அடித்தொண்டர் என்றதும் குறிக்க. அன்பின் மண்டு - பதிகம் பத்துப் பாட்டில் முடியாது இருபது பாட்டளவும் அருளிய ஆர்வமும் குறிப்பு. திருத்தொண்டு - திருவுழவாரத் திருத்தொண்டு. செய்தே - ஏகாரம் தேற்றம். அண்டர்பிரான் திருவையாறு - எல்லா அண்டங்களினும் நிறைவாகிய கயிலைக் காட்சியினை இங்குக் காட்டுவித்தலின் இவ்வாற்றாற் கூறினார். அமர்ந்தனர் - விரும்பிச் சில காலம் எழுந்தருளி யிருந்தனர். 385 திருவையாறு I திருச்சிற்றம்பலம் | பண் - காந்தாரம் |
| மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடுப டாம லையா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்; கண்டே னவர்திருப் பாதங்; கண்டறி யாதன கண்டேன். 1 வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக் களவு படாததோர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன் அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போது இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன்; கண்டே னவர்திருப் பாதங்; கண்டறி யாதன கண்டேன். |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- திருக்கயிலைச் சாரலினின்றும் யாதும் சுவடுபடாமல் திருவையாறு அடைகின்றபோது சராசரங்களெல்லாம் தத்தம் துணையுடனே, சத்தி சிவமாம் பரிசுதோன்றக் கண்டேன்; ஆதலின் அந்நிலையிலே இறைவரது திருப்பாதங்களையும் கண்டேன். குறிப்பு - இப்பதிகம் திருக்கயிலைக்காட்சி கண்டு அது சேயதாகிய பின் பாடியருளியது. ஆனால் இதிற் குறித்த காட்சி அக்காட்சிக்கு முன் கண்டது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மாதர் - அழகிய. பிறைக் கண்ணி - பிறையாகிய கொண்டைமாலை. இப்பதிக முழுதும் பிறைக்கண்ணியினையும் அம்மை உடனாதலையும் கூறியது, முதலிற் காட்சிப்பட்டது பிறை என்றும், பின்னர் மனத்துள் ஊன்றியது இறைவரது அருளாகிய அம்மையுடனாம் தன்மை என்றும் குறித்தவாறு. "தெண்ணிலா மலர்ந்த வேணியாய்" (253) என்றதும், ஆண்டுரைத்தவையும் நினைவு கூர்க. "செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்குஞ் சென்னி" என்ற திருநேரிசைப் பதிக முழுமையும் இக்குறிப்புப்பட அருளியதும் கருதுக. போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவார் - நாயனார் ஐயாற்றில் வாவியின் கரையில் வந்து ஏறிக் கோயிலைநோக்கி வரும்போது முன் சென்ற அடியார்கள். யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது - கயிலைக்குச் சென்றபோது நாயனாரது கால்கள் - கைகள் - மார்பு - உடல் இவை தேய்ந்து ஊறுபட்டன; ஆனால் அங்கிருந்து இறைவரது ஆணைவழியே அங்குப் பொய்கையில் மூழ்கி இங்கு வாவியில் வந்தெழுந்தபோது அவ்வாறு ஏதும் சுவடு படாமல் வந்தடைந்தனர் என்க. - (2) வட்டமிட்டு - வலம் வந்து சுற்றி; ஆடா - ஆனந்த மேலீட்டினால் ஆடி; ஆழி வலவன் நின்றேந்தும் - ஆழி வலவன் - கடலரசன்; கடலரசன் இங்குப் பூசித்துக் காவிரியைத் தன்பா லடையப் பெற்றனன் என்பது தல சரிதம். தலவிசேடம் பார்க்க. ஆழி - வலவன் - ஆழி சக்கரம் என்று கொண்டு, திருமால் என்றலுமாம். - (3) முரித்த இலயங்கள் - இடைவிட்டு |