1679. | நின்றதிருத் தாண்டகமு நீடுதனித் தாண்டகமும் மன்றுறைவார் வாழ்பதிகள் வழுத்துதிருத் தாண்டகமும் கொன்றைமலர்ச் சடையார்பாற் குறைந்தடைந்த நேரிசையுந் துன்றுதனி நேரிசையு முதலான தொடுத்தமைத்தார்; |
414 1680. | ஆருயிரின் றிருவிருத்தந் தசபுரா ணத்தடைவும் பார்பரவும் பாவநா சப்பதிகம் பன்முறையும் நேர்படநின் றறைகூவுந் திருப்பதிக முதற்பிறவும் பேரருளின் கடலளிக்கும் பெருமானைப் பாடினார். |
415 1678.(இ-ள்.) வெளிப்படை. பொய்கையினாற் சூழப்பட்ட பூம்புகலூர்த் திருக்கோயிலினுள் எழுந்தருளிய தூயராகிய சிவபெருமானது மலர்போன்ற திருவடிகளை வணங்கி, நைந்து கரையும் மனத்தின் எழும் அன்பினோடு, நாடோறும், திருமுன்றிலிலே அன்பு கலந்த கைத்திருத்தொண்டு செய்து மிகுந்த காதலுடன் தங்கியிருந்த நாள்களில் எண்ணில்லாத வளப்ப மிக்க தமிழ்மாலை அருளிச் செய்வாராகி, 413 1679.(இ-ள்.) வெளிப்படை. நின்ற திருத்தாண்டகமும், நீடியுள்ள தனித்திருத்தாண்டகப் பதிகங்களும், அம்பலத்தாடும் இறைவர் எழுந்தருளியுள்ள திருத்தலங்களைப் போற்றுகின்ற க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகமும், கொன்றை மலர் சூடிய சடையினையுடைய சிவபெருமானிடம் குறைந்து அடையும் கருத்தினை உட்கொண்ட குறைந்த திருநேரிசைப் பதிகங்களையும், பொருந்திய தனித் திருநேரிசைப் பதிகங்களையும், இவை முதலாகிய பலவற்றையும் சேர்த்து அமைத்தருளியதுடன், 414 1680.(இ-ள்.) வெளிப்படை. ஆரூயிர்த் திருவிருத்தமும், தசபுராணத் திருப்பதிகமும், உலகம் போற்றியுய்யும் பாவநாசத் திருப்பதிகமும், பலமுறையும் நேர்படும்படி நின்று இறைவரைக் கருதி "சரக்கறையோ" என்று அறை கூவும் சரக்கறைத் திருப்பதிகமும், என்று இவை முதலாகிய பிற பதிகங்களையும் பேரருட் கடலை அடியார்களுக்கு அளிக்கும் சிவபெருமானைப் பாடியருளினார். 415 இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. 1678.(வி-ரை.) பொய்கைசூழ் பூம் புகலூர் - பொய்கையினடுவுள் பூத்த தாமரைபோலப் பொய்கை சூழ்ந்து அமைந்த திருக்கோயில் என்பது குறிப்பு. பொய்கை - தெய்வத் தீர்த்தம். புனிதர் - புனிதஞ் செய்பவர். புனிதம் - தூய்மை. உயிர்களை ஆணவக் கறைபோக்கித் தூய்மையாக்குபவர். திருவடி சேரும் சரிதக் குறிப்பு. நையும் மனப்பரிவு - 1676-ல் கூறிய மனநிலை. "மெய்ப்பொருள்தான் எய்தவரும் அந்நிலைமை அணித்தாக" (1690) எனவரும் நிலையின் முன்னர்ச் சார்ந்து நிற்கும் உள்ளங் கசிந்தூறும் அன்பு. திருமுன்றில்...........திருத்தொண்டு - உழவாரத் திருப்பணியும் அவ்வாறுள்ள பிறவும். வண் தமிழ் மாலைகள் - தேவாரத் திருப்பதிகங்கள். இத்திருப்பதிகங்கள் வேதங்களின் பொருட்டுணிபுகளாய், முடிந்த முடிபுகளாகிய சைவ சித்தாந்த உண்மைகளையும், மறை முடிபாகிய துணிவுகளையும் எடுத்து அறிவுறுத்தும் உறைப்பினைக் காட்ட வண்தமிழ் என்றார். பதிகக் குறிப்புக்கள் பார்க்க. இவை மேல்வரும் இரண்டு பாட்டுக்களிலும் எடுத்துக் காட்டப்பட்டன. |