பக்கம் எண் :


பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம்815

 

கியதும், பரமர். "அவர்க்கெதிர் காணக் காட்டும் படியெதிர்தோன்றி"யதும், அவ்வாறு தோன்றிய திருவடிகளை நம்பிகள் பரவி வணங்கியதும், திருத்தொண்டை உணர இறைவர் அவர்க்கு நல்கி, "இவரை நீ அடைவாய்" என்றதும், அதுகேட்ட நம்பிகள் "நான் ஏதந்தீர் நெறியைப் பெற்றேன்" என்று வணங்கிப் போற்ற, "இவரை நீ பாடு" என்று நாதர் அருள அதற்கு "நான் யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன்?" என்று நம்பிகள் வேண்டியதும், "தில்லை வாழந்தணக்த மடியார்க்கு மடியேன்" என்று தொடங்கிப் பாடு என்று இறைவர் முதல் எடுத்துக் கொடுத்து மறைந்தருள, நம்பிகள் திருக்கூட்டத்தைத் தூரத்தே பலமுறையால் தொழுது அருகு சென்று எய்தி நின்று திருத்தொண்டத் தொகை பாடி வணங்கியதும், தடுத்தாட்கொண்ட புராணத்தினுள் உரைக்கப்பட்டன; 335 முதல் 348 வரை திருப்பாட்டுக்கள் பார்க்க. இவையெல்லாம் குறிக்க விதியால் வணங்கிப் பாடிய என்ற நயம் காண்க.

உலகறிய - அறிந்து ஓதி வணங்கி உலகு உய்யும்பொருட்டு. "அல்லறீர்ந்துலகுய்ய" (345)

மெய்யடியார் சித்த நிலவும் - மெய்யடியார்கள் எப்போதும் மனத்துள் வைத்துப் போற்றுகின்ற. இதனால் மெய் அடிமைத் திறத்தில் நின்று உய்யும் கருத்துடையோர் இதனை மனத்துள் எஞ்ஞான்றும் மறவாது வைத்துப் போற்றுதல் வேண்டுமென்று வலியுறுத்திக் காட்டியவாறுமாம்.

பாடிய நம்பியைப் பணிந்து - பாடியதனால் அதுவே பணிதற்குக் காரணமாயிற்று என்ற குறிப்புப்பெற "பாடிய நம்பி" என உடம்பொடுபுணர்த்தி ஓதினார்.

நித்தள் அருள் பெற்றவர் - அடியார்கள். திருத்தொண்டத் தொகையிற் றுதிக்கப் பெற்றவர்.

பணிந்து நினைக்கும் நியமம் என்க. நம்பியைப் பணிதலும் அடியார் பாத நினைத்தலுமாகிய இரண்டினையுமே நியமமாகக் கைக்கொள்ளுதல். அடியார்க்கான பணிசெய்து அமுதூட்டி நிதி கொடுத்துக் குறைந்தடைதலும், சிவன்றாள் சிந்தை மறைவாது வைத்துப் போற்றலும் செய்த நாயனார் நம்பியைப் பணிந்து அவரை நினைக்கும் நியமத்திற் சிறந்தனர்.

முன்னர் அடியார்க்கான (1707) என்றவிடத்துக் கூறப்பட்ட அடியார்கள் நாயனாரால் நேரே கண்டு வழிபடப் பட்டவர்கள். மெய்யடியார் - என்றது திருத்தொண்டத் தொகையை விடாது சிந்திக்கும் எல்லா அடியார்களையுமாம்.

நித்தள் அருள் பெற்று நம்பியைப் பணிந்ததனால் நித்தன் அருள் பெற்றனர்; அதனால் அவர் பாதங்களை நியமமாக நினைக்கும் பேறு பெற்றனர் என்க. நம்பியை நினைக்கும் நியமம் சிவனருளால் வாய்க்கப் பெறுவதொன்றாம் என்பது, முன் உரைகாரர்கள் இதற்கு வெவ்வேறாக உரைத்தனர். "மேவரிய பெருந்தவம் யான் முன்பு விளைத்தன வென்னோ" (கோட்புலி - புரா - 13) என்ற கருத்துக் காண்க. திருத்தொண்டத்தொகை யடியார்களுள் நாயனாரும் ஒருவராவாரன்றோ? எனின், அது கழறிற்றறிவார் நாயனாரைக் கூறியதுபோலே அருள்வழி நிற்க, வருங்காலமு முணர்த்தும் அருளிப் பாட்டின் நிலையாகும் என்க.

தலைநின்றார் - தலைநிற்றல் - சிறத்தல், தலை - ஏழுனுருபாகக் கொள்ளினுமிழுக்கில்லை.

4

1710.

 மையார் தடங்கட் பரவையார் மணவா ளன்றன் மலர்க்கழல்கள்
 கையாற் றொழுது வாய்வாழ்த்தி மனத்தா னினைக்குங் கடப்பாட்டிற்
"செய்யாள் கோனு நான்முகனு மறியாச் செம்பொற் றாளிணைக்கீழ்
 உய்வான் சேர வுற்றநெறி யிதுவே"யென்றன் பினிலுய்த்தார்.

5