பக்கம் எண் :


பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம்817

 

மானாகிய சிவபெருமானது திருநாமமாகிய திருவைந்தெழுத்துமே சுற்றமும் பொருளும் உணர்வுமாகும் என்ற தன்மை; வாய்ப்பக் கெழுமினார் - கைவரப் பெற்ற நிலையைக் கூடினார்.

(வி-ரை.) நாளும் - நாள்தோறும்; தோறும் என்பது தொக்கு நின்றது.

நாமம் நவின்ற தலத்தாலே - நவின்ற - சொன்ன. "நாக்கைக் கொண்டானாம நவிறறியார்" (தேவா). வாய் வாழ்த்தி" (1710). நவின்றதனாலாயநலங் காரணமாக நம்பியாரூராது நாம நவிலுதலே நலங்கொடுப்பது என்பதாம். பரமாசாரியர்களுடைய திருநாமங்களே, சொல்வாரைக் கரக்குற மந்திரங்களாமென்பது "ஞானசம்பந்த ரென்னு நாம மந்திரமுஞ் சொல்ல" (திருஞான - புரா - 121) என்பதனாற் காண்க. ஞானசம்பந்தர் - நாவுக்கரசர் - நம்பியாரூரர் - மணிவாசகர் இத்திருநாமங்கள் யாவும் பெரு மந்திரமாகிய திருவைந்தெழுத்தாம். இம்மந்திரோபதேசம் பெற்ற கூன் பாண்டியரும், உருவெண்ணிய அப்பூதியார், இக்குறும்ப நாயனார் முதலாயினாரும் பெருவாழ்வு பெற்றனர். ஆசாரிய பஞ்சாக்கரம் என்று இவை பேசப்பெறும். இவை ஒற்றுநீக்கி ஐந்தெழுத்தாதல் காண்க. புள்ளிகள் அவதிடப் பெறாமை யாப்பிலக்கணத்துட் காண்க.

நம்பி ஆரூரர் நாமம் - "நம்பியாரூரர்" என்ற திருநாமம் சிவனாமமேயாதலானும், ஒற்று நீக்கி கருகி ஐந்தெழுத்தாமாதலானும், குருவின்பாற் பத்தி விளைவித்தலானும், பிறவாற்றானும் நலஞ்செய்யும் சிறந்த சாதனமாம். ஆதலின் அதுவே அணிமாதி எண்வகைச் சித்திகளையும் எளிதிற் கைவரச் செய்ததுமன்றி, முத்திதரும் திருவைந்தெழுத்தினிடத்து உறுதியான பற்று வாய்க்கவும் செய்தது என்க. "நம்மி என்ற பதிகம்" பார்க்க. "ஆரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த", "ஆடிப்பேராரூரன்" (தேவா).

ஆளும்படியால் ஆளுதல், கையாளுதல், வேண்டியவாறு ஏவல் கொள்ளுதல். படியால் வகையினால் - தன்மைபெற, இதற்கு இவ்வாறன்றி எல்லாஞ் செய்யக் கூடுந் தன்மையால் என்றுரைத்தனர் முன் உரைகாரர்கள். "அவர், தம்மை நிழல் போலடைந்துலகர்க் கனையார் பெருமை தனையுணர்த்தும்" என்றதிருவிளையாடற் புராணங் காண்க.

அணிமாதி சித்தியாவன - அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற எட்டுவகைச் சித்திகள்.

அரவுஞ் சிறிய வுயிர்தொறுந்தான் பரம காட்டை யணுவாய்ச்சென்
றுறையுஞ் சிறுமை யணிமாவா; முவரி ஞான முதன்மேலென்
றறையுஞ் சிவாந்த மாறாறு முள்ளும் புரனு மகலாதே
நிறையும் பெருமைதனை யன்றோ மகிமா வென்னு நிரம்பியநூல்;

(23)

இலகு மேரு பாரம்போ லிருக்கும் யோகி தனையெடுத்தா
லிலகு வான தூலமென விருப்ப திலகி மாவாகு;
மிலகு வான பரவணுப்போ லிருக்கும் யோகிதனை யெடுத்தா
லிலகுமேருப் பாரமென விருப்ப தன்றோ கரிமாவாம்;

(24)

பிலத்தி லிருந்தோ னயனுவுதிற் புகுதன் மீண்டும் பிலமடைதல்
பலத்தின் மிகுந்த பிராத்தியதாம்; பரகா யத்தி னண்ணுதல்வான்
புலத்தி னியங்க லிச்சித்த போக மனைத்துந் தானிருக்குந்
தலத்தி னினைந்த படிவருதல் பிராகா மிப்மாந் தவக்கொடியீர்;

(25)

விண்ணி லிரவி தன்னுடம்பின் வெயிலாலனைத்தும் விளங்குதல்போன்
மண்ணி லுளவாம் பொருள்பலவுங் கால மூன்றும் வானத்தின்
கண்ணி லுளவாம் பொருளுந்தன் காயத் தொளியா லிருந்தறித
லெண்ணி லிதுவு மறையொருசார் பிராகர மியமென் றியம்புமால்;

(26)