தினுள் நாடவர் நாடறிகின்ற என்று அறிவிக்கப்பட்டதும், அவ்வாறு வந்து பற்றினும் அது நெறி வழியே நீங்கவும் உள்ளது என்று புராணத்தினுள் அறிவிக்கப்பட்டதும் காண்க. குலத்தினராயினும் - குலநீங்கினராயினும் அன்பரெனப் பெறில் என்றதனால் குலம் என்பதனால் அன்புநெறி தடைப்படாது என்பதறிவிக்கப்பட்டது. அறிவு - அறிவினால்; அறிவை சங்கரற்கு அன்பில் வைத்த அதனால். எனப்பெறில் - பெறுவதன் அருமை குறித்தது. பெற்றபோது - கண்டபோது - கண்டவிடத்து. செறிவுற - மனத்தாலும் இடத்தாலும் நெருங்கிப் பொருந்த. செறிவு - அன்பின் வழிபாட்டின் மிகுதி. பணித்து ஏந்திய செய்கை - பணிதல் - மனத்தாலும், ஏத்துதல் வாக்கினாலும், செய்கை - உடலாலும் நிகழ்வன. 442-ல் உரைத்தவையும் பிறவும் இங்கு நினைவு கூர்க. 4 1699. | உலகர் கொள்ளு நலத்தின ராயினும் அலகில் தீமைய ராயினு மம்புலி இலகு செஞ்சடை யார்க்கடி யாரெனிற் றலமு றப்பணிந் தேத்துந் தகைமையார். |
5 (இ-ள்.) (அவர்) உலகர்...ஆயினும் - உலக நெறியில் மக்கள் ஆமென்று கொள்கின்ற நலங்களை யுடையவர்களாயினும்; அலகில்....ஆயினும் - அவ்வாறு உலகர் அன்றென்கின்ற தீமைகள் அளவின்றி உடையவர்களாயினும், அம்பலி....அடியாரெனில் - பிறை விளங்கும் சிவந்த சடையினையுடைய சிவபெருமானின் அடியார்களாயினால்; தலமுற...தகைமையார் - நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கிப் போற்றுந் தன்மையினை யுடையவர்; (வி-ரை.) உலகர் கொள்ளும் நலம் - உலகநிலை பற்றிய பசுதர்மங்களாகிய அறவொழுக்கம் இவை பகூ பாச சம்பந்தமானவை. இவை வேறு; பதி தர்மங்களாகிய நலங்கள் வேறு. உயிர் இறைவனையும் பற்றும்; உலகத்தையும் பற்றிக்கிடக்கும்; உலகததைப்பற்றிய நிலையில் அதற்கு விதித்த நலங்கள் பசு தர்மங்களாம். இறைவனைப்பற்றிய நிலையின் வேண்டப்படுவன அவனையே பற்றிய அன்பு நிலைக்களமாகிய தருமங்கள். இவை பதி தர்மங்கள் எனப்பட்டு இறைவனிடத்தும் அடியாரிடத்தும் செய்யப்படுவன. உலகம்பற்றிய நலங்கள் இவற்றுக்குச் சம்பந்தப்படா. உயிர்க்கொலை உலகநிலையில் தீமை எனப்பட்டுப் பாவப்பலன் தந்து நரகில் வீழ்க்கும். ஆயின் அது இறைவனைப் பற்றியபோது உயர்ந்த பதி்தர்மமெனப்பட்டுச், செய்தாரையும் செய்யப்பட்ட உயிர்களையும் முத்தப் பலன் தந்து உயர்த்தும், தந்தையைத் தடிந்த சண்டீசர் "அரனார்மகனாநாயனார்"; அவராற் றடியப்ட்ட தந்தையும்" "சிவலோக மெய்தப்பெற்றான்." கண்ணப்ப நாயனார் - வேட்டையிற் செய்த உயிர்க்கொலைகள், பாவமாக மல் "ஒளி நின்று கொன்றருளி"ய (791) அருளிப்பாடு என்று போற்றப்பட்டன. இயற்பகை நாயனாரும், கோட்டலி நாயனாரும் சிவன் பணிக்கு இடையூறு விளைத்த சுற்றத்தார்களைக் கொன்ற நிகழ்ச்சி கொலைப் பயன் தராது அவ்வவரது நன்மைக் கேது வாயின் வரலாறுகளும் ஈண்டுக் கருதத்தக்கன. "ஏனைய சுற்றத் தாரும் வானிடையின்பம் பெற்றார்' (468); சிந்த வாள கொடுதுணித்தார் தீயவினைப் பவர் துணிப்பார்" (கோட்புலி நாயனார் புராணம் - 9). மண்ணைக் கல்லிற் பிராணி. |