பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்637

 

(6) சொலவு - சொல்லப்பட்டது. - (10) மூதறிவாளன் - ஞான நிறவுடையவன். அறிவினால் - பிழையும் கழுவாயும் அறிந்து துதித்தமையால்.

VIIIதிருச்சிற்றம்பலம்

திருநேரிசை

தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை வார்குழன் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை யையனை யாற னார்க்கே.

1

சகமலா தடிமை யில்லை தாளலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையா னாண்மலர் கொய்து நாளும்
முகமெலாந் கண்ணீர் வார முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை யையனை யாற னர்க்கே.

8

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஐயன் ஐயாறனார்க்குத் தானலாது உலகமில்லை; சகமலாது அடிமையில்லை; தெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவலால் அருளுமில்லை; தொண்டலாற் துணையுமில்லை; எரியலால் உருவமில்லை; அரியலால் தேவியில்லை; அன்பலாற் பொருளுமில்லை; மீளா ஆளலாற் கைமாறில்லை; தொண்டர் அகமலாற் கோயில் இல்லை; என்றிவ்வாறு உறுதிப் பொருள்படப் பல தன்மைகளையும் எடுத்துரைத்தது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) அலாது - இல்லை என்று எதிர்மறை முகத்தாற் கூறியவை உறுதிப் பொருள்பட நின்ற இன்றியமையாமையை விளக்கின. தானலாது உலகம் இல்லை - உலகம் தன்னிடத்தில் ஒடுங்கி மீள உளதாகும. விசுவவுருவினன் என்றலுமாம். சகமலாது அடிமை இல்லை - அவ்வாறு தன்பால் மீள உளதாகிய அவ்வுலகம் தமக்கு அடிமையாயுள்ளது என்க. - (2) நொடிவது - கையாற் காட்டி யுணர்த்துவது; ஆல். முன்னையது மரம். கல்லாலினடியில் இருந்து, மாமுனிவர்க்கு ஞானமுணர்த்தியது. (வேலை) ஆல் - பின்னையது, விடம் - ஆலாலம். - (3) குழலியொடு துணையலால் இருக்கையில்லை என்றது எஞ்ஞான்றும் அருளுடன் கூடியவர் என்றதாம். தெரி - புரி - தெரிதல். புரி - இடைவிடாது சொல்லுதல் - நினைத்தல். - (4) கலந்தபின் பிரிவதில்லை. மீளா நெறியாகிய முத்தியிற் கலந்த உயிர்கள் பின்னர்ப் பிரிந்து வருவதில்லை என்று ஆன்ம நிலையிலும், இறைவர் உயிர்களுடன் அநாதியே கலந்து நிற்பதால் பின் எப்போதும் பிரிவதில்லை என்று இறை நிலையிலும் வைத்துரைக்க நின்றது. - (5) எரியுருவம் - நிறமும் செயலும் குறித்தது. அமரர்...ஏத்தும் அரி -தேவர்களும் பிறரும் தமக்கு மேற்பட்ட அரியையே தெய்வமாக ஏத்துகின்றமை குறிப்பு. "தேசங்க டொழநின்ற திருமாலாற், பூசனை" (காந்தாரம் - காஞ்சி - 6) அரியலால் தேவி யில்லை - சங்கரநாராயணரான திருமேனி. - (6) பொடி - திருநீறு. "சாந்தமுந் திருநீறு" (திருவிசைப்). பொருள் - இறைவர் கொள்ளும் பொருள். - (7) ஆளலாற் கைம்மாறு இல்லை - இறைவர் உயிர்களுக்கு நித்தமும் நீங்காது செய்யும் அருளுக்குக் கைம்மாறு அவருக்கு நித்தமும் நீங்காது ஆட்செய்வதையன்றி வேறு இல்லை. அடிமை செய்யும் வகையும் அதனால்வரும் பயனும் மேல்வரும் பாசுரத்திற் கூறப்படுவன. - (8) சகம் - உலகத்துயிர்கள். தாள் - சீபாதம். நகமெலாம்...ஏத்தும் - அடிமை செய்யும் வகை. தொண்டர் அகமலாற்கோயிலில்லை என்றது அவர் விரும்பி வீற்றிருக்கும் இடம் என்ற கருத்து. ஏனைத் தாவரங்களைத் திருமேனியாகக் கொண்டு இறைவர் வீற்றிருப்பதனை விலக்குதல்