ளூரில் கழறிற்றிவாரது அரண்மனையினுள் எழுந்தருளியிருந்த நம்பிகள் தாம் கயிலைக்கு எழுந்தருளுதற்கு முதனாளில் திருமனத்துட் கொண்ட ருளியது. முதனாளில் மனத்துட் கண்ட கருத்தேபற்றிப் பின்னாளில் தமிழ்மாலைகள் மொழிந்தனர் என்பதாம். இதனை ஆசிரியர் இங்குக் கூறினாராதலின் பின்னர் விரித்திலர். இங்கு - திருப்பெருமிழலையில் தாம் இருந்த இடத் திருந்தபடியே. இங்கு உணர்ந்தார் - நம்பிகள் கொடுங்கோளூரில் எண்ணி முடித்த தெளிவினை இங்கு நாயனார் உணர வந்தவாறென்னையோ? எனின், அது யோகக் காட்சியின் இயல்பினால் என்க. இவ் யோகக் காட்சியின் தன்மையைச் "சமாதியான மலங்கள் வாட்டிப், பொருந்திய தேச கால வியல்பகல் பொருள் ளெல்லாம், இருந்துணர்கின்ற ஞானம் யோகாற் காண்ட லாமே" (சித்தி - அளவை) என்றதனாலறிக. நாயனார் அடைந்த அணிமாதி சித்திகள் இத்தகைய ஆற்றலை விளைவிக்க வல்லன. அன்றியும், "நாளு நம்பியாரூரர் நாம நவின்று" அவரையே மனத்தினுட் பிரியாது வைத்த வழிபட்டு அவர் திறமே தமது திறமாக நின்ற அன்பில் நாயனர்க்கு அவரது மனநிகழ்ச்சி இங்கு புலிப்படுத்தலும்ஆம் உலக நிலையிலும ஒத்த இருவர்க்கு நெடுந்தூரம் பிரிந்த நாளிலும் இவ்வாறு ஒத்த மன நிகழ்ச்சிகள் உண்டாதல் கண்கூடாகக் காண்போமாதலின், உலகிறந்த நிலையில் நின்று நம்பிகளையே அழுந்தி எண்ணியிருந்த நாயனார்க்கு, அவர் எண்ணி மனந்தெளிந்து செய்கை புலப்படுதல் வியப்பன்றென்று விடுக்க. "புணர்ச்சி பழகுதல் வேண்டா"(குறள்) என்ற விடத்துக், கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும்போல உணர்ச்சி யொப்பின் அதுவேஉட னுயிர்நீக்கும் நட்புத்தரும் என்று பரிமேலழகர் உரைத்ததுவும், இதனையே சுட்டித் தொல்காப்பியம் கற்பியல் 52ஆம் சூத்திரத்தின்கீழ் நச்சினார்க்கினியர் உரைத்ததுவும் இங்குக் கருதத்தக்கன. நீடும் (மிழலைக் குறும்பனார்) என்ற குறிப்பும் அது. நீடும் - உருவினால் பெருமிழலையின் அளவில் இருப்பினும், கருத்தால் கொடுங்கோளூரினும், நம்பிகளது திருமணத்தி னிகழ்ச்சியுள்ளும் நீடுகின்ற என்க. "தோய்ந்த நீள் சடையார்" (831) என்ற விடத்துரைத்தவை பார்க்க. சீவன்முத்தி நிலைபெற்ற சித்தர்கள் உலகில் மாக்களது உயிரின் நிகழ்ச்சிகளைத் தமது நுண்ணுருவினால் உண்ணிறைந்து அறியுந் திறமுடையார் என்பது "இருந்திரைத் தாளப் பரவைகுழகலத் தெண்ணிலங் கண்ணில்புன் மாக்கள், திருந்துயிர்ப் பருவத் தறிவுறு கருவூர்" என்ற (கோயில் - புறநீர்மை - 11) கருவூர்த்தேவர் திருவிசைப்பாவானும் அறியப்படும் உண்மை. 8 1714. | "மண்ணிற் றிகழுந் திருநாவ லூரில் வந்த வன்றொண்டர் நண்ணற் கரிய திருக்கயிலை நாளை யெய்த, நான்பிரிந்து, கண்ணிற்கரிய மணிகழிய வாழ்வார் போல, வாழே" னென் றெண்ணிச், சிவன்றா ளின்றோசென் றடைவன் யோகத்தா" லென்பார், |
9 1715. | நாலு கரணங் களுமொன்றா நல்ல வறிவு மேற்கொண்டு காலும் பிரம நாடிவழிக் கருத்துச் செலுத்தக், கபாலநடு ஏல வேமுன் பயின்றநெறி யெடுத்த மறைமூ லந்திறப்ப, மூல முதல்வர் திருப்பாத மணைவார் கயிலை முன்னடைந்தார். |
10 1714. (இ-ள்.) மண்ணில்....எய்த - விளங்கும் திருநாவலூரினுள் இம்மண்ணுலகில் வந்தருளிய வன்றொண்டர், பிறரால் எளிதில் அடைதற்கரிய திருக்கயிலையை நாளைச் சென்றடையவும்; கண்ணில்...போல - கண்ணின் கருமணி கழிந்தபின்னும் வாழ்வார்கள்போல; ("நான் பிரிந்து வாழேன்") என்று எண்ணி - |