1708. (இ-ள்.) தொண்டர்...அமுதூட்டி - தொண்டர் பலபேரும் வந்து கூடி உண்ண உண்ணத்தொலைய தவாறு அமுதூட்டியும்; கொண்டு...கொடுத்து - எடுத்துக்கொண்டு போகும்படி பெருஞ் செல்வங்களை அள்ளிக் கொடுத்தும்; குறைந்தடைவார் - தம்மைச் சிறியராக வைத்து நடந்துகொள்வார்; வண்டு மருவும்...பொற்பினார் - வண்டுகள் மொய்த்த கூந்தலையுடைய உமையம்மையாருக்கு நாயகருடைய சிவந்த பாததாமரைகளைத் தமது நெஞ்சத் தாமரையில் வைத்துப் போற்றும் நியதியுடையவர். 3 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1707. (வி-ரை.) அதிபர் - சிற்றரசர் என்ற பொருளில் வந்தது. குறும்பனார் - குறும்பர் என்னும் சிற்றரசர் மரபினர். இஃது அவரது பெயரன்று. அவரது இயற்பெயர் விளங்கவில்லை. ஆன - ஆயின. ஞான நூல்களுள் விதிக்கலான. "ஆசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட் டவர்கரும முன்கரும மாகச் செய்து கூசிமொழிந் தருண் ஞானக் குறியி னின்று கும்பிட்டுக் கூத்தாடித் தட்டமிட்டுத் திரியே" (சித்தி - 12 - 2) என்றவிடத்துக் குறித்தவை. ஆன அவர்கள் விரும்புவன ஆன; வேண்டுவன ஆன என்ற குறிப்புமாம். செய்பணிகள் - "கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்" (தேவா - தாண்) என்ற எண்ணத்துடன் செய்யும் பணிவிடை. எதிர் ஏற்றலாவது - எதிர்கொண்டு வரவேற்றல் முன்னம் - என்ற இரண்டனுள் முன்னையது காலத்தையும், பின்னையது குறிப்பையும் உணர்த்தி நின்றன. "முந்தனார் திருவுள்ளத் தெழுமுன்ன மிக்கறிந்திட்டு" (திருவானைக்காப் புராணம்). முதிரும் அறிவின் பயன் முதிர்தலாவது ஏனையவாற்றான் மிக்கிருத்தல். அறிவின் பயன் - அறிவு பெற்றதனாலாய பயன். "படைத்தநிதிப் பயன்கொள்வார்", "பெற்ற நீடு பயன்கொள்வார்" முதலியவை காண்க. இவ்வாறு அடியார்க்கான செய்பணிகள் குறிப்பறிந்து செய்யாதாரும் அறிவு பெற்றிருப்பினும், அறிவினாலாய பயன் பெறாதொழிகுவரே யாவர் என்பது. வண்ணம் எதிர் ஏற்று - உவந்து செய்வாராய் - என்பனவும் பாடங்கள். 2 1708. (வி-ரை.) உண்ணத் தொலையா அமுது ஊட்டி - பலரும் வந்து ஈண்டி உண்ணவும் மானாத நிலைமையில் அமுதினைப் பெருக உண்பித்து, "அன்பரானவ ரளவிலாருள மகிழவே, நாளு நாளு நிறைந்து வந்து நுகர்ந்த தன்மை" (444) என்றதும், பிறவும் காண்க. கொண்டு செல்ல - எடுத்துக் கைக்கொண்டு போகும்படி. முகந்து மிகுதியாக அள்ளி. குறைந்தடைதல் - அடியார் முன்பு தம்மை மிகச் சிறியராய் வைத்து ஒழுகுதல். "நாதனடி யராதம்மை நயப்பாட்டு வழிபாட்டால், மேதகையா ரவர்முன்பு மிகச் சிறிய ராயடைந்தார்" (சிறுத் - புரா - 15) என்றவிடத்து இத்தன்மை விரிக்கப்பட்டது. குறைந்தடைந்தார் தொலையா அமுதூட்டியும் நிதியம் முகந்து கொடுத்தும் மனம் அமைவுபட்டு நிரம்புதல் பெறாது, மேலும் குறைவின்றிச் செல்லலானார் என்ற குறிப்பும் தருவதாம். புண்டரீகம் அகமலரில் வைத்துப் போற்றும் பொற்பு - நெஞ்சத் தாமரை மலரில் நியதியாய் பூசிக்கும் தன்மை. "அகனமர்ந்த வுன்பினரா யறுபகை செய் றைம்புலனு மடக்கி ஞானப், புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் |