பவளக் கொழுந்தன்ன பைம்முக நாகமந் நாகத்தொடும் பவளக்கண் வால மதியெந்தை சூடும் பனிமலரே. 1 முருகார் நறுமல ரிண்டை தழுவிவண் டேமுரலும் பெருகா றடைசடைக் கற்றையி னாய்பிணி மேய்ந்திருந்த விருகாற் குரம்பை யிதுநா னுடைய திதுபிரிந்தாற் றருவா யெனக்குள் றிருவடிக் கீழொர் தலைமறைவே. 2 மூவா வுருவத்து முக்கண் முதல்வ!மீக் கூரிடும்பை காவா" யெனக்கடை தூங்கு மணியைக்கை யாலமரர் நாவா யசைத்த வொலியொலி மாறிய தில்லையப்பாற் றீயா யெரித்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே. 3 துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறவ னேறிவந்து பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே. 8 கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கட னீர்சுருங்கிப் பன்னெடுங் கால மழைதான் மறுக்கினும் பஞ்சமுண்டென் றென்னொடுங் சூளறு மஞ்சனெஞ் சேயிமை யாதமுக்கட் பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே. |