பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்635

 

நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே, வஞ்ச மென்பதோர் வான்சுழிப்பட்டுநான்,
துஞ்சும் போதுநின் னாமத் திருவெழுத், தஞ்சுந் தோன்ற வருளுமை யாறரே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஐயாறர் - அந்திவாயதோர் பாம்பர்; பரியர்; நுண்ணியர் பிறர்க்கெலாம் அரியர்; தொண்டர்க் கெளியர்; என்றிவை முதலிய தன்மைகளாலறியப்படுபவர். அவரது ஐயாறு தொழத் தவம் ஆகும். ஐயாறரே! நான் துஞ்சும்போது நும்நாமத் திருவெழுத் தஞ்சுந் தோன்ற அருளும்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வாய்தல் - தமது ஆட்சிசெலுத்தும் வழி. அந்திவாயது - மாலையில் வெளிப்போந்து உலாவுவது. அம் - தீ - தீமைபயக்கும் விடம்; வாயது - வாயில் உடையது என்றலுமாம். - (3) நாயனார் கேட்கும் மிகச் சில வரங்களுள் ஒன்று இப்பாட்டாற் பெறப்படும். திருவெழுத்தஞ்சும் தோன்றுலாவது சிவனுக்கடைக்கலம் புகுதல். - (9) தேனை ஆறு - தேன் ஆறுபோல இன்பம் பெருக.

VIதிருச்சிற்றம்பலம்

திருநேரிசை

கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி யரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையு ளனலும் வைத்தா ரையனை யாற னாரே.

1

இரப்பவர்க் கீய வைத்தா ரீபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தா ரையனை யாற னாரே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஐயன் ஐயாறனாரே கங்கையைச் சடையுள் வைத்தார்; திசைதிசை தொழவும் வைத்தார்; பொடிதனைப் பூச வைத்தார்; அடியிணை தொழவும் வைத்தார்; உலகங்களனைத்தும் வைத்தார்; அடைதர அருளும் வைத்தார்; எமக் கென்றுமின்பம் வைத்தார்; கடுவினை களைய வைத்தார்; பத்தர்கட் கருளும் வைத்தார்; சித்தத்தை ஒன்ற - சிவமதே நினைய - முத்தியை முற்ற - முறைமுறை நெறிகள் வைத்தார்; கீதங்கள். பாடக் - கின்னரந் தன்னை வைத்தார்; இரப்பவர்க் கீய வைத்தார்; ஈபவர்க்கருளும் - கரப்பவர்க்கெல்லாம் கடுநரகங்களும் வைத்தார்; என்றிவை முதலாகப் பேசப்படுகின்ற அருளிப்பாடுகளைச் செய்வார்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சடையுள் - கங்கையையும் அரவையும் திங்களையும் வைத்தார் என்று கூட்டிக்கொள்க. திகழ - கங்கையோடு அரவும் என்க. அரவும் வைத்தமையால் மறைந்து தேயாது திகழ என்றும், முனி சாபத்தால் தேய்ந்தொழியாதுதிகழ என்றும் உரைக்க நின்றது. திசைதிசை தொழவும் - "எந்நாட்டவர்க்கும் இறைவா" (திருவாசகம்). - (2) பொடி - திருநீறு. சாம்பல் (6) என்றது மிது. "பொங்கு வெண்ணீறு" (9). - (3) உலகங்களனைத்தும் வைத்தார் - உலகங்களைத் தோற்றுவித்து உயிர்கள் அனுபவித்து வினையைக் கழிக்கச் செய்து நிறுவினார்; "விரிபொழி லனைத்தும் வைத்தார்" (6). - (4) எமக்கென்று மின்பம் வைத்தார் - "இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை" (தாண்). - (5) வல்வினை மாய - கொடிய வினைகளும் கழிய; "கடுவினை களைய" (6). கனலா வைத்தார் - முதலிற் கனன்று எரித்துப், பின்னர் உளனாகச் செய்தார்; ஆட்டுவார் -