கழிவில்; மீள் வந்து பிறப்பது உறுதி. பிறந்தால் மறப்பன் கொலோ? - மறு பிறப்பில் மறந்து விடுவேனோ என்ற அச்சக் குறிப்பு. "புழுவாய்ப் பிறக்கினும்" என்று வரங்கேட்டமை காண்க. இதில் பஞ்சாக்கினி வித்தை கூறப்பட்டுள்ளது. - (9) அனகன் - கடவுள். - (10) கல் நெடுங்காலம் வெதும்பி - மலைகள் மழை பெயலில்லாமையால் சூடுபட்டு வெதும்பியதனால். கல் - மலை குறித்தது. கல்லில் மழை மறுத்தமையால் மழையின்றிக் கடலும் சுருங்கிற்று. "நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும்" (குறள்). சுருங்கு - சுருங்க. எச்சத்திரிபு. சுருங்கும்படி - மழை மறுக்கினும். சூளறும் - சூளறுத்துச் சொல்லுகின்ற நெஞ்சே அஞ்சல் என்க. அஞ்சாமைக்குக் காரணம் பொற்குன்ற முண்டு என்றவாறு. - (11) காலன், உதைபட்டாலும், பிரம விட்டுணுக்கள் அறியாத திருவடியை அறிந்து பயன் பெற் றிறுமாந்தனன் என்று சுவைபடப் புகழ்ந்த இலேசவணி. பாலன் - மார்க்கண்டேயர். பொது - "சிவனெனுமோசை" XIVதிருச்சிற்றம்பலம் | பண் - பியந்தைக்காந்தாரம் |
| சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே யவனுமோ ரைய முண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவம் கவணள வுள்ள வுள்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில் அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு மகனேர்வர் தேவ ரவரே. 1 விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனுந் திரிதரு வாயு வல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில் அரிதரு கண்ணி யாளை யொருபாக மாக வருள்கா ரணத்தில் வருவார் எரியர வார மார்ப ரிமையாரு மல்ல ரிமைப்பாரு மல்ல ரிவரே. 2 புதுவிரி பொன்செ யோலை யொருகாதொர் காது சுரிசங்க நின்று புரள விதிவிதி வேதகீத மொருபாடு மோத மொருபாடு மெல்ல நகுமால் மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாக மாக வருவர் இதுவிவர் வண்ண வண்ண மிவள்வண்ண வண்ண மெழில்வண்ண வண்ணமியல்பே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- இறைவரது சிவன் என்ற பெயரின் இயல்பினையும், இறைவரதியல்பினையும், இறைவர இறைவியார தியல்பினையும் பலபல திறம்படக்கண்டு போற்றியது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சிவனெனு மோசை யல்லாது உலகில் செம்மையுளது உண்டோ?. உளதே - ஏகார வினா இன்மை குறித்தது. அல்ல துளதே - எதிர்மறை வினா உறுதி குறித்தது. ஒலி என்னாது ஓசை என்றது அச்சத்தமே பயன் தருமென்ற குறிப்பு. அறையோ! - அறைகூவி அழைத்துக் கேட்டவாறு. சொல்வதற்குண்டோ? என்றுரைப்பாருமுண்டு. திரு - முத்தித் திரு. திருநின்ற செம்மை - செம்மை - செம்பொருள். முத்திதரும் செம்பொருள் என்க. நாயனார் சிவனெனு மோசையில் அழுந்தியதுபற்றியே நமச்சிவாயப் பதிகம் எழுந்ததும், "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்" என்று திருத்தொண்டத் தொகையுட் போற்றப்பட்டதும் காண்க. உண்ணி - உண்பவன். கரிகாடுகோயில் - "கோயில் சுடுகாடு" (திருவாசகம்). ஓடுகலனாவது - என்க. கலன் - உண்கலம். பெற்றி - வேடம். நீர்மை - அருட்டன்மை. கண்டும் - கண்டவதனால். அகன் நேர்வர் - மனம் பற்றுவர்.-(2) இதில் அல்லர் என்ற பலவும் இறைவர் உலகெல்லாவற்றுக்கும் வேறாந்தன்மை பற்றி போற்றப்பட்டது. விரிகதிர் - மதி - முதலியன எண்வகை மூர்த்தங்கள். இவை |