பக்கம் எண் :


830திருத்தொண்டர் புராணம்

 

விளக்கி நின்றது என்ற திருக்குறளுரை கருதத்தக்கது. "வணிகர்பெருங்குடி" எனப் பின் கூறுவதும் இக்கருத்துட்பட நின்றது.

வாய்மை என்பது இங்கு வாய்மை ஒழுக்கம் குறித்து நின்றது. தருமத்தின் வழியிற் போல வாய்மையினிலும் - என்று இறந்தது தழுவிய எச்ச உம்மை தொக்கது.

ஊனம் - வழுவுதல். வாய்மையினில் ஊனமில் சீர் என்றது வாய்மை திறம்பாமை. மானம் படவரின் வாழாமைபோலவே, வாய்மை நெறியினையும் உயிர்போலக் காத்தனர் என்க. "உயிரையும் வணிகனுக் கொருகாற், சொற்ற மெய்ம்மையும் தூக்கியச் சொல்லையே காக்கப் பெற்ற மேன்மை "(1080) என்ற விடத் துரைத்தவை இங்கு நினைவுகூர்தற்பாலன.

தருமம் - வாய்மை - "தருமத்தைச் செய் - சத்தியத்தைப் பேசு" (தர்மம்சர; சத்யம் வத.) என்று வேதத்தில் விதித்த இரண்டுங் குறித்தபடியாம். இவை விளங்கிய படியை இச்சரிதத்திற் பின்னர்ப் பல விளைவுகளிலும் வைத்துக் கண்டு கொள்க. வற்றுக் மாறாக இந்நாளில் "கறுப்பு வாணிபம்" (Black Market) என்ற பாவப் பேர்பெறும் வாணிக நிலை எங்கும் பரவி மக்களைக் கொல்லாது அலைக்கும் கோரக் காட்சியானது இந்நாளில் "நாகரிக" மக்கட் கூட்டம் எத்தனை அளவு நன்னெறியின் வழுவி வீழ்ந்துள்ளது என்பதை விளக்கும். இக்கால நிலை வருந்தத்தக்கது. கொண்ட கடன்களைக் கொடாமல் மோசம்செய்தோர்சென்று வாழும் நகரங்களுள் ஒன்று என்று இந்நாளில் இத்திருநகருக்கு வந்த பழிப்பெயர் இந்நாள் மாக்களது கீழ் நிலையினை விளக்குவதன்றி வேறன்றென்க. வாய்மையினில் - ஊனமில் - மெய் சொல்லுதலினால் குற்றமற்ற என்றுரைப்பாருமுண்டு.

வணிகர் பெருங்குடி - என்று கூட்டுக. பெருங்குடி என்றது வணிகருள் இப்பர்- கவிப்பர்- பெருங்குடியர்முதலாகப் பகுக்கப்பட்ட பண்டைப் பெரும் பகுதிகளையும் குறிப்பாலுணர்த்தி நின்றது. கூல வாணிகர்முதலாக வியாபரத்தாலும், சேனை வாணிகர்முதலாக உத்தியோகத்தாலும் வரும் வகைகளும் காண்க.

வளை சுமந்துகொண்டு - ஏறிக் - கழிக்கானல் மீசைத் - திரை உலவும் என்க.

கழிக்கானல் - கழிகளினும் அவற்றருகில் உள்ள கானல்களிலும், கடலின் பெரிய அலைகள் சங்குகளைச் சுமந்துகொண்டு கடற்கரையேறி அருகில் உள்ள கழிக்கானலில் சென்று உலவி மீளும் என்க. உலவுதல் - மெல்லச் சென்று மீளுதல்.

உலவு வளம் பெருகு உலவுதலினால் வளம் பெருகுகின்ற. அலைகள், சங்கு பவளம் முதலிய கடல்படு பொருள்களை வாரி மேல் எடுத்துக்கொண்டு கழிக்கானலில் அவற்றை விட்டு மீளுதலால் நெய்தனில மாக்கள் அப்பொருள்களால் வளம் பெற்று வாழ்கின்றார் என்பது. இனிக், கடல்படு பொருள்களை நாட்டில் வாழ்வார்க்குக் கலம் செல்லும் வணிக மாக்கள் கொண்டு கொடுத்துத் தருமத்தின் வழி வாணிபம் செய்தல்போல, அங்குக் கடற்றிரையும் கைம்மாறு கருதாது வாணிபம் செய்கின்றது என்ற குறிப்பும் காண்க. இஃது இயற்கை வளத்தினைச், சரித மயமாகிய தெய்வக் கண்கொண்டு கண்டு காட்டும் ஆசிரியரது தெய்வக் கவிநலங்களுள் ஒன்று. "சேற்றலவன் கருவுயிர்க்க முருகுயிர்க்குஞ் செழுங்கமலம்" (1042) என்ற திருப்பாட்டின்கீழ் உரைத்தவையும் பார்க்க.

வளம்பெருகு - பெருகு - மக்களின் முயற்சியாற் பெருக்குவதன்றித் தம்மியல் பிற் பெருகும்படி என்றபடி.

கொண்டேக - என்பது பாடமாயின், வளை - உலவும் என்று கூட்டி உரைத்துக் கொள்க. வளை - கடல்படு பொருள்களுள் ஒன்று. வளை என்றதனால் இனம்பற்றிப்