பக்கம் எண் :


730திருத்தொண்டர் புராணம்

 

இவ்விரண்டு பாட்டானும், பாடலையும் ஆடலையும் கூறிய ஆசிரியர், ஆடல் பாடல்களின் மேல், அவற்றுடன் வடிய காமச்செயன் முயற்சிகளை எல்லாம் தொகுத்து மேல்வரும் பாட்டிற் கூறுவார்.

கை பெயர்ப்பார் - ஆடினார் - என்பனவும் பாடங்கள்.

420

1686. (வி-ரை.) நிற்பாரும் என்ற விடத்திற்போல, ஆடுவார் - பாடுவார் - பொழிவார் - அணைவார் - ஒடுவார் - மீள்வர் - என்ற ஒவ்வொன்றுடனும் எண்ணும் மைகள் விரித்துக் கொள்க.

அலர்மாரிமேற் பொழிதல் - கூடுவார் போன்று அணைதல் - குழல் அவிழவும் இடை நுடங்கவும் ஓடுதல் - மீளுதல் - துகிலசைய நிற்றல் - என்ற இவை காமவிகாரத்தைப் புலப்படுத்தவும் தூண்டவும் மேற்கொள்ளும் செயல்கள்.

மாரவேள் உடன் மீள்வர் - தமது சக்தி போதாமையால் காமனையும் துணை சேர்ந்துக்கொண்டு வருவார்போல என்றது குறிப்பு. இங்கு மாரவேள் என்றது காமம் மீதூர்தற்கு அந்நூலின் வகுத்த பிற செயல்களையும் கொண்டு என்றதாம். இதற்கும் காம மயக்கத்துடன் என்றார் முன் உரைகாரர்கள். அது பொருந்தாமை யறிக.

வார் துகில் ஒளி பெருகுதல் - அசைய - என்றது துகில் அசைதலால் காம மயக்கத்தை மீதூரச் செய்தல். இங்கு ஒளி - என்றது காம இச்சையை. இவ்வாறன்றி ஒளியுடைய துகில் என்று துகிலுக்கு அடைமொழியாக்கி யுரைத்தலுமாம்.

நீடு - வார் - துகில் - நீடுதலும் வார்தலும் கொண்ட உடை. நீடுதல் - நீள முடைமையும், வார்தல் - நேர்மையும் குறித்தன. இப்பாட்டில் ஆடுவார் பாடுவார் - என்ற பிறவற்றிலெல்லாம் ஆர் - என்பவை வினைப்பெயரின் விகுதிகளாக, வகர உடம்படுமெய் பெற்று வார் - என நிற்கவும், நீடு - வார் - என்ற இதனில் வார் - என்பது பண்பு குறிக்கும் உரிச் பார்க்க. வார் - நேர்மையும் நெடுமையுமாகிய பண்புணர்த்தும் உரிச்சொல் என்பது. "வார்தல் போக லொழுகல் மூன்று, நேர்பு நெடுமையுஞ் செய்யும் பொருள்" (தொல் - சொல் - உரி - 23)

ஆயினபின் - என்பதும் பாடம்.

421

1687.

இத்தன்மை யரம்பையர்க ளெவ்விதமுஞ் செயல்புரிய
அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா வன்புருகு
மெய்த்தன்மை யுணர்வுடைய விழுத்தவத்து மேலோர்தஞ்
சித்தநிலை திரியாது செய்பணியின் றலைநின்றார்;

422

1688.

 இம்மாயப் பவத்தொடக்கா மிருவினைக டமைநோக்கி,
"யும்மாலிங் கென்னகுறை யுடையேன்யான்?; றிருவாரூர்
 அம்மானுக் காளானே; னலையேன்மி னீ"ரென்று
"பொய்ம்மாயப் பெருங்கடலு" ளெனுந்திருத்தாண் டகம்புகன்றார்.

1687. (இ-ள்.) இத்தன்மை...புரிய - இவ்வாறு அரம்பையர்கள் எல்லா விதத்தாலும் காமச் செயல்கள் செய்யவும்; அத்தனார்...மேலோர் - அத்தனுடைய திருவடியின்கீழ்ப் பதியவைத்த நினைவு நீங்காத அன்பினால் உருகுகின்ற மெய்த் தன்மை பெற்ற உணர்ச்சியுடைய தூய தவத்தினிற்கும் மேலோராகிய நாயனார்; தம் சித்த நிலை திரியாது - தமது உள்ள நிலையினின்றும் ஒரு சிறிதும் மாறுபடாமல்; செய்பணியின் தலை நின்றார் - தாம் செய்யும் திருப்பணியில் உறைத்து நின்றனராகி,

422