பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்719

 

மேல்வரும் பாட்டிற் பாராட்டுகின்றனர். - (4) மறந்தாரையும் நினைந்தருளும் சிவனது அருளின் பெருமையை வியந்தது. - (5) தவளப் பொடி - திருநீறு. இகழ்திர் - இகழ்விரோ?இகழாதீர். தொழப்படும் தேவர் - பிறர் யாவராலும் தொழப்படும் பெரு நிலையுள்ள பெருந்தேவர்களால். தொழுவிக்கும் - தேவர்கள் வணங்கும்படி செய்வன். "வணங்குறீரரனை யென்றும் வானவர் வணங்க வைப்பன்" (சித்தி 2 - 96). - (6) "சிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ்சேர வந்தவர்" (உந்தி.) கண்ணகத்தான் முதலியன அவர் எப்போதும் என்னுள்ளே தங்கக் கண்டுகொண்டும், நினைத்துக் கொண்டும், வணங்கிக்கொண்டும் இருப்பேன் என்ற குறிப்பாம். - (7) சிவனது முழுமுற்றன்மையும் அநாதியாந் தன்மையும் குறித்தது. வருங்கடன் மீள - உலகம் புனருற்பவமாகும் பொருட்டு. வீணை வாசிக்கும் - உலக காரணமாகிய மாயையை எழுப்பும் பொருட்டு நாத முழக்குச் செய்வர். "மிக நல்ல வீணை தடவி" (பிள் - தேவா); "ஓதத் தொலி மடங்கி யூருண் டேறி யொத்துலக மெல்லா மொடுங்கியபின், வேதத் தொலி கொண்டு விணை கேட்பர் வெண்காடு மேவிய விகிர்த னாரே" (தாண்). களேபரம் - உடம்பு; காயாரோகணர். காலாந்தரத்தில் பிரம்ம விட்டுணுக்கள் அழிந்துபடுவர் என்பது. "நூறு கோடி பிரமர்க ணொங்கினார், ஆறு கோடி நாராயணரங்ஙனே" (குறுந்.) கங்காள மூர்த்தத்தின் உள்ளுறை விளக்கியது. - (8) சிவனடியாரது தன்மையும் பெருமையும் விளக்கியது. வானந் துளங்குதல் - மலை நிலை பெயர்தல் - மண் கம்பமாகுதல் - விண்மீன் வீழ்தல் முதலியவை உலகத்தார் யாவரும் அஞ்சும் அழிவு காட்டும் உற்பாதங்கள் என்பர். இவைகட்கும் அடியவர் ஒரு சிறிதும் அஞ்சார். "உடையார் ஒருவர் தமர்நாம்; அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை" (தேவா); 1381 பார்க்க. வேலை நஞ்சுண்டு ஊனமொன்றில்லா - அத்தன்மையா ராதலின் அவரடியார்க்கும் அத்தன்மை செய்வார் எனக் காரணக் குறிப்பு. - (9) பல காலமும் விடாதுபற்றி அழைத்தால் அதன் உபத்திரவம் பொறுக்கலாற்றாது வெளிப்பட்டருளுவர் என்று உலகியல்புபற்றி நகைச் சுவைபடக் கூறியது. சிவன் எனும் நாமம் தனக்கே உடைய - சிவன் - எண்குணமுடைமை - மங்கலம் - நிறைவு - கலப்பு முதலிய இறைமைக் குணங்களை உணர்த்தும் பெயர். சிவன் என்ற சொல்லுக்குப் பேரின்பத்துக்குக் காரணன் என்றும், முற்றுணர்வினன் என்றும், தூய தன்மையன் என்னும் மூன்று பொருள்கள் கண்டு சிவஞானபோத 5-ம் சூத்திர உரையில் "மன்னு சிவன்" என்னும் வெண்பாவின் கீழ் எமது மாதவச் சிவஞான முனிவர் உரைத்தவை ஈண்டுச் சிந்திக்கற்பாலன. தனக்கே - ஏகாரம் பிரிநிலை. வேறெத்தெய்வத்துக்கும் இது பொருந்தாதென்பது. தேற்றமுமாம். பவன் எனும் நாமம் பிடித்து - சிவாதி எட்டு - பவாதி எட்டு என்று; சிவன் - பவன் என்ற இரண்டுமே சிவனது எண்ணாயிரங்கோடி பேர்களுள்ளும் சிறந்தனவாக எடுத்து ஓதப்படுவன; ஆதலின் அவ்விரண்டும் பற்றிக் கூறினார். பிடித்து - இடைவிடாது பற்றிக்கொண்டு. - (10) நின்னை ஒப்பார் - உன்னை ஒப்பார் என்று தம்மை எண்ணும் தேவர். "மூவரென்றே யெம்பிரா னொடுமெண்ணி" (திருவா). நின் பெருமை நின்னை யொப்பாரென் றெண்ணுந் தேவருங் காண்பரிதாகலின் என்னை ஒப்பார் எங்ஙனம் காண்பர் என்க.

பொது - தனித் திருவிருத்தம்

XIII திருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

பவளத் தடவரை போலுந்திண் டோள்களத் தோண்மிசையே
பவளக் குழைதழைத் தாலொக்கும் பல்சடை; யச்சடைமேற்