கொண்டுரைப்பார் இராமநாதச் செட்டியார். ஓடும் - எண்ணின்கண்வந்தன என்பர். இங்குச் "சொல்லால் வேறுபாடு உணர்ந்தாரே யல்லாமல்" என்றுரைப்பாருமுண்டு. துணிந்து இருந்த - இவ்வறிவினிடை ஊற்றி நிற்றல் ஏனையோர்க்கரிது என்பார் துணிந்து என்றார். இருந்த - அத்துணிபில் ஊன்றியிருத்தல். ஓடும் - இணையாக மாட்டாது தோல்வியுற்று ஓடும் என்றது குறிப்பு. வில் ஓடும் நுதல் - புருவங்கள் வில்போன் றிருத்தலானும் வில் ஓடும் எனப்பட்டது. "செருவெழும் தனுவதொன்றும் சேமவில் ஒன்றுமாக" (திருஞான - புரா - 1097) உருவகம். வில் ஓடும் - என்றது புருவங்கள் வளைந்தும் நிமிர்ந்தும் அசைவு காட்டுதலை. "பொருகயற் கண்புடை பெயர" (1685) ஆடுவாராதலின் கண் பெயர்தலுக் கேற்பப் புருவங்கள் ஓடும் தன்மை படைத்தன என்க. ஓடும் - உவம உருபு. விசும்பூடு - விசும்பினின்றும்; விண்ணுலகினின்றும். இவர்கள் தெய்வ அரம்பையர். இழிந்தார் - இறங்கி வந்தனர். தஞ்செயல் நாயனார்பாற் செலுத்தமாட்டாது "யாது மொரு செயலில்லாமையி லிறைஞ்சி" (1689) அகல்வார் என்றதும் குறிப்பு. 418 1684. | வானகமின் னுக்கொடிகள் வந்திழிந்தா லெனவந்து தானநிறை சுருதிகளிற் றகுமலங்கா ரத்தன்மை கானவமு தம்பரக்குங் கனிவாயி லொளிபரப்பப் பானனெடுங் கண்கள்வெளி பரப்பியிசை பாடுவார்; |
419 1685. | கற்பகப்பூந் தளிரடிபோங் காமருசா ரிகைசெய்ய வுற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடுங் கைபெயரப் பொற்புறுமக் கையின்வழி பொருகயற்கண் புடைபெயர வற்புதப்பொற் கொடிநுடங்கி யாடுவபோ லாடுவார்; |
420 1686. | ஆடுவார்; பாடுவா; ரலர்மாரி மேற்பொழிவார்; கூடுவார் போன்றணைவார்; குழலவிழ விடைநுடங்க வோடுவார்; மாரவே ளுடன்மீள்வ; ரொளிபெருக நீடுவார் துகிலசைய நிற்பாரு மாயினார். |
421 1684. (இ-ள்.) வானகம்.......என வந்து - ஆகாயத்தினின்றும் மின்னற்கொடிகள் வந்து கீழிறங்கியனபோல வந்து; தானநிறை......தன்மை - உரிய தானங்களினின்று நிறைந்து வரும் சுருதிகளினால் உண்டாகும் தக்க இனிமையுடனே; கான அமுதம்......பரப்ப - இசையமுதத்தினைப் பரவச் செய்கின்ற கொவ்வைக் கனி போன்ற வாயினிடத்து ஒளி விளங்க; பானல்..........பரப்பி - நீலமலர் போன்ற நெடிய கண்களை வெளியிற் பரப்பி; இசை பாடுவார் - இவ்வாறு இசையினைப் பாடுவாராகி, 419 1685. (இ-ள்.) கற்பகம்......செய்ய - கற்பக மரத்தின் இளந்தளிர்கள் போன்ற அடிகள், செல்கின்ற அழகிய சாரிகை செய்யவும்; உற்பலம்........பெயர - செங்கழுநீர் மலரரும்போல மெல்லியனவாய விரல்களினால் வர்த்தனையோடு சுழற்றிக் கைகள் பெயரவும்; பொற்புறும் அக் கையின்வழி - அழகு பொருந்தும் அக் கைகளின் வழியே; பொரு.......பெயர - பொருகின்ற கயல் மீன் போலும் கண்கள் புடை பெயர்ந்து செல்லவும்; அற்புதம்.......போல் - அற்புதமுடைய பொன்னாலாகிய கொடிகள் ஒசிந்து ஆடுகின்றவைபோல; ஆடுவார் - ஆடுவார்களாகி, 420 |