பக்கம் எண் :


694திருத்தொண்டர் புராணம்

 

நேசமிக் கன்பி னாலே நினைமினீர் சென்று நாளுந்
தேசமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரமே.

1

கடலிடை மலிக டம்மா லடைத்துமால் கரும முற்றித்
திடலிடைச் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் றூய்மை யின்றி
யுடலிடை நின்றும் பேரா வைவராட் டுண்டு நானே.

3

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- வன்கண்ணராய்க் கோடி மாதவங்கள் செய்து குன்றினாராகிய அரக்கர்களை யெல்லாம், கடலிடை மலைகளால் அடைத்து, வீடவே சக்கரத்தா லெறிந்து, கருமம் முற்றி, வாசமிக்கலர்கள் கொண்டு, மதியினால், தேடி, மால் செய்த கோயிலாகிய திருவிராமேச்சுரத்தைப் பற்றி, நெஞ்சே படர்சடை ஈசன்பாலே பரவு; அது நன்னெறியாகும்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பாசமும் கழிக்ககில்லா அரக்கர் - "கோடி மாதவங்கள் செய்"தா ராயினும் அவையெல்லாம் வினைகளைப் பெருக்க எதுவாயினவேயன்றி, வினை கழிக்க ஏதுவாகாமற் கழிந்தன; அலர்கள் கொண்டு நினைமின் - எனக் கூட்டுக. மதி - சிவபூசை செய்தலே பாதகங்களைத் தீர்க்க வல்லது என்று சிவாகமங்களிற் கண்ட உண்மையிற் செலுத்திய அறிவு. தேசம் - தேசு - சிவவொளி. அம் - சாரியை. - (2) முற்றின நாள்கள் - ஆயுளின் எல்லை முடியும் அளவு கூடிற்று. பற்றி - இத்தலத்தைப்பற்றி நின்று. கடவுள் எங்கு நிறைந்துள்ளவ ராயினும் அவரைக் குறிவைத்த ஓரிடத்திற்கொண்டு பரவுதல் வேண்டுமென்பது. ஈசன் பாலே பரவு - தலத்தைக் குறிவைத்து அங்கு இறைவனைப் போற்றுக என்பது. - (3) கடலிடை மலைகள் தம்மால் அடைத்து - சேதுக்கரை கட்டிய வரலாறு. கருமம் - அரக்கர்வதை. திடல் - தீவு. கட்டிய கரை என்றலுமாம். தொடல் - மனத்தால் எண்ணுதல். ஐவர் - ஐம்பொறி. ஐவரால். - (4) வேட்கை - அன்பின் மிகுதி. - (7) இன்பு உரைத்து - இன்சொற்கூறி. நோக்கினால் - அகத்துள் குறிவைத்த உணர்வினால். - (8) வணங்குவார்க்குத் தாழ்வர் என்று ஆகின்ற தலம் அது ஆம். தாழ்தல் - விரும்புதல். சிவனை விரும்புதலே பெருந்தவம் எனப்படும். தாழ்தல் - தங்குதல் என்று கொண்டு தவத்தில் தங்குவர் என்றலுமாம். - (9) கோடி மாதவங்கள் - பெருவரங்களாகிய ஆற்றல், ஆயுள், ஆயுதம் முதலியவற்றைப் பெறுவதற்காக இராவணன் சிவபெருமானை நோக்கிப் பலகோடி காலம் செய்த அருந்தவங்கள். தேடி - தான் தாபித்துப் பூசிக்க ஏற்ற சிவக்குறியைக் குறித்த காலத்தில் அனுமன் கொணரத் தாழ்த்தமையால் வேறு திருவுருவைத் தேடி அமைத்து. - (10) மாட்டி - அழித்து. - (11) திரைகள் முத்தால் வணங்கும் - திருவிராமேச்சுரத்தைக் கடலரசன் அலையாகிய கைகளால் முத்துக்களைத் தூவி வணங்குகின்றான் என்பது; தற்குறிப்பேற்றம். உரைகள் பத்து - பதிகப் பாடல் பத்து. குறிப்பு :- இராமனைத் திருமாலின் அவதாரங்களுள் வைத்துப் பேசியது இத்திருப்பதிகம். இராமாயணச் சரித வரலாறுகளும் குறிக்கப்பட்டன.

தலவிசேடம் :- திருஇராமேச்சுரம் - பாண்டியநாட்டின் எட்டாவது தலம். இராமனால் தாபித்து வழிபடப் பெற்ற தலமாதலின் இப்பெயரெய்தியது. இராவணனாதி அரக்கர் குலத்தை அழித்த பழி போகும்படி இராமன் இங்கு மணலாற் சிவக்குறி நிறுவிப்பூசித்த வரலாறும், அதன் காரணமாய் நின்ற இராமாயண வரலாறுகளும் திருப்பதிகங்களுட் கூறப்பட்டன. இராமனதுவிருப்பின்படி அனுமன்