பக்கம் எண் :


பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம்823

 

தற்கு. சிவன்தாள் அடைதல் என்ற முடிந்த நிலையினையும் வன்றொண்டர் கூட்டம் நேரே வாய்க்கும் நலம் பெறற் பொருட்டு ஒரு சாதனமாகவே நாயனார் விரும்பி முயன்றனரே யன்றிச் சிவனை அடைந்திருக்கும் நிரதிசயானந்தமாகிய அது கருதியன்று என்பது ஈண்டுக் குறிக்கற்பாலதாம். "பரவை கேள்வன் பாத முறக், கயிலைப் பொருப்ப ரடியடைந்த" (1716) என்பது காண்க. "நாளையெய்தும், இன்றே அடியடைவேன்" என்ற திருவந்தாதியும் காண்க.

யோகத்தால் சிவன்தாள் அடைவன் - இதனை மேல்வரும் பாட்டில் விரிப்பார். "பயிலைச் செறிந்த யோகத்தால்" (1116) யோகம் - கூடுதல். ஈண்டுச் சிவயோக முயற்சி குறித்தது. தாம் முயன்ற, பவளவழி யவனுடலிற் றம்முயிரைப் பாய்த்தினார்" (திருமூலர் - புரா - 13).

சென்றடைவன் - சென்றடைதல் - வேற்றிடப் புணர்ச்சி, "சென்றடையாத திருவுடையார்" சிவபெருமான் ஒருவரே. சென்றடையும் திருவெல்லாம் போகநிலைகள்; அவை அத்துவிதக் கலப்பில்லாதன. "வந்து பருகுதலும் சென்று நீங்கலும், இன்றி யொன்றாய் நின்ற வந்நிலையில்....தன்னது, பேரா னந்தப் பெருங்கடல்தனுள், ஆரா வின்ப மளித்து" என்ற இருபாவிருப்ஃதும்(20) "சேர்ந்து துன்னலுந் துன்னுறாமையு மற்று" என்னுந் தணிகைப் புராணமும் (நந்தியுப 124), முதல்வனது சென்றடையாத திருவை உயிர்கள் சென்றடையாமலே "பண்டைப் பரிசே" பெறுவனவா மென்பதை உணர்த்தும். ஆதலின் உயிர்கள் பண்டைப் பரிசே ஒன்றாய் நின்ற நிலையில் முதலவனது திருவாகிய சிவத்துவத்தை எய்துவனவேயாம் என்க. ஈண்டு யோகத்தாற் சென்றடைவன் என்றது இக்கருத்துப் பற்றியது. (ஸ்ரீ மத் முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் அருளிய குறிப்பு). 9

1715. (வி-ரை.) நாலு கரணங்கள் - பத்தி அகங்காரம் மனம் சித்தம் என்பவை. ஒன்றா - ஒன்றாக. சிந்தையாகிய ஒன்றிற்பிட்டு அமைய. "அளப்பருங்காரணங் ணான்குஞ் சிந்தையே யாக" (252) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. கரணங்களும் எளிதின் ஒன்றுதல் அடையாத அவையும் என, உம்மை உயர்வு சிறப்பு. முற்றும்மையுமாம். "அளப்பரும்" (252) என்றதும் இக்கருத்து. நாலுதல் - தொங்குதல் எனக் கொண்டு, முக்குணங்கள் பிரேரிக்கப்புலன்களின் வழியே மாறிநின்று உயிர்களை ஊசலாட்டும் இயல்புடைய என்று பிறவினைப் பொருட் குறிப்புப்படக் கூறலுமாம். "நாலந்தக் கரணமு மொரு நெறியாய்ச் சித்திக்கே யுய்த்திட்டு" (பிள் - தேவா).

நல்ல அறிவு மேற்கொண்டு - சிறந்த அறிவுத் தொழில் மரத்திரையே மேற்கொண்டு. நல்ல அறிவு - புறக்கரண உட்கரணங்களின் தொழில் கலவாத சிறந்த அறிவு.

பிரமநாடி - சுழுமுனைநாடி, காலும் செலுத்த - பிராணவாயுவை உயிர்ப்புச் செலுத்துதலால் : "அங்கணைந்து போய் மேலேறி யலர்மதி மண்டலத்தின், முகமார்க்க வமுதுடல் முட்டத் தேக்கி" (சித்தி. 8 - 21) என்றதும், "மூல வாயுவை யெழுப்பிரு வழியைச், சிக்கெ னும்படி யடைத்தொரு வழியைத் திறந்து தாண்டவச் சிலம்பொலி யுடன்போய்ப், புக்கழுந்தினர்" (திருவாத - புரா -) என்றதும், பிறவும் இங்கு நினைவு கூர்தற்பாலன. காலும் - ஒளிவீசும்; மின்கொடி போன்ற ஒளி. சுழுமுனைநாடி, பிரமரந்திரத்திற் கூடியிருத்தலின் அதனைப் பிரமநாடி என்றார்.

மறைமூலம் கபாலநடுத் திறப்ப என்று கூட்டுக. எடுத்த மறைமூலம் - தக்கவாறு ஏற்ற உபசரிப்பாக எடுத்த பிரணவ மந்திரம்; திருவைந்தெழுத்து. கபாலநடுத் திறத்தல் - இதனை உயிர் செல்லும் வழியாகக் கபாலத்தின் உச்சியில் உள்ள