அண்டங் கடந்த சுவடு முண்டோ? வனவலங்கை யேந்திய வாட லுண்டோ? பண்டை யெழுவர் படியு முண்டோ? பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ? கண்ட மிறையே கறுத்ததுண்டோ? கண்ணின்மேற்கண்ணொன்றுகண்டதுண்டோ? தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ? சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே. விரையுண்டவெண்ணீறு தானுமுண்டு; வெண்டலைகை யுண்டொருகை வீணையுண்டு; சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு; சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு; அரையுண்ட கோவண வாடை யுண்டு; வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு; இரையுண் டறியாத பாம்புமுண்டு; இமையோர் பெருமா னிலாத தென்னே! 9 மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையா னென்னி னல்லான் ஒப்புடைய னல்ல னொருவ னல்ல னோரூர னல்லனோ ருவம னில்லி யப்படியு மந்நிறமு மவ்வண் ணமு மவனருளே கண்ணாகக் காணி னல்லால் இப்படியு னின்நிறத்த னிவ்வண் ணத்த னிவனிறைவ னென்றெழுதிக் காட்டொணாதே. 10 பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்; புலித்தோ லுடைகண்டேன்; புணரத் தன்மேல் மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்; மிளிர்வதொரு பாம்பு மரைமேற் கண்டேன்; அன்னத்தே ரூர்ந்த வரக்கன் றன்னை யலர வடர்த்திட்ட வடியுங் கண்டேன்; சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்; சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே. |