(இ-ள்.) மையார் - கடப்பாட்டில் - மை பொருந்திய பெரிய கண்களையுடைய பரவையரின் மணவாளராகிய ஆளுடைய நம்பிகளுடைய மலர்போன்ற பாதங்களைக் கைகளாற் றொழுதும், வாயினால் வாழ்த்தியும், மனத்தினால் நினைத்தும் இவ்வாறு முக்கரணங்களாலும் வழிபட்டு வரும் கடமைப் பாட்டினுள் நின்று; "செய்யான் தோனும் .....இதுவே" என்று - திருமகள் கணவனையே திருமாலும் பிரம தேவனும் அறியாத சிவந்த பொன்போன்ற திருவமகளின்கீழ் உய்யும்படி சேர்வதற்குப் பொருந்திய நெறிநா னிதுவேயாகும் என்று உட்கொண்டு; அன்பினில் உய்த்தார் - அன்பினால் செலுத்தி வருவாராயினார். (வி-ரை.) பரவையார் மணவாளன் அளுடைய நம்பிகள்., முதன்மையாற் பரவையாரைக் கூறினானேனும் இனம்பற்றிச் சங்கிலியாரையும் உடன்கொள்க. கையால்...மனத்தால் நினைக்கும் - முக்கரணங்களாலும் வழிபட்டு முறைகூறியபடி. தொழுது வாழ்த்தி, நினைக்கும் என்றாலே அவ்வவக்கரணங்களைக் குறிக்குமாயினும், அவை இதற்கென்றெ தரப்பட்டன என்று வற்புறுத்த, அவ்வக் கருவிகளையும் உடன் கூறினார். வாய் - ஆல் என்ற மூன்றனுருபு தொக்கது. ஆல் - கருவிப் பொருளில் வந்த மூன்றனுருபுகள், மனங்கலத்தலே வழிபாட்டின் அடிப்படை என்ற சிறப்புப்பற்றி இறுதியில் வைத்தார். தொழுதலும் வாழ்த்தலும் பயிற்சி வயத்தால் முன்னிகழ்வன என்ற குறிப்புமாம். கடப்பாட்டில் - அவ்வழிபாட்டினைத் தவறாது செய்யும் கடமையாகக் கொண்டு செய்தனர் என்பது. கடப்பாட்டினுள் நின்று (அதனை) அன்பினில் உய்த்தார் என்று முடிக்க. செய்யவள் - திருமகள். "செய்வாள்"(குறள்). பரவையார் மணவாளன் கழல் செய்யாள் கோனறியாக் கழலினை அடைவிக்கும் என்ற நயமும், பரவையாரின் சிறப்பினைக் குறிப்பிற் காட்டிப் போந்த திறமும் காண்க. உய்வான் - உய்தி பெறும்படி; உய்யும்பொருட்டு. வானீற்று வினையெச்சம். உற்ற நெறி - நேர்பட்ட நெறி. உறுதல் - பொருந்துதல். அஃதாவது வழுவாது கொண்டு செலுத்துந் தன்மையுடன் கூடுதல். உய்த்தல் - மேற்கொண்டு செலுத்துதல். முதலில் அடியார் பணி செய்தலே அறிவின் பயன் என்று கொண்டனர்; அதனை அடுத்துச் சிவன்றாள்களை அகமலரில் வைத்துப் போற்றினர்; அதன்மேல் நம்பியைப் பணிந்து அவர் பாதம் நியமமாக நினைத்தனர்; அதனையே சிவன்றாள் சேர உற்ற நெறி என்று அன்புடன் உய்த்தனர், என்று இவ்வாறு இவற்றை ஒன்றற்கொன்று தொடர்பாக நாயனாரது அன்பு நெறி வளர வந்த சாதனங்களாகக் கண்டுகொள்க. இவற்றின் பயனாகப்பெற்ற பேற்றினை மேல்வரும் பாட்டிற் கூறுதல் காண்க. 5 1711. | நாளு நம்பி யாரூரர் நாம நவின்ற நலத்தாலே ஆளும் படியா லணியாதி சித்தி யான வணைந்தகற்பின் மூளுங் காத லுடன்பெருக முதலவர் நாமத தஞ்செழுத்துங் கேளும் பொருளு முணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார். |
6 (இ-ள்.) நாளும்.....நலத்தாலே - நாள்தோறும் நம்பி ஆரூரருடைய திருநாமங்களை நவின்றதாகிய அந்நலங் காரணமாக; ஆளும்படியால்...அணைந்ததற்பின் தாம் கைக்கொண்டு ஏவல் கொள்ளும் தன்மையால் அணிமா முதலிய என்வகைச் சித்திகளுங் கைவரப் பெற்று, அதன்பின்; மூளும் காதல் உடன் பெருக மூள்கின்ற அன்பு மேன்மேற் பெருகுதலால்; முதல்வர்...முழுமுதற் பெரு |