ஈர நன்மொழி - ஈரம் - என்றது பண்பும், நன் என்றது பயனும் குறித்தன. எய்த பொருந்த. பொருந்துதல்; காலத்துக்கும் - இடத்துக்கும் - அடியார்க்கும் - தமக்கும் பொருந்துதலாம். இசைத்தல் - கூட்டுதல் என்றலுமாம். குலச்சிறையார் இசைத்துளார் என வினைப்பெயர் பயனிலை. எழுவாய் முற்பாட்டினின்றும் வருவிக்க. இவ்வாறே மேல்வரும் பாட்டுக்களினும் கொள்க. 3 1698. | குறியி னான்கு குலத்தின் ராயினும் நெறியி னக்குல நீங்கின ராயினும் அறிவு சங்கரற் கன்ப ரெனப்பெறித் செறிவு றப்பணிந் தேத்திய செய்கையார். |
4 (இ-ள்.) (அவர்), குறியின்....ஆயினும் - குறிக்கொண்ட நான்கு குலத்தவர்களா யிருப்பினும்; நெறியின்....ஆயினும் - நெறிப்படி அந்தக் குலங்களினின்றும் நீங்கினவர்களாயிருப்பினும்; அறிவு...எனப் பெறில் சங்கரனிடத்திலே தம் அறிவு நிலைபெற்ற அன்பர்களாவார் என்று அறியப்பட்டால்; செறிவுற...செய்கையார் - மனம் செறியும்படி கூடிப் பணிந்து நுகரும் செய்கையினையடையார்; (வி - ரை.) குறியின் நான்கு குலம் - நான்கு குலமாவன அந்தணர் - அரசர் வணிகர் - வேளாளர் என்பன. குறியின் என்பது, அக்குலமும் "(முன்னை) வினை பக்குவ மாங்கரறும் சூக்கும கன்மமாய்ப், புத்தி தத்துவம் பற்றுக்கோடாக, மாயையிற்கிடந்து, சாதி ஆயுதப்போகமென்னு மூன்றற்கு மேதுவாய், முறையே சனகம் தாரகம் போக்கியமென்று மூவகைத்தாய்" நிற்குமென்ப (சிவஞானபோதம் 2 "நெல்லிற்குமி" என்ற வெண்பாவின் கீழ்ச் சிவஞானமுனிவர் சிற்றுரைபார்க்க) வாதலின் அந்தக் குறியின் வழி உயிர்கள் வந்து பிறக்கும் குலம் என்க. குறி வினை விளைவாகிய குறி. நான்கு குலம் என்று பெரும்பான்மைச் சிறப்புப்பற்றிக் கூறினாரேனும் ஏனைய வேடர் - பரதவர் முதலிய குலங்களையும் உடன்கொள்க. நான்கு குலம் - வடவர் மதம்பற்றிப் பிறவாறு முரைப்ப. நெறியின் அக்குலம் நீங்கினர் - ஆயினும் - என்றது "குலமீலராக" என்ற தேவாரப் பகுதியைத் தெரித்துரைப்பதாகும். அக்குலம் என்றது அந்த "நான்கு குல" த்தினின்றும் எனப்படும்; படவே நீங்கினர் என்பது "ஓங்கிய நாற்குலத் தொவ்வாப் புணர்விற் றம்மி னுயாந்தனா மிழிந்தனவுமான சாதி"களை (1180) யுடையாரைக் குறிக்கும். இழிந்த சாதியராயினும் "இலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால்" பணிவர் என்க. ஆகமங்களினும் அநுலோபம் பிரதிலோமம் எனச் சாதிபேதங்கூறுவதும் காண்க. இழிந்த சாதியாராயினும் அடியாரை வழிபடல் வேண்டுமென்ற கொள்கையை வற்புறுத்துவதே "குலமிலராக" என்ற தேவாரப் பகுதியின் கருத்து. "மறைசிலம் படியார் மிக்கசீ ரடியார்கள் யாரெனினும்", "அன்பரென்பதொர் தன்மையால், நேரவந்தவர் யாவராயினும்" என்ற இடங்களில் வரும் உம்மையால் இழி குலத்தவராயினும் என்று பொருள் தருதலும் காண்க. "புலையரே யெனிலு மீசன் பொலன்கழ லடியிற் புந்தி, நிலையரேலவர்க்குப் பூசை நிகழ்த்துனெறியே" என்பது ஆகம விதியுமாம். குலம் இலராக - என்ற தேவாரத்திற்கு ஆசிரியர் நெறியின் அக்குலம் நீங்கின என்று பொருள் விரித்துக்காட்டியருளினர். குலம் என்பது மக்கட்குப் பலவழியிலும் பிறவியினால் இன்றியமையாது கூடிப்பற்றுவதொன்று என்பதனைத்தேவாரத் |