பக்கம் எண் :


குலச்சிறை நாயனார் புராணம்805

 

1704.

புனை யத்தரு கந்தாபொய் நீக்கவுந்,
தென்னர் நாடு திருநீறு போற்றவு,
மன்னு காழியர் வள்ளலார் பொன்னடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்;

10

(இ-ள்.) (அவர்) புன்னயத்து...நீக்கவும் - நன்மையாற் குறைவுடைய சமணர்களுடைய பொய்ம்மைகளை நீக்கவும்; தென்னர்...போற்றவும் பாண்டியநாடு திருநீற்று நெறியினைப் போற்றியிடவும்; மன்னு....சிறப்பினார் - பொருந்திய சீகாழியினார்களின் வள்ளலாராகிய ஆளுடைய பிள்ளையாருடைய பொன்னார்ந்த திருவடிகளைத் தலையிற் சூடடி மகிழ்ந்த சிறப்பினையுடையவர்.

(வி-ரை.) பொய் நீக்கம் - போற்றவும் - சேர்த்தி என்க. நீக்க - போற்ற - நீக்குதற் பொருட்டும், போற்றுதற் பொருட்டும் எனக் காரியப் பொருளில் வந்த வினையெச்சங்கள் சேர்த்தி - என்ற வினையெச்சத்துடன் முடிந்தன.

புன்னயத்து - நன்மையாற் குறைவுடைய என்க. நயம் - நன்மை - நற்பயன் - நீதி இன்பம் என்பவற்றை யுணர்த்தும், "புன்மை யேபுரி யமணர்" (1344), "கொலையும் பொய்ம்மையு மிலமென்று கொடுந்தொழில் புரிவோர்" (1346), "வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்" (1947) என்பன முதலியவையும், திருநாவுக்கரசு நாயனாரிடத்தும், ஆளுடைய பிள்ளையாரிடத்தும், தண்டியடிகணாயனார், நமிநந்தியடிக ணாயனார் முதலியோர்களிடத்தும் அமணர் செய்த தீமைகள் முதலியனவும் இங்கு நினைவு கூர்தற்பாலன.

தென்னர் நாடு திருநீறு போற்ற - "எல்லா அரனாமமே சூழ்க" என்றபடி எல்லா நாடுகளும் திருநீறு போற்றி யுய்யவேண்டுமாயினும், தென்னன் நாடு போல அரசனும் வழுவிச் சைவத்துக்கு இடையூறு விளைக்கமையானும், மங்கையார்க்கரசியாரும் குலச்சிறையாரும் என்ற "இருவர்தம் பாங்கு மன்றிச் சைவம் அங்கு எய்தாமையாகிய" (திருஞான - புரா - 603) பெருந்துன்பநிலை பெறாமையானும், திருநீறு போற்றுதலை மிகுதியும் வேண்டிய காரணம் பற்றித் தென்னர்நாடு போற்ற என்றனர். "செய்வகை யிடையே தப்புந் தென்னவன் பாண்டிநாடு" (திருஞான - புரா - 599).

காழிபர் பொன்னடி சென்னி சேர்த்தி மகிழ்த்த சிறப்பு அவர்பாற் பரிசனங்களை விடுத்து விண்ணப்பித்தமையாலும், (திருஞான - புரா - 607), பின்னர்ப் பிள்ளை எழுந்தருளிய பின் நிகழ்த்திய செயல்களாலும் அறியப்படும் சிறப்பு. அளுடைய பிள்ளையார் புராணத்துள் விரித்துரைக்கப்படும் தகுதிபற்றி இங்குச் சுருக்கி இவ்வாறு சுட்டின வளவி லமைந்தார். இந்நாயனார் குருவருளால் முத்தியடைந்தவர் என்ற குறிப்புமாம்.

பொய் நீக்கவும் - நீறு போற்றவும் - பொன்னடி சென்னி சேர்த்திய - பாசத்தை நீக்கி விடுதலும், சிவத்தைப் பெறுதலுமாகிய வீடுபேறும் சைவப்பயனா மென்பதும், அதற்குச் சாதனம் குருவின் உபகாரமேயாம் என்பதும், ஆகிய ஞான சாத்திரங்களிற் கண்ட உண்மைகள் இத்திருப்பாட்டிற் குறிப்பினாலுணர்த்தப்பட்ட திறம் காண்க.

நீங்கவும் - என்ற பாடம் பிழை. நீப்பவும் - என்பதும் பாடம்.

10

1705.

வாகிற் றோள்ற வமணரை வன்கழுத்
தீது நீங்கிட வேற்றுவித் தாரதிறம்
யாது போற்றினேன்?, மேலினி யேத்துகேன்
வேத நீதி மிழலைக் குறும்பர் தான்.

11