பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்633

 

குறிப்பு. "நொந்து நோக்கி" (1627). - (3) சுண்ண வண்ணம் - சுண்ணமாடிய வண்ணத்தையுடையவர். நஞ்சனி - பிறரைக் கொல்லும் நஞ்சினை அணிகலமாகவுடைய. நெஞ்சு...அமுதம் - எண்ணார எண்ணும்போதும் உள்ளே நிறைபவர். - (4) எல்லை நிறைந்தான் - சொல் - பொருள் - எல்லை - அளவு - நிறைந்தவன். "உரையின் வரையும் பொருளின் அளவும், இருவகைப்பட்ட எல்லையும் கடந்து" (கோயினான்). எல்லையாம் ஐயாறு - "கலையின் பொருட்கலெ்லை ஆடும கழலே" (1220). - (5) கனலாகும் கண் - நெருப்புக்கண்; (6) அற்றார் - பற்றற்றார். - (8) அவன் - மகா - வாகக்யிங்களில் தத் பதப்பொருள். முழுமுதல்வனாம் அவன். சிவன் - பவன் - இறைவனது திருநாமங்களுள் மிகச்சிறந்த நாமங்கள். "சிவனெனு நாமம் தனக்கே...பவனெனு நாமம் பிடித்து" - (தேவா.)

IIIதிருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

ஓசை ஒலியெலா மானாய் நீயே யுலகக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருவையாறு ஆகலாத செம்பொற் சோதியே; நீ ஓசை ஒலியெலாமானாய்; பேசப் பெரிது மினியாய்; பிரானாய் அடியென்மேல் வைத்தாய்; நோவாமே நோக்கருள வல்லாய்; தீர்ப்பரிய வல்வினை நோய் தீர்ப்பாய்; சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய்; தீர்ப்பரிய வல்வினை நோய் தீர்ப்பாய்; சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய்; மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய்; ஊழி முதல்வனாய் நின்றாய்; கற்றிருந்த கலைஞான மானாய்; பெற்றிருந்த தாயவளி னல்லாய்; நல்லாரை நன்மையறிவாய்; செல்வாய செல்வந் தருவாய்; கண்டாரைக் கொல்லு நஞ்சுண்டாய்; ஆரு மறியா விட்த்தாய்; என்றிவை முதலாகக் குறிக்கப்படும் தன்மைகளா லறியப்படுவர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஓசை ஒலி - ஓசை - அநர்த்த சத்தம். ஒலி - அர்த்த சத்தம். பிரானாய் அடி என்மேல் வைத்தாய் - திருவடி தீக்கை செய்த குறிப்பு. இப்பதிக முழுமையும் இக்குறிப்பேபடப் போற்றுதல் காண்க. தேச விளக்கு - உலக விளக்காகிய சுடர்; ஞாயிறு - திங்கள் - தீ. - (2) நோக்கு அருள - அருட்பார்வை செய்ய. - (3) தனத்தகத்து - தன்னகத்து. தனக்கு. மனத்திருந்த கருத்து - கயிலைக் காட்சி காண நாயனார் கொண்ட கருத்து. அறிந்து முடித்தல் என்றது உடனிருந்து உணர்ந்து ஏற்றவாறு கூட்டுவித்தல். பொதுவாய் எல்லா உயிர்களுடைய கருத்து முடிக்கும தன்மையும் குறிப்பது. "மனத்தானை - மனத்திருந்த கருத்தானைக் - கருத்தறிந்து முடிப்பான் றன்னை" (தாண்). சினத்திருந்த - பொங்கிவந்த. - (4) தேவர்களை அடர்த்த. வடகயிலை மன்னி யிருந்தாய் - வடகயிலைக் காட்சியே இங்கு அருளிய குறிப்பு. - (6) செற்றிருந்த - தேவர்களை அடர்த்த. - (7) செல்வாய செல்வம் - திருவருளிற் செலுத்தும செல்வம் - அன்பு. - (9) திண்சிலை...வல்லாய் - திண்சிலை - மேருமலையாகிய வில். திண்மை - வளையாத தன்மை. வல்லாய் என்றது மலையை வளைத்த பிறர்க்கரிய திறல் குறித்தது. - (10) கண்டாரைக் கொல்லு நஞ்சு - தீண்டாமலே, பார்த்த மாத்திரத்தில் அடர்த்துக் கொல்லும் தன்மையுடைய விடம். திருஷ்டி விடம் என்பர் வடவர். பாற்கடலில் எழுந்த பரந்த விடம் காட்சி மாத்திரையால் தேவர்களை அடர்த்தமையால் இவ்வாறு கூறினார். நஞ்சு - நஞ்சினையும்; இரண்டனுருபும்