(இ-ள்.) அஞ்சைக் களத்து...மொழிய - (வன்றொண்டர்) திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளிய விடமுண்ட அமுத உருவாகிய சிவபெருமானைத் துதித்து வருபவர் செஞ்சொற் றமிழ்மாலையாகிய தேவாரத் திருப்பதிகம் பாடியருள; தேவர் பெருமான் அருளாலே - தேவ தேவராகிய சிவனது திருவருளினாலே; மஞ்சிற்றிகழும்...தெளிப - மேகசைளான் விளங்கும் வடகயிலாய மலையில் சேரும் வாழ்வினை மனத்திற் றெளிந்து கொண்டாராக; இங்கு...குறும்பனார் - அச்செய்தியை இங்கு நின்றே நீடு மிழலைக் குறும்பனார் உணர்ந்தனர். (வி-ரை.) அணைவுறுவார் - வன்றொண்டர் என்ற எழுவாய் முன் பாட்டிலிருந்து வருவிக்கப்பட்டது. நஞ்சுண்ட அமுதைப் பரவி - முரண் தொடை. நஞ்சுண்டும் சாவாதிருந்ததற்குக் காரணம் தாமே அமுத உருவமாயினவர் என்பதாம் என்றது குறிப்பு. அமுதம் - முத்தி. "அமுதம் பெறுதண்டி" (தேவா). முத்தி தருபவர் என்ற குறிப்புடன் பரவி. பரவி - அணைவுறுவார் - எய்தவரும் வாழ்வு - பதிகம்பாடி முத்தி விண்ணப்பஞ் செய்து, அதன் காரணமாகத், திருவாயிலை அணையும்போதே, இறைவரது திருவாணையும் வெள்ளையானையும் வரப்பெற்றுக், கயிலை எய்தப்பெறும் வாழ்வு. இது நம்பிகளது அருட்சரிதத்தில் இவ்வுலக நிகழ்ச்சிகளுள் இறுதியாவது : அவையின் முன்பு ஓலைகாட்டி ஆண்டது முதல் நிகழ்ச்சியாம் ; எனவே நம்பிகளது அருள் வாழ்வின் நிகழ்ச்சிகள் யாவும் இங்குத் தொடக்கமும் இறுதியும் காட்டிச் சுருக்கி நினைவூட்டிய குறிப்புமாம். செஞ்சொல் தமிழ் மாலைகள் "தலைக்குத் தலைமாலை" என்று தொடங்கும் திருவஞ்சைக்களப் பதிகப் பாட்டுக்கள். பதிகத்தின் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வோர் மாலை எனப்பட்டது. "சந்தம்மிகு தண்டமிழ் மாலைகள் கொண்டு" (நம்பி - அஞ்சை - இந்தளம் - 10) என்ற இப்பதிகத்தை நினைவு கூர்வித்தபடி. "மலை பத்தும் வல்லார்" (பிள்ளை - பூந்தராய் - இந்தளம் - 11) முதலியவையும் காண்க. "எடுத்த தமிழ்மாலை" (வெள் - சரு - 29) என இக்கருத்தே பற்றிப் பின்னர்க் கூறுவதும், இப்பதிகம் "தலைக்குத் தலைமாலை" என்று தொடங்குவதும் குறிக்க. மொழிய - மொழிந்ததனாலே; காரணப் பொருளில் வந்த வினையெச்சம். அத்திருப்பதிகத்தினுள் வெறுத்தேன் மனைவாழ்க்கையை விட்டடியேன்" என்று வரும் முத்தி விண்ணப்பங் குறித்தது. மொழிய - (அதனால்) - அருளாலே. கயிலை எய்த வரும் - என்று கூட்டி முடிக்க. தேவர் பெருமான் அருளாலே - "இந்திரன் மால்பிரம னெழிலார் மிகு தேவரெல்லாம், வந்தெதிர் கொள்ள வென்னை மத்த யானை யருள்புரிந்"தா ரென்றாராதலின், தேவரையெல்லாம் ஏவல்கொள்ளும் தலைவர் என்ற குறிப்புப்பெறத் தேவர் பெருமான் என்றார். அருளாலே - "ஒன்று சிந்தை நம் மூரணை யும்பர் வெள்ளானையினுடனேற்றிச், சென்றுகொண் டிங்கு வாருமென் றயன்முதற் றேவருக்கருள் செய்தான்" (வெள் - சரு - 31) என்றது. மஞ்சில் திகழும் - எப்போதும் மேக மண்டலத்துள்ளே விளங்கும் என்றது உயர்ச்சி குறித்தது. "கருவாகி யோடுமுகிலே போற்றி" (3); "நீராவி யான நிழலே போற்றி", "காராகி நின்ற முகிலே" (5) என்று ஆளுடைய அரசுகள் திருக்கயிலைப் போற்றித் திருத்தாண்டகத்தினுள் இதனைக் கண்டு போற்றுதல் காண்க. மஞ்சில் - இல் ஒப்புப்பொருளில் வந்த ஐந்தனுருபாகக் கொண்டு வெண்முகில் போலத் திகழ்கின்ற என்றலுமாம் எய்த வரும் வாழ்வு நெஞ்சில் தெளிய - எய்தும்படி வருகின்ற வாழ்வினை நம்பிகளது திருவுள்ளத்தினுள் தெளிந்து கொள்ளவே. இந்நிகழ்ச்சி கொடுங்கோ |