மாற்றம் - அவர் எண்ணியதற்கு மாறுபட்ட விடையாதலின் மாற்றம் என்ற பெயராற் கூறினார். அன்று - அற்றைநாளிரவே - அல்லாகும் பொழுதே. புகுந்தபடி - தான் போந்ததும் அவர் விடையளித்ததும் ஆகிய செய்திகள் நிகழ்ந்த படியினை. புகுதல் - போதல் - நிகழ்தல். படி - பெயர். படியினை; இரண்டனுருபு தொக்கது. நன்கறியார் - அவர்க்குரைப்ப - என்பனவும் பாடங்கள். 58 1324. | அவ்வார்த்தை கேட்டலுமே யயர்வெய்தி "யிதற்கினியான் எவ்வாறு செய்வ?" னென வீசரருள் கூடுதலால் "ஒவ்வாவிப் புன்சமயத் தொழியாவித் துயரொழியச் செவ்வாறு சேர்திலக வதியார்தாள் சேர்வ"னென, |
59 1325. | எடுத்தமனக் கருத்துய்ய வெழுதலா லெழுமுயற்சி யடுத்தலுமே யயர்வொதுங்கத் திருவதிகை யணைவதனுக் குடுத்துழலும் பாயொழிய, வுறியுறுகுண் டிகையொழியத், தொடுத்தபீ லியுமொழியப் போவதற்குத் துணிந்தெழுந்தார், |
60 1326. | பொய்தருமா லுள்ளத்துப் புன்சமண ரிடங்கழிந்து மெய்தருவா னெறியடைவார் வெண்புடைவை மெய்சூழ்ந்து கைதருவார் தமையூன்றிக் காணாமே யிரவின்கட் செய்தவமா தவர்வாழுந் திருவதிகை சென்றடைவார், |
61 1327. | சுலவிவயிற் றகங்கனலுஞ் சூலைநோ யுடன்றொடரக் குலவியெழும் பெருவிருப்புக் கொண்டனையக் குலவரைபோன் றிலகுமணி மதிற்சோதி யெதிர்கொடிரு வதிகையினிற் றிலகவதி யாரிருந்த திருமடத்தைச் சென்றணைந்தார். |
62 1324. (இ-ள்.) வெளிப்படை. அந்த வார்த்தை கேட்டலும் சோர்வு அடைந்து "இனி, இந்நிலையினுக்கு யான் எவ்வாறு செய்வேன்" என்று மயங்கியபோது, சிவபெருமான் றிருவருள் கூடியதாகையால், "பொருந்தாத இந்தப் புன்மைச் சமயத்தினில் ஒழியாத இத்துன்பம் ஒழியும்படி செந்நெறியிற் சேர்ந்த திலகவதியார் சேவடிகளைச் சேர்வேன்" என்று உட்கொண்டு, 59 1325. (இ-ள்.) வெளிப்படை. எடுத்த மனக்கருத்து உய்யும்படி எழுதலாலே, எழுகின்ற முயற்சி கூடியதாக, சோர்வு ஒதுங்கிப் போகத் திருவதிகையினைச் சேர்வதற்கு, உடுத்துழன்ற பாய் ஒழியவும் உறியிற்றூக்கிய குண்டிகை ஒழியவும் தொடுத்த மயிற்பீலியும் ஒழியவும் போவதற்குத் துணிந் தெழுந்தனராகி, 60 1326. (இ-ள்.) வெளிப்படை. பொய்யினைத் தரும் மயக்க முடைய உள்ளத்துப் புன்சமணர்களது இடத்தினை நீங்கி மெய்யினைத் தருபவனது நன்னெறியினை அடைபவராய், அதற்கேற்றபடி வெண்புடைவையினைத் தமது மெய்யிற் சுற்றிக்கொண்டு, கை கொடுப்பவர்களைப் பற்றி ஊன்றிக்கொண்டு, சமணர்கள் காணாதபடி, இரவிலே, தவஞ்செய்யும் மாதவர் வாழ்கின்ற திருவதிகையினைச் சென்று அடைவாராகி, 61 1327. (இ-ள்.) வெளிப்படை. சுழற்றிச் சுழற்றி வயிற்றினுள்ளே பற்றி எரியும் சூலைநோய் தம்முடனே தொடர, குலவியெழுகின்ற பெருவிருப்பம் புணையாகத் தம்மைக்கொண்டு செலுத்தப் பெருமலைபோல விளங்கும் திருமதிலின் ஒளி |