பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்787

 

முற்சேர்க்கை - 2

மூன்றாம் பகுதி - இரண்டாம் பாகத்தின் முன்னுரை

இவ்வெளியீட்டில் இதற்கு முன் மூன்று முறை முன்னுரை எழுத நேர்ந்தது. இப்பகுதி, முதற்பாகம் முன்னுரையில் அதுவரை நிகழ்ந்த வரலாறுகள் குறிக்கப்பட்டன. அதனை எழுதியபின் இப்போது இரண்டு ஆண்டுகளும் நான்கு மாதங்களும் கழிந்தன. அதனுள் 1 ஆண்டுகளாகக் காகிதம் ஒரு சிறிதும் பெற வழியின்றி அச்சுவேலைமுற்றும் நின்றுபட்டிருந்தது; ஆதலின் இந்த இரண்டாம் பாகம் வெளிவர மிக மிகத் தாமதமாயிற்று; இதனை அச்சு உருவத்தில் நிறைவேறக் கண்டு களிப்போமா? இதனுள் புராண முதற் காண்டமாவது நிறைவேறி வெளிவருதல் காண்போமா? என்று எண்ணமிட்டிருந்த என் கருத்தை இவ்வளவிலேனும் முற்றுவித்தருளியது சிவபிரான் திருவருளாம்.

2. பொருளடக்கம்,

இதனுள் 22 குலச்சிறை நாயனார் புராணம் முதல் 27 நமிநந்தியடிகள் நாயனார் புராணம் வரை 6 புராணங்களின் மூலமும் உரையும் வெளிவருதலால் இதனுடன் திருநின்ற சருக்கம் முற்றுப்பெறுகின்றது; புராணம், முதற் காண்டமும் நிறைவாகின்றது. காரைக்காலம்மையார் அருணூல்கள் நான்கனுள் "அம்மை மூத்த திருப்பதிகங்கள்" என்னும் திருவாலங்காட்டுத் திருப்பதிகங்களிரண்டற்கும் ஏனைத் தேவாரத் திருப்பதிகங்களுக்குப் போலப் பதிகக் குறிப்பும் திருப்பாட்டுக் குறிப்புக்களும் தரப்பட்டன. அவரது அற்புதத் திருவந்தாதிக்கும் திருவிரட்டை மணிமாலைக்கும் முழுதுக்கும் உரை எழுதி அவர் திருப்பாதங்களிற் பணிசெய்ய வேண்டுமென்ற அவாவினால் அவைகட்கு உரையும் விசேடக் குறிப்புக்களும் எழுதி அவர் புராணத்தில் பிற்சேர்க்கையாகச் சேர்த்துள்ளேன். திரு வந்தாதியைப் பற்றிய சில குறிப்புக்களும் இறுதியிற் றந்துள்ளேன்.

3. படங்கள்

குலச்சிறை நாயனார் புராணத்துக்குரிய மணமேற்குடித் திருக்கோயில் முதலிய உருவங்கள் கிடைக்கவில்லை. ஆதலின் மதுரையில் உள்ள அவரது திருவுருவம் மட்டில் ஆளுடைய பிள்ளையார் - நின்ற சீர்நெடுமாறர் - அவர்தம் தேவியார் திருவுருவங்களுடன் சேர்த்து ஒரே படமாகப் பொறித்துள்ளேன். திருமணமேற்குடிப் படங்கள் கிடைப்பின் பின்னர்ப் பிள்ளையார் புராணத்தில் உரிய இடத்தில் வெளியிட எண்ணியுள்ளேன். இந்த மதுரைப் படம் எடுத்துதவியவர் என் மாப்பிள்ளையும் மதுரைச் சில்லா பஞ்சாயத்து ஆபீசரும் ஆகிய திரு, T. S. மீனாட்சிசுந்தர முதலியார், B. A. அவர்கள். பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணப் படங்களை அத்தலத்துக்குச் சென்று எடுத்து உதவியும், அத்தல யாத்திரைப் படம் எழுதி உதவியும் உபகரித்தவர் என் உற்ற உறவினரும் சேக்கிழார் குடித்தோன்றலுமாகிய திரு.