சிவனது திருமேனியாவன, சிவன் இவற்றின் வேறுமாவன் என்பது. "வேறாய்"; "வேறு மானான்"; (பிள் - தேவா). திரிதரு - செறு - தெளி என்ற அடை மொழிகள் அதனதன் தன்மை குறித்தன. இமையார் - தேவர். இமைப்பார் - மனிதர். இமையார் - இமைப்பார் - உடன்பாடு மெதிர்மறையுமல்லாத தன்மையினையும் சொற்சிலேடை வகையாற் குறிப்பது. இவரே - தேற்றம். - (3) தேய்பொடி........திங்கள் திலகம் பதித்த நுதல் - "அருகுதிரு முடிச்செருகு மந்தியிளம் பிறை தன்னைப், பெருகுசிறு மதியாக்கிப் பெயர்த்துச் சாத்தியதென்ன,........திருநுதன் மேற்றிருநீற்றுத் தனிப்பொட்டு" (சிறுத் - புரா - 28). தேய்பொடி - திருநீறு. நீலவொளி - விடத்தின் கருமை. இவர் ஆடு மாறும் - இவள் காணுமாறும் - இவர்க்கு இயல்பு. ஐயனது அருட்கூத்தை அம்மை கண்டு உலகுக்கருள்கின்றாள் என்ற சாத்திரக் கருத்து. இயல்பே - அருட்குணம். ஏகாரம் தேற்றம்.-(4) காடு நாடு - காட்டினை நாடாக. - (5) அடிநீழலாணை கடவாது அமர ருலகே - சிவனது முழுமுதற் றன்மை. - (6) அவள் வண்ணம் அன்ன வண்ணம்; அவர் வண்ணம் அழலே என்க. அவள் அன்னம்போல்வள்; அவர் அழகிய எரிபோல் உருவினர். வண்ண (அழகிய) வண்ண அழல் - எரிக்காமல் அழகு பொருந்திய நெருப்பு. - (10) ஓலை ஒருகாது - சுரி சங்கு ஒருகாது - சங்கு - சங்கக் குழை. விதி விதி - விதிகளை விதிக்கின்ற. சடை பாகம் - இறைவர் பாகம்; குழல் பாகம் - அம்மை பாகம். இவர் வண்ணம் - இவள் வண்ணம் - நிரனிறை. "நினைந்த" திருநேரிசை XVதிருச்சிற்றம்பலம் | நேரிசை |
| முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்குங் கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை யமரர் சூடும் வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற அத்தனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே. 1 விண்ணிடை மின்னொப் பானை மெய்ப்பெரும் பொருளொப் பானைக் கண்ணிடை மணியொப் பானைக் கடுவிருட் கடரொப் பானை எண்ணிடை யெண்ண லாகா விருவரை வெருவ நீண்ட அண்ணலை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே. |
9 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு : முத்து - வேத வேள்விக் கேள்வி - முன்பன் - எங்கள் அன்பன் - கரும்பினுமினியான் - பெரும்பொருட் கிளவியான் - இறப்பொடு பிறப்பிலான் - நிருத்தன் - அங்கையேற்ற நெருட்பன் - நீதியால். நினைப்புளான் - நினைப்பவர் மனத்துளான் . மெய்ப்பொருள் பொருளொப்பான் - கண்ணிடை மணியொப்பான் - கடுவிருட் சுடரொப்பான் - என்றிவ்வாறெல்லாம் எண்ணிப் போற்ற நின்ற இறைவனை நினைந்த நெஞ்சம் அழகிதாகவும் நேர்படவும் நினைந்தவாறு. நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தது என்று நினைப்பினைப்பற்றிக் கூறுவதால் இப்பதிகம் நினைந்த திருநேரிசை எனப்பட்டது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) முத்து - நவமணிகளுட் சிறப்புப்பற்றி முதலில் வைத்தார். 492 - 663 - பார்க்க. மணி - முத்து, பவளம், வயிரம் ஒழிந்த ஏனை மணிகள். முழுமுதற் பவளம் - தீட்டப்படுதல் வேண்டாது முழுமையாய்க் கொடியாய் விளைவது பவளத்தின் சிறப்பு. வேதவேள்விக் கேள்வி - வேதங்களிலும், வேத விதிப்படி செய்யப்படும் சிவவேள்விகளிலும் முதல்வனாகக் கேட் |