பக்கம் எண் :


692திருத்தொண்டர் புராணம்

 

றாத அன்பின் உறைப்பு. வானிற்றோன்றும் புயல் - கங்கை வானில் ஆரவாரித்து முழங்கும் வீறு. தோன்றும் - பெயரெச்சம். பாய - விரித்த - பாய்ந்து ஒடுங்க என்ற பொருளில் வந்தது. - (7) பொன்னனைய திருமேனி - இரசவாதம்செய்த திருவிளையாடற் குறிப்பு. - (8) திருவருள் கூட்டி; மும்மலநீக்கி, ஆணவத்தை எரித்துப் பசுத்தன்மை போக்கிப் பிறவியறுத்து உயிர்களிடத்து இறைவர் செய்யும் உபகாரங்களின் குறிப்புடன் விளங்குவது இத்திருப்பாட்டு. - (9) அருப்பு ஓட்டு - (கோங்கு) அரும்பினைவென்ற, வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறம் - வைகைக்கறையில் நின்று மண் சுமந்த திருவிளையாடல் குறிப்பதென்பர். கோடு - கரை. - (10) சண்டீச நாயனார் சரிதம் குறித்தது. - (11) ஆர் ஒருவர்...அருள் - யாவர் யாவர் எவ்வெவ்வாறு நினைக்கின்றார்களோ அவ்வவர்க்கும் அவ்வத்திறமாய் வந்து அருள்புரிபவர். "யாதொரு தெய்வம்" (சித்தியார்).

தலவிசேடம் :- திருப்பூவணம் - பாண்டி நாட்டிற் றேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் 11-வது தலம். வைகையாற்றின் தென்கரையில் உள்ளது. மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது. காசிக்குச் சமானமான தலம் என்பர். இத்தலத்தில் பொன்னனையாள் என்ற அம்மையாருக்கு இறங்கிச் சொக்கலிங்கேசர் இரசவாதம் செய்தருளிய வரலாறு திருவிளையாடற் புராணத்திற் பேசப்படுகின்றது. இங்குத் தமிழ் மூவேந்தர்களும் வழிபட்ட சிறப்பு ஆளுடையபிள்ளையார் தேவாரத்தால் அறியப்படும். ஆளுடைய நம்பிகள் இங்கு மூவேந்தர்களுடனிருந்து வழிபட்டனர். சுவாமி - பூவணநாதர்; அம்மை - மின்னம்மை; மரம் - பலா; தீர்த்தம் - வைகை; திருப்பதிகங்கள் நான்கும் திருவிசைப்பாவும் உண்டு.

இது மதுரைக்குக் கிழக்கே 12 நாழிகை யளவில் திருப்பூவணம் என்ற நிலையத்தினின்றும் கிழக்கே கற்சாலையில் அரை நாழிகை யளவில் அடையத்தக்கது.

1673.(வி-ரை.) தென் இலங்கை - தமிழ்நாடு கடந்து அதன் தெற்கில் கடற்புறத்தே இருக்கும் தீவு என்ற குறிப்புப்படக் கூறினார். தென் - அழகிய என்றலுமாம்.

சிரம் ஈரைத்தும் - முற்றும்மை தந்தோதியது அவனது வலிமையும் செயலின் அருமையும் குறித்தற்கு.

மன்னவனும் இராமன் - அப்போது மன்னவனல்லாது, இனி, மன்னவனாகும் நிலையில் நின்றவன் என்ற குறிப்புப்பட மன்னவனாம் என்றார்.

இராவணன்றன் சிரம் ஈரைந்தும் துணித்தது - இராமன் கதை. இராமாணத்துப் பேசப்படும் வரலாறு. துணித்த - இராமனுக்கு - துணித்ததனால் வரும் என்று, பாதகம் வருதற்குக் காரணப் பொருள்படும்படி உடம்பொடு புணர்த்தி ஓதினார்.

வரும் பெரும் பாதகம் - வேதம் பயின்றவன் தவமுடையவன், சிவபூசை செய்பவன், பெருவீரன் என்பன முதலிய குணங்களுடைமை பற்றி அத்தகைய இராவணனைக் கொன்றது பெரும் பாதகம் என்னப்பட்டது. அன்றியும், இராவணன் பிறன் மனைவியை விரும்பிய குற்றத்துட்பட்டான் ஆயினும், அக்குற்றத்துக்காகச் சிரம் துணித்த தண்டனை மிகையாகலானும், ஏனை ஆண், பெண், மகவு முதலிய அரக்கர்களும் பட்டமையும், இலங்கை முழுதும் அழிந்துபட்டமையும் பொருந்தா ஆகலானும், அச்செயல் பெரும் பாதகம் எனப்பட்டது. மேலும் எக்காரணத்தாலும் ஓர் உயிரைக் கொல்வது அது செய்தானுக்குக் கொலைப்பழி தந்தேவிடும் என்பதொரு முறையும் உண்டு. ஆனால், கொலைக் குற்றத்திற்குக் கொலைத் தண்டனை விதிக்கும் நீதிபதி யிடத்தும், அந்த ஏவல்வழி நின்று உயிர்போகச் செய்யும் ஏவலாளர்களிடத்தும் கொலைப்பழி வந்து சாருமோ எனின்; சாராது; குற்றத்துக்கு ஏற்ற தண்டம் விதித்தல் இறைவன் விதித்த நீதி நூல் முறைப்படி அரசு செய்யும் மன்னவன் கடமையாதலால் என்பது. "துணி பொருடா னாற்றவுமற் றவற்கொல்லு மதுவேயாம்" (126) என்று துணிந்து தன் மகனைத் தேர்ச்சக்கரத்தில் வைத்து ஊர்ந்த மனுச் சோழருக்கு எப்பழியும்