நின்னையெப் போது நினையலொட் டாய்நீ நினையப்புகிற் பின்னேயப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி உன்னையெப் போது மறந்திட் டுனக்கினி தாவிருக்கும் என்னையொப் பாருள ரோ? சொல்லு வாழி யிறையவனே. 4 பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய் இருங்கடன் மூடி யிறக்கு; மிறந்தான் களேபரமுங் கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய் வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே. 7 வானந் துளங்கிலென்? மண்கம்ப மாகிலென்? மால்வரையுந் தானந் துளங்கிக் தலைதடு மாறிலென்? றண்கடலும் மீனம் படிலென்? விரிசுடர் வீழிலென்? வேலைநஞ்சுண் டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே. 8 சிவனெனு நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான் அவனெனை யாட்கொண் டளித்திடு மாகி லவன்றனையான் பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால் இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே. |