பக்கம் எண் :


696திருத்தொண்டர் புராணம்

 

களை உணர்ச்சியிற் றழுவிக்கொண்ட சிந்தையும் ஆக இவ்வாறுள்ள நீர்மையில் சரித்து ஒழுகியருளினர்.

411

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1675.(வி-ரை.) அங்குறைந்து - பல நாட்கள் நாயனார் திருவிராமேச்சுரத்திற்றங்கி இருந்தருளினர் என்பது. இவ்வாறே ஆளுடைய பிள்ளையாரும் "நாதர்தமை நாடோரும் வணங்கி யேத்தி நளிர்வேலைக் கரையினயந் திருந்தாரன்றே" (திருஞான - புரா - 889); "அந்நகரி லமர்ந்தங்க ணினிது மேவி" (மேற்படி 890) என்பவை காண்க.

அருள் சூடி - திருவருள் விடைபெற்று என்ற பொருளில் வந்தது. அடிசூடி - என்ற பாடமும் பொருந்தும்.

தமிழ் நாட்டுப் புறம்பணை சூழ் - தமிழ்நாட்டிலே, வயல்களால் எப்புறமும் சூழப்பட்ட. பணை - பண்ணை; மருத நிலம். நெல்வேலி என்ற பெயரின் காரணத்தை விளக்கும் வகையால் உடம்பொடு புணர்த்தி ஓதினார்.

நெல்வேலி - கானப்பேர் முதலா - எண்ணும்மைகள் தொக்கன.

செங்கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் - காளை வடிவத்தோடு இறைவர் எழுந்தருளியிருக்கும் தலம் என்பது குறிக்க விடையார் என்றார். சுவாமி பெயர் காளீசுவரர் என்பதும், இத்தலம் காளையார் கோயில் என வழங்கப்படுவதும் கருதுக. "காளையாந் திருவடிவாற், செங்கையினிற் பொற்செண்டுந் திருமுடியிற் சுழியமுடன், எங்குமிலாத் திருவேட"த்தைக் (கழறிற் - புரா - 112) கனவில் ஆளுடைய நம்பிகளுக்குக் காட்டியருளிய வரலாறும் இங்கு நினைவு கூர்தற்பாலது.

விடையார் - விடையின் வடிவோடு வீற்றிருப்பவர் என்ற குறிப்பும் தந்து நின்றது.

காளப்பேர் - காளையார் கோயில் எனவழங்கும் தலம்.

எங்கும் - நாடு எங்கும். நிகழ் - விளங்கும்.

இறைஞ்சுவார் - இறைஞ்சுவாராகித் - தொழுது என மேல்வரும் பாட்டில் வினை யெச்சங்களுடன் கூட்டிமுடிக்க.

திருநெல்வேலி - திருக்கானப்பேர் - இத்தலப்பதிகங்களும், பாண்டி நாட்டில் நாயனார், தானங்கள் எல்லாம் புக்கிறைஞ்சுவார் என்றதனாற் கருதப்படும் ஏனைய தலங்களின் பதிகங்களும் கிடைத்தில!

410

1676.(வி-ரை.) பலவகையாலும் - யாப்பின் வகையும், பண்ணின்வகையும் குறித்தது.

வழுவில் திருப்பணி - கைத்தொண்டாகிய திருவுழவாரப்பணி, திருவலகு முதலாயின; வழுவில் - குற்றமில்லாத. இதனால் அவ்வத்திருப்பணிகளுக்கு ஆகமங்களின் விதித்தவகையில் சிறிதும் வழுவில்லாது பணிசெய்யும் நியதி குறிக்கப்பட்டது.

வழு - இல் - வழுவினை இல்லையாகச் செய்யும் என்றலுமாம். வழுவாவது ஆணவ மலத்தின் விளைவாகிய பிறவிக் குற்றம்.

மனம் கசிவு உற்று - கசிவு உறுதல்; உள்ளே ஊற்றுப்போல எப்போதும் பெருக உருகி நிற்றல்.

எப்பொழுதும் - கசிவுற்று என்றும், எப்பொழுதும் - பொழி புனல் என்றும் இருவழியும் கூட்டியுரைக்க இடையில் வைக்கப்பட்டது. மனம் கசிய அதனால் புனல் பொழியும் என்று காரணமுணர்த்தும் முறையில் வைக்கப்பட்டதும் காண்க.


திரு இராமேச்சுரம்