பக்கம் எண் :


636திருத்தொண்டர் புராணம்

 

ஆனைந்தினால் திருமஞ்சனம் ஆட்டுவார். - (6) அங்கமது - அங்கத்தை உடையது; அதாவது வேதம். - (7) பத்தர்கட்கு அருளும் வைத்த முறையாவது, சித்தத்தை ஒன்றுவித்தலும், அதனால் சிவமதே நினைய வைத்தலும், அதனால் முத்தியை முற்றவைத்தலும், அதன் பொருட்டு முறைமுறை நெறிகள் வைத்தலும் ஆம் என இப்பாட்டில் வினை முற்றுக்களை எச்சங்களாக்கித் தொடர்ந்து முடித்துக்கொள்க. ஒன்ற - பலதிறத்தும் செல்லாது ஒருவழிச் செலுத்த; சிவம் அதே - ஏகாரம் பிரிநிலை. "பொது நீக்கித் தனைநினைய வல்லார்க்கென்றும், பெருந்துணையை" (தாண்). முற்ற - படிப்படியாய் மேலோங்கி வர. முத்தி என்றது முத்தி நெறியேறுந் தகுதியை. "மாலுங் காட்டி வழிகாட்டி வாரா வுலக நெறியேற" (திருவா). முறைமுறை - பக்குவத்துக்கு ஏற்றவாறு படிப்படியாக. - (9) பூதங்கள் - ஐம்பூதங்கள். பூதகணங்கள் என்றலுமாம். கீதங்கள் பாடக் கின்னரம் - என்று கூட்டுக. கின்னரம் - இசை. - (10) இரப்பவர்க்கு ஈதல் - என்பது அன்பின் தன்மை. தம்மிடம் சார்ந்து வேண்டுவார்க்கு என்றலுமாம். ஈபவர் - ஈதலைச் செய்பவர்; இது அன்பினால் நிகழ்வது; ஆதலின் அந்த அன்பு அருளைப்பெற வைத்தார். "அருளென்னு மன்பீன் குழவி" (குறள்). கரப்பவர் - வஞ்சகர்.

VIIதிருச்சிற்றம்பலம்

திருநேரிசை

குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ தூநெறி யாகி நின்ற
அண்டனே யமர ரேறே திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுதுன் பாதஞ் சொல்லிநான் றிரினின் றேனே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- சமணரோடு கூடத் திரிந்த மயக்கத்தை அறுத்துத் தம்மை வந்தடைய அருளிய திருவையாமர்ந்தருளும் தேன்போன்ற இறைவரை அடைந்து உய்ந்தேன்; அவரை வணங்கவல்லார் வல்வினை மாயும்.

குறிப்பு :- பதிக முழுமையும் அமணரினின்று போந்த சரிதக் குறிப்பு. திருவாரூர்த் திருநேரிசைப் பதிகம் பார்க்க.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) துண்டன் - துண்டிப்பவன்; அறுப்பவன். - (2) வாலிய - பெரிய. ஆலியா - ஆலித்து - அடைந்து - பொருந்தி. - (3) மனத்தினீரே - மனமே. பன்மை இகழ்ச்சி குறித்தது. உள்ளத்தீரே - உள்ளமே. பன்மை பெருமையும் புகழ்ச்சியும் குறித்தது. சமணரோடே - ஒட்டிடும் மனமே! உன்னை இகழ்ந்து பழிப்பதல்லால் வேறு என்செய்வேன். செய்வதென்னே - பழிப்புச் சொல்லைப் பெரியோர் வாக்கினாலும் சொல்லா மரபுடையர்; ஆதலின் செய்வதென்னே என்றார். தேனோடு ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை உகந்திட்டேன் என்றது நற்சொல் குறித்தது. நற்சொல்லாதலின் முன் சொன்னதுபோலக் குறிப்பிற் சாற்றாது உகந்திட்டேன் என்று வெளிப்படக் கூறினார். இரண்டிடத்தும் ஒட்டிடும் என்று கூறியது காண்க. ஒட்டுதல் - இரண்டும் ஒரு தன்மைப்படக் கூடுதல்; கலத்தல். "ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்" (பின் - மயிலை); "உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி" (தாண்.) சார்ந்த தன் வண்ணமாய் நிற்பது உயிரின் இயல்பு என்ற ஞானசாத்திர உண்மை புலப்படக் கூறியது. "ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத், தாணு வினோ டத்து விதஞ் சாருநா ளெந்நாளோ?" (தாயுமானார்) என்றதும் இக்கருத்து. - (4) பாசிப்பல் - துலக்காமையால் பாசி - மாசு - பிடித்த பல். வாசம் - அன்பு குறித்தது. - (5) வடுக்கள் - கீழ்மக்கள். மதியிலி - மதியில்லாது. மதியிலியாய். -