ஈச னெனமுத் தொழிலுந்தன் னிச்சை வழிசெய் தெழுபுரவித் தேசன் முதற்கோள் பணிகேட்பத் திகழ்வ தீசத் துவமாகும்; பூச லவுணர் புள்விலங்கு பூத மணிதர் முதலுலகும் வாச வாதி யெண்மருந்தன் வசமாக் கொள்கை வசித்துவமாம்; (27) (திருவிளை - புரா - அடடமாசித்தி உபதேசித்த படலம்) என்பன காண்க. திருமூலர் திருமந்திரம் மூன்றாந் தந்திரமும் (92 - 141) பார்க்க. 1அணிமா ஆதி என்பது அணிமாதி என நின்றது வடமொழிச் சந்தி. ஆளும்படியால்...அணைந்ததற்பின் - சித்திகள் தமது ஏவல் கேட்கத்தக்க நிலை கைவரப் பெற்றனர். ஏனையோராயின் அவற்றையே முடிபாகக்கொண்டு வீழ்ந்தொழிவார்; நாயனார், மேலும் உள்ள உயர்நிலைக்கு உதவும் கருவிகளாகவே அவற்றைக் கைக்கொண்டு ஒழுகினார் என்ற குறிப்புப்பட "அணைந்ததற்பின் - அஞ்செழுத்தும்....பரிசு வாய்ப்பக் கெழுமினார்" என்றார். நம்பி நாம் நவின்ற நலத்தால்வரும் பயன்களுள், ஏனையோர் மிகப் பெரியனவாகக் கருதும் இவை, தாழ்ந்த நிலையில் பிறிதொரு மேன்மைக்குக் கருவியாக வைத்து ஆளத் தக்கவையேயாம் என்பதும் குறிப்பு. மூளும் காதல் உடன்பெருக - சித்திகளையணைந்த நிலையுடனே மேனிலை பெறும் ஆசை மேன்மேற் பெருக வளர்ந்தது. மேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு - கேள் - சுற்றம் - உடற்சார்பு; பொருள் - உலகப் பொருட்சார்பு: உணர்வு உயிரச் சார்பு. பிறப்பின் உடலோடு பொருந்தி நிகழ்தலின் கேள் முதலிலும், பொருள் உடலின் வேறாய் அதனை அடுத்து நிகழ்தலின் அதன் பின்னும், உணர்வு இல்லாதவழி அவையிரண்டும் பயனில்லா தொழிலன் ஆதலின் அதனை முடிபிலும் வைத்தோதினார். அஞ்செழுத்தும்....பரிசு - திருவைந்தெழுத்தே இம்மூன்று சார்புகளும் ஆகும் தன்மையாவது; அஃதொன்றே உயிருக்!கு எம்மையுலும் பயன் தந்து உடன்நிலவும் மெய்த்தன்மை. கெழுமுதல் - பொருந்துதல். நிறைதல் முதிர்தல் என்றலுமாம். கெழுமினார் என்றதற்கு உச்சரித்தார் - செப்பித்தார் என்ற உரைகள் பொருந்தா. இந்தச் சித்திகள் நாயனாரது சிவசரித விளைவுக்குத் துணையாதல் பின்னர்க் காணப்படுமாதலின் அவற்றை ஈண்டு எடுத்துக் கூறினார். அம்மட்டேயன்றி அடியார்கள் இவற்றைப் பொருளாக எண்ணார் என்பது "எம்மை யுணர்ந்த யோகியார்கள் இவற்றைப் பொருளாக எண்ணார் என்பது "எம்மை யுணர்ந்த யோகியார்களிவற்றை விரும்பார்" (திருவிளை - புரா - அட்டமா - 28) என்றதனாலும்முணர்ந்"திண்டிறற் சித்தர்களே கடைக்கூழை சென்மின்கள்" (திருப்படையெழுச்சி - 2) என்ற திருவாசகமும் இக்குறிப்புத் தருதல் காண்க. முதல்வர் நாமத்து அஞ்செலுத்தும் - திருவைந்தெழுத்தாகிய சீபஞ்சரக்கு மந்திரம். அது சிவனது திருநாமமேயாம் என்பது "ஆலை படுகரும்பின் சாறு போல வண்ணிக்கு மைந்ழெுத்தி னாமத் தான்காண்" (தாண்); "நந்தி நாம நமசிவாய" (பிள் - தேவா) முதலிய திருவாக்குக்களாலறிக. __________ 1அணிமா - பெரிது அணுப்போலாதல்; மகிமா - (மகத்) - சிறிது மிக பெரிதாதல்; இலகிமா - (இலகு) மிகக் கனத்தது மிக இலகுவாதல்; கரிமா - மிகை இலகுவரனது மிகக் கனத்தாதல்; பிராப்தி - வேண்டுவனவடைதல்; பிராகாயம் விரும்பியாங்கு நுகர்தல்; ஈசத்துவம் - ஆட்சியுளனாதல்; வசித்துவம் - எல்லா தன் வசமாக்குவல்லனாதல். முதல் மூன்றும் உடம்பாலும், ஏனையமான முதல் கருவிகளானும் பெறுவன. |