சிறப்பும்மையும் தொக்கன. - (11) ஆரு மறியாவிடம் - உணர்ச்சிக்கு எட்டாத அளவு நீண்ட நீளம். ஊரும் - பறக்குங் கருவியாக ஊர்ந்து செல்லும். குறிப்பு :- திருக்கயிலையில் ஐம்பூதங்களாகவும், அவற்றின் பேருருவங்களாகவும் இறைவன் றிருமேனியைக் கண்டு வழிபட்ட நினைவுடன் இங்குக் காட்சி காண்கின்றாராதலின் ஓசை ஒலியெலாமானாய், கடல்வரை வானாகாயமானாய், எண்டிசைக்கு மொண்சுடராய் நின்றாய், என்றிவ்வாற்றாற் கண்டு வணங்குதலுடன், அம்மையப்பராய்க் கண்ட உருவக் காட்சியும் ஒருங்கே இங்குப் போற்றியது காண்க. IVதிருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவண, முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி சந்தி வண்ணத்த ராய்த்தழம் போல்வதோர், அந்தி வண்ணமு மாவரை யாறரே. விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமுங், கரும்பி னின்மொழிக் காரிகை வண்ணமும் விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும் அரும்பின் வண்ணமு மாவரை யாறரே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- தம் சிந்தையி னிலைபெற்றுத் திறம்பா வண்ணம் இறைவர் எழுந்தருளிய வண்ணங்களை, முழு நீறணி சந்தி வண்ணம், அந்தி வண்ணம், வேதத்தின் வண்ணம், காரிகை வண்ணம் என்றின்ன பல படியாக நினைந்து போற்றிய கருத்து. பதிக முழுதும் வண்ணங்களைத் துதித்தமை காண்க. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சந்தி - காலை மாலைகளிற் காணும் செவ்வானம். அந்தி - மாலை. - (2) மூல வண்ணம் - உலக காரணர்; முதலாகிய கோலம் - ஒடுக்கிய உலக முதலியவற்றைத் தம்மிடத்திலிருந்து தோற்றுவிப்பவர். நீலவண்ணத்தர் - திருமால் பாகமுடையவர். கரிய அகோர முகத்தையுடையவர் என்றலுமாம். பளிங்கு - திருமேனி நிறம். - (3) அந்திப்போது - அந்திமாலை போன்ற. அந்தி - அழகிய தீ நிறம். தீ என்பது தி என நின்றது. செய்யுள் விகாரம். - (4) இருளின் வண்ணம் - அகோர முகத்தின் நிறம். மருளும் - அளவு காண முடியாது மயங்கும். - (5) இழுக்கின்...வெவ்வழல் - ஆணவ மலத்தின் பலவேறு உருவங்களாகிய கொடுமைகள். கூடியும் - உடனிருந்தும். "பொல்லாத வென்னழுக்கிற் புகுவா னென்னைப் புறம்புறமே சோதித்த புனிதன்" (தாண் - திருவாலம்பொழில் - 7). "யான் செய்யுந் துரிசுகளுக் குடனாகி" (நம்பி. ஆரூர்). குழைத்தல் - கரைத்து வலியிலதாகச் செய்தல். மழைக்கண் மாமுகில் - மழையைத் தன்னிடத்துக் கொண்ட கருமுகில். இங்கு மழை என்றது நீர் என்ற பொருளில் வந்தது. அழைக்கும் வண்ணம் - அருந்தவர் வானென் றணைநத்த மலர்க்கையும்" (திருமந்). இறைவரது அபய கரத்தைக் குறித்தது. - (7) வேதத்தின் - வேதங்களை வெளிப்படுக்கும். வேதங்களாற் சொல்லப்படும் என்றலுமாம். வினை தீர்த்திடும் வண்ணம் - காரிகை வண்ணம் கொண்டிருப்பது வினை தீர்த்தற்பொருட்டு என்றதாம். - (8) ஆழித்தீ - ஆழியினின்றும் - கடல் அகத்திலிருந்து ஊழியில் பெருகி உலகை அழிக்கும் வடவைத்தீ. ஊழி வண்ணம் - ஆழிவண்ணமும் என்றவையும் இக்கருத்தைத் தொடர்ந்தன. - (9) கைது - கைப்பற்றாக; அனுபவமாக. ஐது - அழகுடைய. - (10) இப்பாட்டில் வண்ணமும் என்ற நான்கும் தொடர்ந்து ஒருபொருள் பற்றி வந்தன. Vதிருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன், பொந்து வார்புலால் வெண்டலைக் கையினன்; முந்தி வாயதோர் மூவிலே வேல்பிடித், தந்தி வாயதோர் பாம்பரை யாறறே. |
|