பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்603

 

தமையும், ஆளுடைய நம்பிகள் திருக்குருகாவூர்க்கு வரும் வழியில் "தண்ணீரும் பொதிசோறுங் கொண்டு வழிச்சார்ந்து" "பந்த ரொருபாலமைத்து" (ஏயர் கோன் - புரா - 156 - 157) இறைவர் எழுந்தருளியிருந்தமையும் இங்கு நினைவு கூர்தற்பாலன,

உடன் கொடு - தடமும் அங்கு இருக்கத்தக்கதாகச் சமைத்து என்ற பொருளில் வந்தது.

ஒன்று - ஒன்றுவிக்கும் தன்மை பொருந்திய என்ற குறிப்புமாம்.

பரமர் ஓர் முனிவர் ஆம் படியால் - பரமர் தாமாந் தன்மையால் அறியவாராது ஒரு முனிவர் என்னலாம்படி. ஆம் - எண்ணலாகும். ஓர் - ஓர்கின்ற. தியானிக்கின்ற என்றலுமாம். பன்னகம் புனை என்பதனை முனிவர் என்றதனுடனும் கூட்டி, பாம்புகளை மேற்றாங்கிய ஒரு முனிவராகி என்றுரைக்கவும் நின்றது.

கச்சிமா நகரினின்றும் காளத்திவரை வழிபட்டு வந்த, சிவநெறி நான்கனுள் ஞானச் சரியையுள் சரித்த நாயனாரது சரிதப்பகுதியை நான்கு சீர்கொண்ட கொச்சகக்கலிப்பாவினாலும், அதன்மேல் அச்சரியையின் மேலே, திருக்கயிலை மேல் எழுந்து செல்லும் சரிதப்பகுதியை எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்ததாலும், அதன்மேல் ஐந்தெழுத்தருணிலை கைவரப் பெற்று ஐயன் திருக்கயிலைக் காட்சியை ஐயாற்றிற் கண்ட சரிதப்பகுதியை அதற்குரிய ஐந்து சீருடைய கலிநிலைத் துறையாலும் யாத்த ஆசிரியரது தெய்வக் கவிநலம் காண்க.

நடந்தார் - வந்தார் என்ற பொருளில் வந்தது.

361

1627. (வி-ரை.) வந்து - அவர் காணும்படி நடந்து வந்து.

மற்றவர் - தாம் குறித்து வந்த அவர் - நாயனார்.

நேர்நின்று - எதிரில் அவர் நேரே காணும்படி நின்று.

நொந்து நோக்கி - அவரது வருத்தத்தைக் கண்டு ஆற்றாமைக் குறிப்புத் தோன்ற நோக்கி. ஆற்றாமை கண்ணோக்கத்தில் வெளிப்படும்படி இரக்கக் குறிப்புடன் பார்த்து.

மற்றவர் எதிர் நோக்கிட - வந்தவர், தம்மை அவர் (நாயனார்) காணாமுன்னம் தாம் அவரை நோக்கி, அதன் பின் அவரும் தம்மை எதிர் நோக்கம் செய்ய - பார்க்க. "திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே, யங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்த" (753) என்றதும் ஆண்டுரைத்தவையும் இங்குக் கருதுக.

நுவல்வார் - இசைத்தார் என்று கூட்டி முடிக்க. நுவல்வார் - நுவல்வாராகி; முற்றெச்சம்.

இவ்வுறுப்புச் சிந்தி அழிந்திட என்க. இவ்வாறு உறுப்புக்கள் சிந்தி அழிய - அழியும்படி.

வெம் கடம் - வெவ்விய காடு. கடத்து - காட்டினிடத்து.

362

1628.

மாசில் வற்கலை யாடையு மார்பின்முந் நூலுந்
தேசு டைச்சடை மவுலியு நீறுமெய் திகழ
ஆசின் மெய்த்தவ ராகிநின் றவர்தமை நோக்கிப்
பேச வுற்றதொ ருணர்வுற விளம்புவார் பெரியோர்,

363

1629.

"வண்டு லாங்குழன் மலைமக ளுடன்வட கயிலை
 யண்டர் நாயக ரிருக்குமப் பரிசவ ரடியேன்
 கண்டு கும்பிட விருப்பொடுங் காதலி னடைந்தேன்;
 கொண்ட வென்குறிப் பிதுமுனியே!" யெனக் கூற,

364