திருநீறு கொடுத்தார் - திருநீறணிதல், தீக்குளித்தல் (பஸ்மஸ்நானம் - ஆக்கினேய ஸ்நானம் என்பது ஆகமம்) என்றதன்பாற்பட்டு, உடற்றூய்மையும் உயிர்த்தூய்மையும் செய்வதாதலின் அதனைக் கொடுத்தார். திருநீற்றுத் திருப்பதிகம் பார்க்க. சைவ சமயம் புகுவித்தலாகிய சமய தீக்கையிலும் மந்திரங்களுடன் கூடிய திருநீற்றை மாணவகனை அணிவித்துப் பின்னர் ஐந்தெழுத்தை உபதேசிக்கும்படி விதிக்கும் சிவாகம விதியும் காண்க. திருநீறும் ஐந்தெழுத்தும் தருமசேனரைச் சமணசமயத் தொடக்கினின்றும் தூய்மைப்படுத்திச் சைவம் புகுவதற்குத் துணைசெய்யும் சாதனமாயின என்பதாம். பரசமயத்தினின்றும் சைவத்தின் உண்மை உணர்ந்து, உண்மையாகவும் உறுதியாகவும் சைவம்புக இவ்வாறு தூய ஆசாரியராற் றூய்மை செய்யப்படுதல் வேண்டுமென்பது, பரசமயத்திற் புகுந்து மீண்டும் சைவசமயம் புகுவார்க்குத் திருநீற்றை ஐந்தெழுத்தோதிக் கொடுத்தலே அமையும்; வேறு சடங்கொன்றும் வேண்டா என இவ்விடத்து நுட்பங்கண்டு கூறும் புதிய ஆராய்ச்சயாளருமுண்டு. "அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வம்" என்று இறைவர் (1313) அருளிய சூலைநோயாற் செய்த சடங்கு துன்பியற்றுங் கழுவாயாகும் என்க. இதுபற்றிக் கிருச்சிர சாந்திராயண முதலிய சடங்குகளினும், சிவாகமங்களில் பிராயச்சித்த படலங்களில் சொல்லிய சடங்குகளினும் வகுத்தவையும் காண்க. திருநீறு ஐந்தெழுத்தோதிக் கொடுத்தது முன்கூறிய சடங்கினை நிறைவேற்றும் வகையாற் செய்யப்பட்ட குருதீக்கை என்க. 66 1332. | திருவாளன் றிருநீறு திலகவதி யாரளிப்பப் "பெருவாழ்வு வந்த"தெனப் பெருந்தகையார் பணிந்தேற்றங் குருவார வணிந்துதமக் குற்றவிடத் துய்யுநெறி தருவாராய்த் தம்முன்பு வந்தார்பின் றாம்வந்தார். |
67 (இ-ள்.) வெளிப்படை. திருவாளனுடைய திருநீற்றைத் திலகவதியார் கொடுக்க, "எனக்குப் பெருவாழ்வு வந்தது" என்று கொண்டு பெருந்தகையாராகிய நாயனார் பணிந்து அதனை ஏற்றுக்கொண்டு, அங்குத் தமது திருமேனி பொருந்த நிறைய அணிந்துகொண்டு, தமக்குத் தீமை உற்ற இடத்தில் உய்யும் வழி தருவாராகித் தம் முன்வந்த அவர்பின்பு தாம் வந்தனர். (வி-ரை.) திருவாளன் - முத்தித்திருவை ஆள்பவன். திரு - இறைவரது தன்மை. ஐசுவரியம் எனப்படும். ‘சர்வைசுவரிய சம்பன்னன்' என்று வேதம் சிவனையே துதிக்கின்றது. ஈசுவரன் என்ற சொல் பிற தெய்வங்களையன்றிக் காரண இடுகுறியாகச் சிவனையே குறிக்க வழங்குவதும் காண்க. பெருவாழ்வு.......அணிந்து - பெரியோர் திருநீறு தரும்போது அதனை மனம்மொழி மெய்களால், வணங்கி ஏற்று அணிந்துகொள்ளும் முறை உணர்த்தப்பட்டது காண்க. நீறு வாங்குதல், போற்றுதல், அணிதல் பற்றிய விதிகள் இந்நாளில் கையாளப்படாமல் அவமதிக்கப்படுதல் வருந்தத்தக்கது. திருநீறு பெறும் அன்பர்கள் அவ்விதிகளை அறிந்து பின்பற்றி ஒழுகுதல் நலந்தரும். நீறு பெறும்போது இதனால் நமக்குப் பெருவாழ்வு வந்தது என்றது மனமாரத் துதித்துப் பணிந்து இரண்டு கையாலும் ஏற்க வேண்டும். "ஈது நன்னெறிக் கேதுவென் றிருகையேற் றணிந்து" (வாத - உப - பட - 25) என்ற திருவிளையாடற் புராணமும் காண்க. அவ்வாறு ஏற்ற அதனை உடம்பிற் பொருந்த விதிப்படி அணிந்துகொண்டு பணிதல் வேண்டும். திருநீற்றினைச் சிறிதும் கீழே சிந்தலாகாது. நெற்றியிலணியும்போது நீறு கீழ்ச்சிந்தாதபடி நிமிர்ந்து கொண்டு அணி |