ளார் (1697) - செய்கையார் (1698) - தகைமையார் (1699) - நலத்தினார் (1700) - பண்பினார்(1700) என்ற ஒழுக்கம். ஒழுக்கத்தினார் - முன்னர், வாழமை - தகைமை - நலம் - பண்பு என்று பலவும் குணத்தன்மைகளாற் பண்பு கூறிய ஆசிரியர், அக்குலநலங்களுக்கேற்ற ஒழுக்கத்தினாலும் விளங்கினார் குலச்சிறையார் என்று வரலாறும் கூறினாராயிற்று. மந்திரியாயினார் என்றும், அடியார்களைக் கண்டாற் குணங்கொடு பணிவார் என்றும், கோவணம் பூதி சாதனங் கண்டாற் றொழுதெழுவார் என்றும், வரலாறும் கூறும் முகத்தால், தேவாரத்தினுள் ஆளுடைய பிள்ளையார் அருளியதனை யேபற்றி ஆசிரியர் அவ்வச செயல்களின் அடிப்படையான அன்பின் பண்புபற்றி முன்னர்க் கூறினார். இங்கு, இன்ன நல் ஒழுக்கத்தினார் என்று செயல்பற்றிக் கூறினார். செயல்கள் மேற்கண்டவாறு தேவாரத்தினுள் விரிக்கப்பட்டமையானும், வரலாறுகள்அளுடைய பிள்ளையார் புராணத்துள் விரிக்க வேண்டியிருத்தலானும் ஆசிரியர் குறிப்பிற் கூறிப்போந்த திறமும் தேவாரச் சான்றினையே உட்கொண்டு புராணம் வகுத்த திறமும் காண்க. ஒழுக்கத்தின் விரிவு ஆளுடையபிள்ளையார் புராணத்துட் கண்டுகொள்க. ஈறுஇல்சீர்த் தென்னவன் நெடுமாறன் ‘வெள்ளை நீறு அணியும் கொற்றவன்' என்பது தேவாரம். அத்தேவாரம் அருளியபோது நீறணியானாயினும், பின்னர் அணிய நின்றவன் என்று "அணியும் கொற்றவன்" என்ற மெய்த்திருவாக்காகிய வேதம் கூறிய சொற்பிழையாது, அதனும் நீறணிந்து சிறந்து ஓங்கி நெடுமாறனு மாயினான். இக்கருத்துட்கொண்டு" ஈறிலசீர்" என்றும், "நெடுமாறன்" என்றும் ஆசிரியர் விரித்தனர். பிள்ளையார் தேவாரம் அருளியபோது "நீறு அணியும்" என எதிர்காலச் சிறப்புப்பற்றியே பேச நின்றனர் அரசர்; ஆனால் ஆசிரியர் காலத்து அச்சிறப்பும், ஏனைய சிறப்புக்களும் முன்னரே முற்றுப்பேறடைந்தமையால் ஆசிரியர் இவ்வாறு போற்றினர். சீர்திகழ் மன்னர் மந்திரிகட்கு மேலாகியார் - "மந்திரியாய்" என்ற தேவாரக் கருத்தை விளக்கியவாறு. "ஆய" என்ற தேவாரத்துக்கு மேலாகிய என்று உரை வகுத்தனர் ஆசிரியர். அரசனுக்கும் அவன்கீழ் வாழும் உயிர்களுக்கும் உலக நிலை பற்றிய நலங்களையே நாடிச்செய்த ஏனைய மந்திரிகள்போலல்லாது, குலச்சிறையார் அவ்விருதிறத்தார்கட்கும் உடலையும் உயிரையும் பற்றிய உயர் நிலையாகிய மேம்பாடுக ளிரண்டனையும் ஒருங்கு தேடித்தருதலே கருத்தாய் நின்றவராதலின், இவரே மந்திரி சபாய்வர்; ஏனையர் அத்துணைச் சிறந்தவராகார் என்பார் மந்திரிகட்கு மேலாகியார் என்று பொருள் விரித்தருளினர். ஆசிரியர், தாமும் அவ்வாறே அநபாயச் சோழரின் மந்திரிகளுள் மேலாகிய மந்திரியாராய் நின்று அவரைச் சமணநூற் சார்பினின்றும் நீங்கிச், சைவநூற் சார்புபடுத்தி, உலகுக்கு இப்புராணமாகிய உயர்ந்த ஞானோபதேச காரணராகி நின்ற தன்மை இங்குக் கருதத்தக்கது. மந்திரிகட்கு மேலாகி மன்னுவார் - என்று கூட்டி உரைத்துக் கொள்க. அமைச்சின் றிரம்பற்றித் தெய்வப்புலவர் திருக்குரளுட் கூறிய குணநலங்களெல்லாம் ஒருங்கே வைத்து ஈண்டுக் கண்டுகொள்க. ஒன்னலார் - பொருந்தார் - பகைவர்; உலக நிலையின் அரசனது ஆணைக்குட்படாது அவனது செங்கோன்மைக்கு இடையூறு விளைத்த பகைவரைக் குறித்து நின்றது. உயர்நிலையாகிய உயிர்பற்றிய நிலையிற் பகைவராய் நின்ற சமணர்களைச் செற்ற திறத்தை மேல் 1704 ல் உரைப்பார் உறுதிக்கண் - கோலும் குடியும் உறுதிப் பொருள்பெற்று வாழும் நெறியினிடத்து. உறுதிப் பொருளாவனஅறம் பொருளின்பம் வீடென்பன. "மக்கட்கு |