வர்கள் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரவாதீனம் 24-ஆவது பட்டத்திலெழுந்தருளியிருந்த மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக பரமாசாரிய சுவாமிகளாவர். அப்பர் சுவாமிகள் புராணம் போலவே திருஞானசம்பந்த நாயனார் புராண முற்றும் வெளிவருவதிலும் மேலும் இவ்வுரை வெளியீட்டிலும் பெரிதும் கருத்துச் செலுத்தி அடியேனை ஊக்கப்படுத்தி வந்தருளினார்கள் இவர்களும் இப்பகுதி இரண்டாம் பாகம் வெளிவருமுன் சமாதியெய்தி யருளினார்கள். இவர்களது பிரிவுபற்றிய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 6. வரும் பகுதிக்குத் தோற்றுவாயும் நன்றியும் இனி வரும் lV - V பகுதிகளில் திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடங்கி நிறைவாக்கி வெளியிடத் திருவருட்டுணை கொண்டு எண்ணியுள்ளேன். திருநாவுக்கரசு நாயனார் புராணத்தைப் போலவே இதனைத் தனியாகத் தாமே ஏற்று வெளியிட முன்வரும் அன்பர்களைக் காணேன். இப்புராணத்தை, சீகாழிப் பன்னிரு பெயர்களால் பன்னிரு தொகுதிகளாக்கி வெளியிட நினைக்கிறேன். அவற்றுள் திருஞானப் பாலுண்டருளிய வரலாறுள்ள முதற் றொகுதியைத் தருமபுர ஆதீனம் 25-ஆவது பட்டம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் தமது ஆதினத் தனிப் பதிப்பாக வெளியிட மனமுவந்து கட்டளையிட் டருளியுள்ளார்கள். ஏனைப் பகுதிகளுக்காகச் சீகாழிப்பெருநிலக் கிழவர்களான சைவத் திருவாளர்கள் திரு. S. சுப்பராய முதலியார் அவர்கள் ரூ. 300-ம் திரு. S. சதாசிவ முதலியார் அவர்கள் ரூ. 250ம், திரு. S. சீனிவாச முதலியார் அவர்கள் ரூ. 200-ம். திரு. S. திருவேங்கடம் பிள்ளை அவர்கள் ரூ. 200-ம், அன்புடன் உதவியுள்ளார்கள். இவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி உரித்தாகுக. மேல்வரும் தொகுதிகள் எவ்வித இடையூறுமின்றி விரைவில் வெளிவரத் திருவருள் துணை செய்வதாக.
சேக்கிழார் நிலையம் | கோயம்புத்தூர் | C. K. சுப்பிரமணிய முதலியார் | 23-3-1946 | பதிப்பாசிரியர் |
|