பக்கம் எண் :


728திருத்தொண்டர் புராணம்

 

1686. (இ-ள்.) ஆடுவார் - ஆடுவார்களும்; பாடுவார் - பாடுவார்களும்; அலர்.........பொழிவார் - பூக்களை மழைபோல மேலே பொழிவார்களும்; கூடுவார் போன்று அணைவார் - தழுவுபவர்போல வந்து பக்கத்திற் சேர்வார்களும்; குழல்........ஓடுவார் - கூந்தல் அவிழவும் இடை துவளவும் ஓடுவார்களும்; மாரவேளுடன் மீள்வர் - காமனோடும் மீள்வார்களும்; ஒளி பெருக......நிற்பாரும் - காம வொளி பெருகக் காணும்படி நீண்ட உடை நழுவ நிற்பார்களும்; ஆயினார் - இவ்வாறு பல திறப்படச் செயல்களைச் செய்வாராயினர்.

421

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1684. (வி-ரை.) வானகம் - வானிடை நின்றும். ஐந்தனுபு தொக்கது.

மின்னுக் கொடிகள் - உகரம் சாரியை. வந்து - முன்னையது மின் கொடிக்கும், பின்னையது மடவார்க்கும் கூட்டுக.

இழிந்தால் என - இறங்கியது போல; என - உவமவுருபு. உருவும் தொழிலும் பற்றிவந்த உவமம்.

தானம் - இசை பிறக்கும் இடம். "மறைத் தானம்" (949), "கிழமை கொள விடுந்தானம்" (950) "தானநிலைக் கோல்வடித்து" (திருஞான - புரா - 135). உரம், கண்டம், உச்சி முதலிய தானங்கள் என்பர் ஆறுமுகத் தம்பிரானார்; இவை எழுத்தொலி பிறக்குமிடங்கள்.

சுருதி - சுதி என்று வழங்கப்படும். மெட்டு என்பது கிராமியம்.

தகும் அலங்காரத் தன்மை - இசைகளிற் பொருந்தும் இனிமைத் தன்மை. தான நிறை சுருதி - இசை பிறக்கும் மியல்பும், அலங்காரம் - அவ்வாறு பிறந்த இசையை அழகுபடப் பாகுபாடு படுத்து மியல்பும் ஆம். தகும் - அவ்வப் பாட்டுக்கும் பொருளுக்கும் ஏற்றபடி அமைதல் தகுதி எனப்படும்.

கான அமுதம் பரக்கும் - "அமுத இசைக் குழலொலி" (947). அமுதம் என்றது செவிப் புலனிற் சுவைக்கும் இனிமையை. அமுதம் உருவகம். பரக்கும் கனி வாய் - அமுதம் என்றதற் கேற்பக் கனி என்றும், செவி வாயாகத் துய்க்கப்படினும் கருவிகளின் மூலமன்றி இங்கு வாயினின்றும் வழங்கப்படுதலின் வாயின் என்றும் குறிப்பித்து விதந்து ஓதினார். ஒளி - பற்களின் ஒளி என்பாருமுண்டு.

வாயின் ஒளி பரப்ப - ஆடுங் காலத்து, இசைக்கும் பாட்டு மிக ஓசைபடாது மெல்லிதாய் வாயசைவி னளவில் இசைக்கப்படுதலின், வாயின் அசைவு காணப்படும் அளவில் விளக்கமாதலும், வாயின் புன்முறுவலொளியும் குறிக்க வாயின் ஒளி என்றார். ஒலி பரப்ப என்னாது ஒளி பரப்ப என்ற கருத்துமிது. கானம் - செவிப்புலனால் நுகரப்படுவதனை, அமுதம் என்று வாய்ப் புலனுகர்ச்சி பற்றியும், ஒளி என்று கட்புலனுகர்ச்சி பற்றியும் உரைத்த குறிப்பிமிது.

பானல் நெடும் கண்கள் வெளி பரப்பி - பானல் - நீல மலர். நீல மலரின் தன்மை பற்றி நீண்ட என்றது, காமனது ஐந்து மலரம்புகளில் "மலர் நீலங் கொல்லுமத னம்பின் குணம்" என்றபடி, கொல்லுந் தன்மையுடையது நீல மலரம்பு என்பவாதலின், அத்தன்மை குறிப்பதற்கு. நாயனாரையன்றி ஏனையோர் எவரும் இவ்வரம்பையர் கண் வெளி பரப்புதலுக் காளாயினால் இறந்தே பட்டிருப்பர் என்பது குறிப்பு. வெளி பரப்பி - ஒளி பரப்ப - வெளி பரப்பி என்க. கான அமுதம் பரப்பும் வாயின் செயலுக்கேற்பக் கண்களும் வெளி பரப்பின என்க.

வெளி பரப்புதலாவது - கண் பார்வையை வலைபோல வெளியே வீசி அதனுளகப்பட்டாரை வயப்படுத்தும் செயன்முயற்சி. "கண் வலையை வீசியே" (தாயுமானார்).