பக்கம் எண் :


630திருத்தொண்டர் புராணம்

 

படுவது. பாடுவார் (1648) - எனப்பாடி (1649) - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டுக.

பாடுவார் (1648) - பாடி நின்றா (ராய்க்) (1649) - கண்டு தொழுது - வணங்கிப் - போற்றிப் - பாடி - வணங்கிச் - செய்தே - திருநாவுக்கரசர் - திருஐயாறு அமர்ந்தனர் (1650) என்று இந்த மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க.

383

1649. (வி-ரை.) மாதர்ப்பிறை...என்னும் - இது பதிகத் தொடக்கம். இதுவே பதிகக்குறிப்பும் கருத்துமாதலை இப்பாட்டின் மூன்றாவது நான்காவது அடிகளால் விரித்தருளினர் ஆசிரியர்.

மாதர்ப்பிறை - அழகியபிறை; மாதர் - அழகு.

கோதறு - குற்றத்தை அறுவிக்கும் எனப் பிறவினைப் பொருள் கொள்க. இங்குக் கோது என்றது உயிர்களின் மலமாசு. கோதற்ற தமிழ்ச் சொல் என்று தன்வினையாகவே கொண்டுரைப்பாருமுண்டு; அவர் கோது என்பது சொற் பொருட்குற்றம்.

திருப்பதிகங்கள் - பதிகத்துள் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு பதிகம் எனப்பட்டது. பதிகப்பெயர் அதன் பாட்டுக்கு வந்தது சினையாகு பெயர். ஒவ்வோர் பாட்டும் மேலே கூறும் பதிகத்தின் முடிந்த கருத்தினையே கொண்டு விளங்குதலாற் பதிகங்கள் எனப்பட்ட தென்பதுமாம்.

"வேத முதல்வர்...கண்டேன்" என்று - இது பதிகக்கருத்தும் பாட்டுக் கருத்துமாம். பதிகக் குறிப்புப் பார்க்க.

சராசரம் எல்லாம் - நிற்பவும் சரிப்பவுமான - பன்மை யோனிகள் எவையும், (1638 - 1639) பார்க்க.

சரம் அசரம் - சராசரம் என வந்தது வடசொல் முடிபு. துணையொடும் கூட - பெண்ணொடும் கூடிவர.

பிறைக் கண்ணி - பிறையாகிய மாலை. கண்ணி - கொண்டை மாலை.

நின்றார் - நின்றாராகி; முற்றெச்சம். நின்றாராகிக் - கண்டு என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டுக. வினைமுற்றாகக் கொள்ளினு மிழுக்கில்லை. பாடி நின்றார் - பாடுந் தொழிலின் கண் நின்றனராய்.

384

1650. (வி-ரை.) கண்டு தொழுது வணங்கி - போற்றி - முன் 1645-ல் காண்டல் தொழுதல் முதலியனவும் திருவையாற்றில் அவ்விடத்தே நிகழ்ந்தனவாயினும், அது கயிலைக் காட்சியைக் கண்டு நிகழ்ந்தன; இங்குக் கூறியவை அவ்விடத்தே திருவையாற்றுக் கோயில் காட்சியினைத் திகழக் கண்டு நிகழ்ந்தவை.

கண்ணுதலார் - திருவையாறப்பர்; கயிலைக் காட்சியளித்த அருட் கண்ணினையுடையார் என்பது குறிப்பு.

போற்றிக் கொண்ட - துதிப்பதனை உட்கொண்ட. பிரானாய் அடி யென்மேல் வைத்தாய்; அடியானென் றடியென்மேல் வைத்தாய்; மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய்; என்ற கருத்துத் தோன்றப் போற்றிய.

திருத்தாண்டகங்கள் - இப்போது இரண்டு பதிகங்கள் கிடைத்துள்ளன.

தொழுது வணங்கி - பாடி வணங்கி - தொழுது வணங்கி என்றது திருவையாறப்பர் காட்சி கண்டதன் பொருட்டு வணங்கியதும், பாடி வணங்கி என்றது பாடியதன் முடிவிற் புறம்புகும்போதும் வணங்கியதுமாம்.

அன்பின் மண்டு விருத்தங்கள் - "ஐயாறர் பொன் அடிக் கீழெனைத், தொண்டனேனைச் செறிவித்தவா!" "ஐயாறனடித் தலமே" என்றும வரும் திருவிருத்தப் பதிகங்கள், என்றும் இறைவரது திருவடிகளில் நாயனார் கொண்டுவைத்த அன்பின் உறைப்பினையும் செறிவினையும் உணர்த்துவன. இதுபற்றியே முன்னர் (1648)