பக்கம் எண் :


76திருத்தொண்டர் புராணம்

 

விலக்குஞ், சிந்தையால் வந்துன் றிருவடி யடைந்தேன்" (திருப்புன்கூர் மேற்படி 1), "அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி யதனை யர்ச்சித் தார்பெறு மாரருள் கண்டு, திகைப்பொன் றின்றி நின்றிருவடி யடைந்தேன்" (மேற்படி, 6) முதலிய ஆளுடைய நம்பிகள் தேவாரங்களும், அவற்றைப் பின்பற்றி "வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும், அஞ்சியுனை யடைந்தேனையா பராபரமே" என்ற தாயுமானார் பாடலும் உட்கொண்ட கருத்துக்கள் ஈண்டுச் சிந்திக்கத்தக்கன.

இந்த உடல் - இனி மயங்காது உய்ந்து - கரையேறும் நெறி - சூலை உடலைப் பற்றியதாயினும் அதன் காரணம் மதிமயங்கி அவநெறியிற் புக்குழன்றமையே யாகும் என்று உணர்கின்றேனாதலின் நோயின் மூலமாகிய மதிமயக்கத்தினைப் போக்கும் வகையால் நான் உய்திபெற்று ஈடேறும் வழி என்றதாம். கரை ஏறுதல் - குறிப்புருவகம்.

உரைத்து அருளும் - சொல்லி அருள்செய்தல் வேண்டும். சூலைக்கு இடைந்து அடைந்தேன் - நெறிஉரைத்தருளும் - உம்முடைய கருணையின் பயனாகச் சூலை வந்தது; அதனாலன்றோ உம்மை வந்தடைந்தேன்; அச்சூலையினின்று மட்டுமேயன்றி அதற்குக் காரணமாகிய மதிமயக்கத்தினின்றும் வெளியேறும் நெறியினைச், சூலை பெறுவதற்குக் காரணமாகிய, தேவரீரே உரைத்து அருள் புரியவேண்டும் என்ற குறிப்பும் காண்க.

என உரைத்து - விழுந்து அயரும் என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க.

இடைந்துடைந்தேன் - என்பதும் பாடம்.

67

1329. (வி-ரை.) நோக்கி - அருட்கண்ணாற் பார்க்கும் தீக்கையாகிய சாட்சுஷீ என்னும் பார்வைத் தீக்கையினைச் செய்து என்றபடி.

ஆளுடைய............கைதொழுது - ஆளுடைய தம்பெருமான் - தம்மையும் அவரையும் ஆட்கொண்டருளிய - ஆளாக உடைய - தமது பெருமானாகிய திருவீரட்டானேசுவரர். தம் - உளப்பாட்டுப் பன்மை. முன்பாட்டில் நந்தமது என்று நாயனார் கூறியதற்கேற்ப இவ்வாறு எண்ணியதாகும்.

அருள் நினைந்து - அவர்க்குச் சூலை மடுத்தாண்டு தம்மிடம் அடைவித்த கருணைத்திறத்தினை எண்ணி, நினைத்து - மனத்தாலும், கைதொழுது - மெய்யாலும் செய்த வணக்கம் கூறப்பட்டது. உள்ளும் புறம்பும் ஒற்றித்துச் செய்த வணக்கம். "ஒன்றியிருந்து நினைமின்கள்.........சென்று தொழுமின்கள்" (கோயிற் றிருவித்தம்) என்பது நமது நாயனார் திருவாக்கு.

தம்பெருமான் அருள் நினைந்து - தமக்கும் தம்பியார்க்கும் செய்த அருள் 1313-ல் உரைத்தபடி தமது வேண்டுதலுக்கிரங்கி "உன்னுடைய மனக்கவலை ஒழி நீ" என்ற தொடங்கித் தமக்குச் செய்த அருளினையும், பண்டுபுரி நற்றவத்து வழுவினாரேனும் அவர்க்கிரங்கிச் சூலை தந்து தம்மிடம் ஈர்த்துத் தம்பியார்க்குச் செய்த அருளினையும் எண்ணியெண்ணி எனத் தம் என்ற உளப்பாட்டுப் பன்மையை விளக்கிக் கொள்க. "அத்தா வுன்னடியேனை யன்பா லார்த்தா யருட்கண்ணிற் றீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்,...... பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தா யன்றே, யித்தனையு மெம்பரமோ? வைய! வையோ! வெம்பெருமான் றிருக்கருணை யிருந்த வாறே" (பொதுத்தாண்டகம்) என்ற நாயனாரது திருவாக்கு ஈண்டுப் பொருந்தக் கண்டுகொள்ளத் தக்கது. கைதொழுதல் - அருள்செய்தமைக்காக வந்தித்தல். 1331-ல் "பேரருணினைந்து" என்பது வேறு. ஆண்டுக் காண்க.

கோள் இல் பரசமய நெறி - கோள் - நல்ல குறிக்கோள். கொள்கை. கொள் - கொள்ளுதல் என்றது கோள் என நின்றது. முதனிலை நீண்டுவந்த தொழிற்பெயர். "கோளில் பொறியில்" (குறள்); உட்கொள், மாறுகோள் முதலிய வழக்குக்கள் காண்க. சிவனை எண்ணாத பரசமயங்கள் கொள்கையில்லாதனவென்க.