பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்75

 

அணைந்தார்-அணைந்தார் தன்மை சிவஞானபோதம் 12-ம் சூத்திரத்தினுட் பேசப்பட்டது காண்க.

வயிற்றிடும் - வயிற்றிடும் - பெருவியப்பு - என்பனவும் பாடங்கள்.

62

1328.

 வந்தணைந்து திலகவதி யாரடிமே லுறவணங்கி
"நந்தமது குலஞ்செய்த நற்றவத்தின் பயனனையீர்!
 இந்தவுடற் கொடுஞ்சூலைக் கிடைந்தடைந்ததே னினிமயங்கா
 துய்ந்துகரை யேறுநெறி யுரைத்தருளு" மெனவுரைத்து,

63

1329.

 தாளிணைமேல் விழுந்தயருந் தம்பியார் தமைநோக்கி
 யாளுடைய தம்பெருமா னருணினைந்து, கைதொழுது,
"கோளில்பர சமயநெறிக் குழியில்விழுந் தறியாது
 மூளுமருந் துயருழந்தீ! ரெழுந்திரீர்!" எனமொழிந்தார்.

64

1328. (இ-ள்.) வெளிப்படை. வந்து அணைந்து, திலகவதியம்மையாருடைய திருவடிகளின்மேற் பொருந்த வீழ்ந்து வணங்கி, "நந்தமது குலம் செய்த நல்ல தவத்தின் பயன் போன்றவரே! இந்த உடலிற்பற்றிய கொடிய சூலைக்கு மிக வருந்தி உம்மை வந்து அடைந்தேன்; இனி மயங்காமல் உய்ந்து கரையேறும் வழியைத் தேவரீர் கட்டளையிட்டருளுதல் வேண்டும்" என்று சொல்லி,

63

1329. (இ-ள்.) வெளிப்படை. தமது தாள்களின்மேல் விழுந்து வருந்தும் தம்பியார் தம்மைப் பார்த்துத், தம்மையாளுடைய சிவபெருமானுடைய திருவளை நினைந்து கைதொழுது, "நல்ல குறிக்கோள் இல்லாத பரசமயக் குழியில் விழுந்து, மூளும் கொடிய துன்பத்தில் உழன்றீர்! இனி எழுந்திருப்பீராக!" என்று மொழிந்தனர்.

64

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1328. (வி-ரை.) அடிமேல் உற வணங்கி - அவரது திருவடியின்மேல் தமது தலைபொருந்தும்படி கீழே வீழ்ந்து வணங்கி. தலை உற என்க. முன்னர்த் தலை நிமிர்ந்து நின்ற ஆணவத் தன்மை வணக்கத்தால் அடங்கித் தொக்கு நின்றதாதலின் தலை என்ற எழுவாயினையும் தொகையாக வைத்தார். அகங்காரத்தினால் தலை நிமிர்ந்து நின்றவன் நிலையில் தாழ்கின்றான் என்பதும், அவ்வாறன்றிப் பெரியோர் பாலும் இறைவர்பாலும் தலை தாழ்ந்து வணங்கியவன் உயர்கின்றான் என்பதும் பெரியோர் கண்ட உண்மை.

குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் - குலம் - குலத்தின்வந்த முந்தையோர். நல்தவம் - சிவபெருமானை நோக்கிச் செய்யும் வழிபாடு. தவம் பலவற்றுள்ளும் அதுவே குறையாத நற்பயன் தருவதாகும். பயன் அனையீர் - பயனை ஒத்தவர் என்றது அதன் பயனாக எனக்குக் கிடைத்தபேறு. நந்தமது என்று தம்மையும் உளப்படுத்திக் கூறியது அக்குலத்தில் நானு மொருவனாதலின் அப்பயனை இன்று நான் அடைய நின்றேன் என்ற குறிப்பாகும். "முந்தையெம்பெருந் தவத்தினாலென்கோ முனிவ ரிங்கெழுந் தருளியது" (408), "கும்பிட்ட பயன் காண்பார்போல்" (திருஞா - புரா - 1022) என்ற கருத்துக்கள் இங்குவைத்துச சிந்திக்கத் தக்கன. பயன் அனையீர் பயன் பற்றி எழுந்த உவமம்.

சூலைக்கு இடைந்து அடைந்தேன் - சூலையினால் மிகவருந்தி அடைந்தேன்.

இடைதல் - மிக வருந்தி உடைதல். "அழுக்கு மெய்கொடுன் றிருவடி யடைந்தேன்" (திருவொற்றியூர் - தக்தேசி - 1), "இவன் மற்றென்னடி யானென