும் "முன்புசெய் தவத்தினீட்டம்" (751) என்ற திருப்பாட்டும் ஈண்டுச் கருதற்பாலன. "பண்டு திருவடி மறவாப்